கோத்தா பாரு

மலேசியா, கிளாந்தான் மாநிலத்தின் தலைநகரமாகும்

கோத்தா பாரு (மலாய்: Kota Bharu; ஆங்கிலம்: Kota Bharu) மலேசியா, கிளாந்தான் மாநிலத்தின் தலைநகரமாகும். கோத்தா பாரு என்றால் மலாய் மொழியில் புதிய நகரம் அல்லது புதிய கோட்டை என்று பொருள்.[3]

கோத்தா பாரு
Kota Bharu
كوت بهارو
கிளாந்தான்
மேலிருந்து, இடமிருந்து வலமாக:
சுல்தான் இஸ்மாயில் பெட்ரா வளைவு, கிளாந்தான் அருங்காட்சியகம், கம்போங் லாவுட் மசூதி, சகார் அரண்மனை, கிளந்தான் இசுலாமிய அருங்காட்சியகம், துவான் பாடாங் கடிகாரக் கோபுரம், சித்தி கத்தீஜா சந்தை

கொடி
அடைபெயர்(கள்): இசுலாமிய நகரம்
கோத்தா பாரு is located in மலேசியா
கோத்தா பாரு
      கோத்தா பாரு       மலேசியா
ஆள்கூறுகள்: 6°8′N 102°15′E / 6.133°N 102.250°E / 6.133; 102.250
நாடு மலேசியா
மாநிலம் கிளாந்தான்
மாவட்டம் கோத்தா பாரு மாவட்டம்
முதலில் குடியேறியது1844
நகராட்சி நிலை1 சனவரி 1979
அரசு
 • தலைவர்சைனல் அபிதீன் பின் துவான் யூசுப் (செப்டம்பர் 2018 முதல்)
பரப்பளவு
 • மொத்தம்115.64 km2 (44.65 sq mi)
மக்கள்தொகை
 (2010)[2]
 • மொத்தம்3,14,964
 • அடர்த்தி2,700/km2 (7,100/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
15xxx
தொலைபேசி எண்+60-09-7
வாகனப் பதிவெண்கள்K
இணையதளம்mpkbbri.gov.my

தீபகற்ப மலேசியாவின் வடகிழக்குப் பகுதியில், தாய்லாந்து எல்லைக்கு அருகில், கிளாந்தான் ஆற்றின் முகத்துவாரத்தில் கோத்தா பாரு மாநகரம் அமைந்து உள்ளது.

கோத்தா பாரு நகரத்தின் மையத்தில் பல பள்ளிவாசல்கள்கள், பல்வேறு அருங்காட்சியகங்கள், தனித்துவமான கட்டிடக் கலையில் உருவாக்கப்பட்ட பழைய அரச அரண்மனைகள் மற்றும் முன்னாள் அரச கட்டிடங்கள் உள்ளன.[4]

வரலாறு

தொகு

கோத்தா பாரு 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிறுவப்பட்டது. இந்த நகரம் நிறுவப்படுவதற்கு முன்பு, கோத்தா பாருவில் கிளாந்தானின் அரச அரண்மனை இருந்தது. 1844-ஆம் ஆண்டில் கிளாந்தான் சுல்தான் முகமது II (Sultan Muhammad II), கோத்தா பாருவைக் கிளாந்தான் மாநிலத் தலைநகரமாக மாற்றி அமைத்தார்.

இதற்கு முன்னர் கோத்தா பாரு என்பது கோலா கிளந்தான் என்று அழைக்கப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில், ஏறக்குறைய 30,000 முதல் 50,000 மக்கள் வாழ்ந்த ஒரு செழிப்பான நகரமாக இருந்தது.

ஈயம், தங்கம், கருப்பு மிளகு, பாக்கு, அரிசி, பிரம்பு, மூங்கில், பாத்தேக் துணிமணிகள் போன்றவை அந்த நகரத்தின் உற்பத்திப் பொருட்கள் ஆகும். கிளாந்தான் ஆற்றின் அருகே கோத்தா பாரு அமைந்து இருந்ததன் காரணமாக அந்த நகரம் வர்த்தகப் பொருட்களின் நுழைவாயிலாக செயல்பட்டது.[5]

கோத்தா பாரு போர்

தொகு

இரண்டாம் உலகப் போரின் போது, கோத்தா பாருவில் இருந்து சுமார் 10 கி.மீ. (6.2 மைல்) தொலைவில் இருந்த பந்தாய் சபாக் எனும் கடற்கரை கிராமம்தான், சப்பானியப் படையெடுப்புப் படைகளின் தரையிறங்கும் இடமாக இருந்தது.[6]

1941 டிசம்பர் 8-ஆம் தேதி ஜப்பானியப் படைகள் மலாயாவில் தரை இறங்கின. கோத்தா பாரு போர் தொடங்கியது. அதுவே மலாயாவில் அந்நியர்கள் நடத்திய முதல் போர். கோத்தா பாருவைக் கைப்பற்றியதும், படிப்படியாக முன்னேறிய ஜப்பானியர்கள், ஒட்டு மொத்த மலாயாவையும் சிங்கப்பூரையும் கைப்பற்றினார்கள்.[6]

மக்கள் தொகையியல்

தொகு

கோத்தா பாருவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையான மக்கள் கிளாந்தானிய மலாய் இனத்தவர்கள் ஆவர். கோத்தா பாருவில் பேசப்படும் மொழியைக் கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழி என்று அழைக்கிறார்கள். இந்த நகரில் சீன மக்களும் ஓரளவிற்கு அதிகமாக உள்ளனர். இந்தியர்கள் மிகவும் குறைவு.

சமயம்

தொகு

கோத்தா பாரு நகரத்தின் மக்கள் தொகையில் 93% முசுலிம்கள். மற்றவர்கள் பௌத்தர்கள், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள். நகர்ப்புறச் சீன சமூகத்தினர் பௌத்தத்தைப் பின்பற்றுகின்றனர்.

கிளந்தான் மாநில அரசு மலேசிய இஸ்லாமிய கட்சியின் (பாஸ்) கீழ் உள்ளது. அந்த வகையில் "இஸ்லாமுடன் வளர்ச்சி" (Developing With Islam) எனும் கொள்கையின் மூலம், 2005 அக்டோபர் 1-ஆம் தேதி கோத்தா பாரு நகரத்திற்கு இஸ்லாமிய நகரம் என்று பெயர் சூட்டியது.

கோத்தா பாரு நகராட்சி (Kota Bharu Municipal Council) என்பது கோத்தா பாரு இசுலாமிய நகராட்சி (Islamic City of Kota Bharu Municipal Council) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கலாசாரம்

தொகு

மலேசியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, கிளாந்தான் மாநிலத்தின் கலாசாரம் மிகவும் தனித்துவம் வாய்ந்தது என்று சொல்லலாம். தாய்லாந்து நாட்டிற்கு அருகாமையில் இருப்பதால் அந்த நாட்டின் கலாசாரத் தாக்கங்களும் இருக்கவே செய்கின்றன.

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. primuscoreadmin (13 November 2015). "Latar Belakang".
  2. "TABURAN PENDUDUK MENGIKUT PBT & MUKIM 2010". Department of Statistics, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 15 December 2017.
  3. "Kota Bharu, formerly Kota Baharu, city, northern Peninsular (West) Malaysia, lying on the east levee of the Kelantan River, near the border with Thailand and 8 miles (13 km) inland from the South China Sea. Located in a fertile agricultural area, Kota Bharu ("New Fort" or "New City") is an industrial nucleus". www.britannica.com (in ஆங்கிலம்).
  4. "The conservative city of Kota Bharu is the capital of the state of Kelantan". www.wonderfulmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 26 March 2022.
  5. "The Historical Development of the Malay Peninsula Economic And Malay Society Economic Nature Pre-Colonial Era". International Journal of the Malay World and Civilisation. 2015. http://journalarticle.ukm.my/8942/1/Sejarah_perkembangan_ekonomi_....pdf. பார்த்த நாள்: 20 May 2016. 
  6. 6.0 6.1 Zulkifli, Ahmad Mustakim (31 August 2021). "Pantai Sabak in Kota Bharu, Kelantan, for example, was the site of the first World War II battle in the Pacific, when Japanese troops landed shortly before the attack on Pearl Harbour on Dec 7, 2941". MalaysiaNow. பார்க்கப்பட்ட நாள் 26 March 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோத்தா_பாரு&oldid=4012867" இலிருந்து மீள்விக்கப்பட்டது