மலேசியாவின் மாநிலங்கள் மற்றும் கூட்டாட்சிப் பகுதிகள்

மலேசிய மாநிலங்களை நெகிரி (மலாய்: Negeri) என்றும், கூட்டரசு நிலப்பகுதிகளை (மலாய்: Wilayah Persekutuan) என்றும் அழைக்கிறார்கள்.

மலேசியாவில் பதின்மூன்று மாநிலங்கள், மூன்று கூட்டரசு நிலப்பகுதிகள் உள்ளன. இவற்றுள் தீபகற்ப மலேசியாவில் பதினொரு மாநிலங்களும், இரு கூட்டரசு நிலப்பகுதிகளும் உள்ளன. இவை மேற்கு மலேசியா மாநிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

போர்னியோ தீவில் இருக்கும் சரவாக், சபா மாநிலங்கள், லாபுவான் கூட்டரசு நிலப்பகுதியை, கிழக்கு மலேசியா என்று அழைக்கிறார்கள். மலேசிய மாநிலங்களை நிர்வாகம் செய்யும் பொறுப்புகளை நடுவண் அரசும், மாநில அரசும் பகிந்து கொள்கின்றன. கூட்டரசு நிலப்பகுதிகளை நடுவண் அரசு நேரடியாக நிர்வாகம் செய்கிறது.[1][2]

மலேசியாவின் 13 மாநிலங்கள் வரலாற்று மலாய்ப் பேரரசுகளைச் சார்ந்தவையாகும். இவற்றுள் 9 மாநிலங்கள், மலாய் மாநிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பாரம்பரிய ஆளுநர் எனும் சுல்தான் முதன்மைத் தலைவராக இருக்கிறார். நிருவாகத் தலைவராக முதலமைச்சர் எனும் மந்திரி பெசார் இருக்கிறார்.

ஆளுகை

தொகு

மலேசியாவின் அனைத்து 13 மாநிலங்களும் வரலாற்று மலாய்ப் பேரரசுகளைச் சார்ந்தவையாகும். இவற்றுள் 9 மாநிலங்கள், மலாய் மாநிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பாரம்பரிய ஆளுநர் எனும் சுல்தான் முதன்மைத் தலைவராக இருக்கிறார். நிருவாகத் தலைவராக முதலமைச்சர் எனும் மந்திரி பெசார் (மலாய்: Menteri Besar) இருக்கிறார்.

சொகூர், கெடா, கிளாந்தான், பகாங், பேராக், சிலாங்கூர், திரங்கானு ஆகிய மாநிலங்களை ஆட்சி செய்பவர்களைச் சுல்தான்கள் என்று அழைக்கிறார்கள். தேர்வு மூலம் தெரிவு செய்யப்படும் நெகிரி செம்பிலான் ஆளுநர் யாம் துவான் பெசார் (மலாய்: (Yamtuan Besar) என்று அழைக்கப்படுகிறார். பெருலிசு ஆளுநர் இராசா என்று அழைக்கப்படுகிறார்.

மாட்சிமை தங்கிய பேரரசர்

தொகு

நடுவண் அரசின் மன்னரை மாட்சிமை தங்கிய பேரரசர் (மலாய்: (Yang di-Pertuan Agong) அல்லது யாங் டி பெர்துவான் அகோங் என்று அழைக்கப் படுகிறார். தமிழில் மாமன்னர் என்று அழைக்க வேண்டும்.[சான்று தேவை] மலேசியாவின் ஒன்பது மாநிலங்களில் உள்ள சுல்தான்கள், பெர்லிஸ் ராஜா; யாங் டி பெர்துவா நெகிரி; யாம் துவான் பெசார்களில் ஒருவர் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாமன்னராகத் தேர்வு செய்யப்படுகிறார்.[3] கிளாந்தான் சுல்தான் ஐந்தாம் முகமது 13 திசம்பர் 2017 மலெசியவின் 15-வது மாமன்னராக அரியனை ஏரினார்.

தீபகற்ப மலேசியாவில் இருக்கும் பினாங்கு, மலாக்கா மாநிலங்களும், கிழக்கு மலேசியாவில் இருக்கும் சபா, சரவாக் மாநிலங்களும், பிரித்தானியர்களின் தனிப்பட்ட காலனிகளாக இருந்தவை. ஆகவே, அவற்றின் ஆட்சி செய்யும் தலைவரை கவர்னர் (மலாய்: Yang di-Pertua Negeri) யாங் டி பெர்துவா நெகிரி என்று அழைக்கிறார்கள். அந்த மாநிலங்களின் முதலமைச்சர் மந்திரி பெசார் (மலாய்: Ketua Menteri) என்று அழைக்கப்படுகிறார்.


மாநிலக் கொடி மாநிலம் தலைநகரம் மக்கள் தொகை 2010 பரப்பளவு சதுர கி.மீ. மக்கள் தொகை அடர்த்தி வாகன அட்டை முன்எழுத்து தொலைபேசி எண்கள் முன்குறியீடு மாநிலப் பெயர் சுருக்கம் ஐ.எசு.ஓ.
ISO 3166-2
எப்.ஐ.பி.எசு.
FIPS 10-4
 
கோலாலம்பூர் நடுவண் கூட்டரசு கோலாலம்பூர் 1,627,172 243 6696 W / V 03 KUL MY-14
 
லபுவான் நடுவண் கூட்டரசு விக்டோரியா, லபுவான் 85,272 91 937 L 087 LBN MY-15 MY15
 
புத்திராசெயா நடுவண் கூட்டரசு புத்திராசெயா 67,964 49 1387 Putrajaya / F 03 PJY MY-16
 
சொகூர் சொகூர் பாரு 3,233,434 19,210 168 J 07, 06 (மூவார் & தங்காக்) JHR MY-01 MY01
 
கெடா அலோர் சிடார் 1,890,098 9,500 199 K 04 KDH MY-02 MY02
 
கிளாந்தான் கோத்தா பாரு 1,459,994 15,099 97 D 09 KTN MY-03 MY03
 
மலாக்கா மலாக்கா 788,706 1,664 474 M 06 MLK MY-04 MY04
 
நெகிரி செம்பிலான் சிரம்பான் 997,071 6,686 149 N 06 NSN MY-05 MY05
 
பகாங் குவாந்தான் 1,443,365 36,137 40 C 09, 03 (கெந்திங் மலை), 05 (கேமரன் மலை) PHG MY-06 MY06
 
பேராக் ஈப்போ 2,258,428 21,035 107 A 05 PRK MY-08 MY07
 
பெருலிசு கங்கார் 227,025 821 277 R 04 PLS MY-09 MY08
 
பினாங்கு சார்ச்சு டவுன் 1,520,143 1,048 1451 P 04 PNG MY-07 MY09
 
சபா கோத்தா கினபாலு 3,120,040 73,631 42 S 087-089 SBH MY-12 MY16
 
சரவாக் கூச்சிங் 2,420,009 124,450 19 Q 081-086 SRW MY-13 MY11
 
சிலாங்கூர் சா ஆலாம் 5,411,324 8,104 668 B 03 SGR MY-10 MY12
 
திரங்கானு கோலா திரங்கானு 1,015,776 13,035 78 T 09 TRG MY-11 MY13

மேற்கோள்கள்

தொகு
  1. "Federal Territories and State Governments". Archived from the original on 2011-05-11. பார்க்கப்பட்ட நாள் 2013-03-21.
  2. Wu, Min Aun & Hickling, R. H. (2003). Hickling's Malaysian Public Law, pp. 64–65. Petaling Jaya: Pearson Malaysia. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 983-74-2518-0.
  3. British settlements and crown colonies of Penang and Malacca (both peninsular) and Sabah and Sarawak.

வெளி இணைப்புகள்

தொகு