மலேசிய மேலவை

மலேசியா கட்டுரை

மேலவை (Senate) அல்லது டேவான் நெகாரா (Dewan Negara, மலாய் மொழியில் தேசியப் பேரவை) என்பது ஈரவைகளைக் கொண்ட மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை ஆகும். மற்றையது டேவான் ராக்யாட் அல்லது கீழவை அல்லது மக்களவை என அழைக்கப்படுகிறது.

மலேசிய மேலவை
Senate
14-ஆவது மக்களவை
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
தலைமை
தலைவர்
துணைத் தலைவர்
முகமட் அலி முகமட், பாரிசான்
அம்னோ
16 டிசம்பர் 2020 முதல்
செயலாளர்
முகமட் சுசாரி அப்துல்லா
22 பெப்ரவரி 2020 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்70 மேலவை உறுப்பினர்கள்
அரசியல் குழுக்கள்
2021

அரசு
     தேமு (55)

செயற்குழுக்கள்
4
  • தேர்வுக் குழு
  • நாடாளுமன்றக் குழு
  • சிறப்புரிமைக் குழு
  • நிலை ஆணைகள் குழு
தேர்தல்கள்
Indirect
  • 26 பேர் அரசியலமைப்புப் பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர், 44 பேர் மன்னரால் நியமிக்கப்படுகின்றனர்.
கூடும் இடம்
மலேசிய நாடாளுமன்ற வளாகம். கோலாலம்பூர், மலேசியா
வலைத்தளம்
www.parlimen.gov.my

70 உறுப்பினர்களைக் கொண்ட மேலவையில், மாநிலம் ஒவ்வொன்றிலும் இருந்தும் இருவராக 26 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களை விட 44 பேர் மன்னரால் நியமிக்கப்படுகின்றனர். இவர்களில் நால்வர் கூட்டாட்சிப் பகுதிகளில் இருந்து தேர்தெடுக்கப்படுகின்றனர்.

இரு அவைகளும் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் கூடுகின்றன. கீழவையான மக்களவையில் சமர்ப்பிக்கப்படும் சட்டமூலங்கள் மேலவையினால் மறு ஆய்வு செய்யப்படுகின்றன. இரண்டு அவைகளாலும் ஏற்றுக் கொள்ளப்படும் சட்டமூலங்கள் மன்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஆனாலும், சட்டமூலம் ஒன்று மேலவையினால் ஏற்றுக் கொள்ளப்படாத பட்சத்தில், அச்சட்டமூலம் ஓராண்டுக்குப் பின்னரே மன்னருக்கு சமர்ப்பிக்கப்படும்.

தற்போதைய நிலை

தொகு

2015 சூலை 29 இன் படி அரசியல் கட்சிகள் வாரியாக மேலவை உறுப்பினர்கள் வருமாறு::[1][2]

கட்சிகள்/கூட்டணி சட்டமன்றங்களினால்
தேர்தெடுக்கப்பட்டோர்
மன்னரால்
நியமிக்கப்பட்டோர்
மொத்த இடங்கள்
தேசிய முன்னணி
(BN):
19 36 55
அம்னோ
(UMNO)
11 20 31
மலேசிய சீனர் சங்கம்
(MCA)
5 5 10
மலேசிய இந்திய காங்கிரசு
(MIC)
0 5 5
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி
(PBB)
2 0 2
மலேசிய மக்கள் இயக்கக் கட்சி
(Gerakan)
0 1 1
தாராண்மைவாத சனநாயகக் கட்சி
(LDP)
0 1 1
ஐக்கிய சபா கட்சி
(PBS)
0 1 1
மக்கள் முற்போக்குக் கட்சி
(PPP)
0 1 1
சரவாக் மக்கள் கட்சி
(PRS)
0 1 1
சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி
(SUPP)
0 1 1
ஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்பு
(UPKO)
1 0 1
ஜனநாயக செயல் கட்சி
(DAP)
2 0 2
மலேசிய இஸ்லாமிய கட்சி
(PAS)
2 0 2
மக்கள் நீதிக் கட்சி
(PKR)
2 0 2
மலேசிய இந்திய முசுலிம் காங்கிரசு
(KIMMA)
0 1 1
மலேசிய இந்திய ஐக்கியக் கட்சி
(MIUP)
0 1 1
சுயேட்சை
(IND)
0 4 4
மேலவை உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கை 25 42 67
வெற்றிடங்கள் 1 2 3
மேலவையின் மொத்த இடங்கள் 26 44 70

மேற்கோள்கள்

தொகு
  1. "Senarai Ahli Dewan Negara" (in Malay). Parliament of Malaysia. Archived from the original on 15 January 2014. பார்க்கப்பட்ட நாள் 15 January 2014.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Statistik Dewan Negara" (in Malay). Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 15 January 2014.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_மேலவை&oldid=4015090" இலிருந்து மீள்விக்கப்பட்டது