ஆராவ்

ஆராவ் (Arau) மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள ஓர் அரச நகரம். பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டாரில் இருந்து தென்கிழக்காக 10 கி.மீ. தொலைவில் உள்ளது.

இங்கு பெர்லிஸ் ராஜாவின் அரண்மனையும், அரச பள்ளிவாலும் கட்டப்பட்டுள்ளன. கோலாலம்பூரில் இருந்து தொடர்வண்டி மூலமாக லங்காவித் தீவிற்குச் செல்ல விரும்பும் சுற்றுப்பயணிகள் ஆராவில் இறங்கிய பின்னர் தான், கோலா பெர்லிஸ் செல்கின்றனர். அங்கிருந்து லங்காவி செல்கின்றனர்.

மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது. மாரா தொழில்நுட்பக் கழகம் என்று முன்பு அழைக்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு பலகலைக்கழகத் தகுதியைப் பெற்றது. இப்பல்கலைக்கழகத்தில் 6747 மாணவர்கள் பயில்கின்றனர்.

ஆள்கூறுகள்: 6°26′N 100°16′E / 6.433°N 100.267°E / 6.433; 100.267

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆராவ்&oldid=2690388" இருந்து மீள்விக்கப்பட்டது