கங்கார்

கங்கார் (Kangar) என்பது மலேசியாவின் பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2,619.4 ஹெ பரப்பளவு கொண்ட இந்நகரத்தின் மக்கள் தொகை 48,898 ஆகும். தீபகற்ப மலேசியாவின் ஆக வடக்கில் இருக்கும் மிகச் சிறிய நகரம். காங்கோக் (Kangkok) அல்லது (Spizaetus Limnaetu) எனும் கழுகின் பெயரில் இருந்துதான் கங்கார் நகரத்தின் பெயர் உருவானது. இதன் வட பகுதியில் பெர்லிஸ் ஆறு அருகில் அமைந்திருக்கிறது.

பார்க்கக்கூடிய இடங்கள்தொகு

பெர்லிஸ் அரச செயலர் கட்டிடமும் 1930களில் அமைக்கப்பட்ட மணிக்கூண்டுக் கோபுரமும் இங்கு அமைந்துள்ளன. அவற்றை விட இங்குள்ள ஆல்வி மசூதி 1910 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இங்கே பெர்லிஸ் மாநிலத்தின், அரசாங்க அலுவலகங்கள் உள்ளன. இந்த நகரில் இருந்து பத்து கி.மீ. தொலைவில் அரச நகரமான ஆராவ் இருக்கிறது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கார்&oldid=1377451" இருந்து மீள்விக்கப்பட்டது