மலேசிய மாநிலங்களின் தலைநகரங்கள்

மலேசியாவில் உள்ள மாநிலங்களில் மலாக்கா, பினாங்கு, சபா, சரவாக் மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் அரசமைப்புக்கு உட்பட்ட முடியரசு மாநிலங்கள் ஆகும். மலாக்கா, பினாங்கு, சபா, சரவாக் மாநிலங்கள் அரசமைப்புக்கு உட்பட்ட முடியரசு அல்லாத மாநிலங்கள். அந்த மாநிலங்களில் கவர்னர் எனும் ஆளுநர் தலைவராக இருக்கிறார் அல்லது யாங் டி பெர்துவா என்பவர் தலைவராக இருக்கிறார்.[1][2]

அரசமைப்புக்கு உட்பட்ட முடியரசு மாநிலங்களில், அரச நகரங்கள் அல்லது அரசத் தலைநகரங்கள் இருக்கும். அங்குதான் அரசர்களின் அரண்மனைகள் அல்லது அதிகாரப்பூர்வ அலுவல்முறை உறைவிடங்களும் இருக்கும். இந்த அரசத் தலைநகரங்கள், மாநில நிர்வாகத் தலைநகரங்களில் இருந்து அப்பாற்பட்டவை. மாநில நிர்வாகத்தை மாநில அரசாங்கங்கள் செயல்படுத்துகின்றன.[3][4][5]


மாநிலங்கள் நிர்வாகத் தலைநகரம் அரசத் தலைநகரம் வரலாற்றுத் தலைநகரம்
Flag of Johor ஜொகூர் ஜொகூர் பாரு மூவார் ஜொகூர் லாமா, கோத்தா திங்கி
Flag of Kedah கெடா அலோர் ஸ்டார் அலோர் ஸ்டார் (அன்னாக் புக்கிட்) லெம்பா பூஜாங்
Flag of Kelantan கிளாந்தான் கோத்தா பாரு கோத்தா பாரு கோத்தா லாமா
Flag of Malacca மலாக்கா மலாக்கா மாநகரம் -
Flag of Negeri Sembilan நெகிரி செம்பிலான் சிரம்பான் ஸ்ரீ மெனாந்தி
Flag of Pahang பகாங் குவாந்தான் பெக்கான் கோலா லிப்பிஸ் (1898–1953)
Flag of Penang பினாங்கு ஜார்ஜ் டவுன் -
Flag of Perak பேராக் ஈப்போ கோலாகங்சார் தெலுக் இந்தான் (1528 - 1877), தைப்பிங் (1875 - 1937)
Flag of Perlis பெர்லிஸ் கங்கார் ஆராவ்
Flag of Sabah சபா கோத்தா கினபாலு - கூடாட் (1882–1883), சண்டாக்கான் (1883–1946)
Flag of Sarawak சரவாக் கூச்சிங் -
Flag of Selangor சிலாங்கூர் ஷா ஆலாம் கிள்ளான் கோலா சிலாங்கூர், ஜுக்ரா, கோலாலம்பூர் (1880–1978)
Flag of Terengganu திரங்கானு கோலா திரங்கானு கோலா திரங்கானு

மேற்கோள்கள் தொகு