ஆயர் குரோ (ஆங்கிலம், மலாய் மொழி: Ayer Keroh) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய நகரம் ஆகும். இந்த நகர்ப் பகுதி தற்போது மலாக்கா மாநிலத்தின் அரசு நிர்வாக மையமாகவும் விளங்குகிறது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும், குட்டி மலேசியா (Mini Malaysia), குட்டி ஆசியான் (Mini ASEAN), மலாக்கா வண்ணத்துப் பூச்சி - ஊர்வன காப்பகம் (Malacca Butterfly & Reptile Sanctuary), விலங்கியல் பூங்கா போன்றவை பிரசித்தி பெற்றவை.[1]

ஆயர் குரோ
Ayer Keroh
மலாக்கா
Skyline of ஆயர் குரோ
Map
ஆயர் குரோ is located in மலேசியா
ஆயர் குரோ
      ஆயர் குரோ
ஆள்கூறுகள்: 2°16′N 102°17′E / 2.267°N 102.283°E / 2.267; 102.283
நாடு மலேசியா
மாநிலம் மலாக்கா
மாவட்டம்மத்திய மலாக்கா
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசியாவின் அஞ்சல் குறியீடுகள்75450
மலேசியத் தொலைபேசி எண்கள்06

கோலாலம்பூர் மாநகரில் இருந்து 134 கி.மீ. தொலைவிலும், மலாக்கா மாநகரில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது. தீபகற்ப மலேசியா, வடக்கு-தெற்கு விரைவுசாலை (மலேசியா)யின் ஆயர் குரோ நுழைவுச் சாவடியில் இருந்து மூன்று கி.மீ. தொலைவில் இருக்கிறது.

பொது தொகு

இரவு விலங்கியல் பூங்கா எனும் சுற்றுலா நிகழ்ச்சியும் இரவு நேரங்களில் நடைபெற்று வருகிறது. இரவு சார் விலங்குகளின் நடமாட்டத்தை அந்த நிகழ்ச்சியில் காண முடியும்.[2] தவிர, இங்குள்ள தாமான் புவாயா எனும் முதலைகள் பண்ணை (Taman Buaya), உலக தேனீக்கள் அருங்காட்சியகம் (World Bees Museum) போன்றவை, பொழுதுபோக்குச் சார்ந்த உயிரியல் பூங்காக்களாக விளங்குகின்றன.

மலாக்கா மணிப்பால் மருத்துவக் கல்லூரி தொகு

மலாக்கா மணிப்பால் மருத்துவக் கல்லூரி இங்குதான் உள்ளது. மலேசியாவைச் சேர்ந்த மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் இந்தக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகின்றனர். மலாக்கா மாநகரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கும் ஆயர் குரோ பகுதியில், மலாக்கா மணிப்பால் மருத்துவக் கல்லூரி அமைந்து இருக்கிறது.[3]

1997 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்ட இந்தக் கல்லூரியில் இது வரை 1500 மருத்துவர்கள் படித்துப் பட்டம் பெற்றுள்ளனர். புக்கிட் பெருவாங் புற நகர்ப் பகுதியில் பல்லூடகப் பல்கலைக்கழகம் ஒன்றும் உள்ளது. மலேசியாவில் இருக்கும் ஒரே பல்லூடகப் பல்கலைக்கழகம் இது தான். இந்தப் பலகலைக்கழகத்தில் கணினியியல் படிப்பதற்கு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் வருகின்றனர்.

கல்வி தொகு

தோற்றம் பெயர் விளக்கம்
  மலேசியப் பல்லூடகப் பலகல்கலைக்கழகம் மலாக்கா வளாகம் பல்லூடகப் பல்கலைக்கழகம், 1996 இல் நிறுவப்பட்டது, இது மலேசியா அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் தனியார் பல்கலைக்கழகமாகும். மலாக்கா வளாகத்தில் அறக்கட்டளை ஆய்வுகள் மற்றும் விரிவாக்கக் கல்வி மையம் மற்றும் மூன்று துறைகள் உள்ளன: பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மற்றும் வணிகம் மற்றும் சட்டத் துறை.[4]
  மலாக்கா மலேசியத் தொழில்நுட்பப் பலகல்கலைக்கழகம் இந்த வளாகம் தாமான் தாசிக் உத்தாமா தொழில்துறை பகுதியில் அமைந்துள்ளது. இது அனைத்து தற்காலிக துறைகளையும் கொண்டுள்ளது. மின்னணு மற்றும் கணினி பொறியியல் துறைகள் டுரியான் துங்கல் பகுதியில் ஒரு நிரந்தர வளாகத்தில் உள்ளன.
சாட் அறவாரியக் கல்லூரி மாணவர்கள் தங்கிப் படிக்கும் கல்லூரி[5][6]
  ஆயர் குரோ தேசிய உயர்நிலைப் பள்ளி தேசிய மேல்நிலைப் பள்ளி.

அரசியல் தொகு

தோற்றம் பெயர் விளக்கம்
  செரி நெகிரி வளாகம் மாநில நிர்வாக கட்டிட வளாகம் மாநில சட்டமன்றம்; அத்துடன் அமைச்சர் அலுவலகங்கள் மற்றும் மாநில ஆளுநர் குடியிருப்பு.

மருத்துவ நலன் தொகு

தோற்றம் பெயர் விளக்கம்
  ஆயர் குரோ பந்தாய் மருத்துவமனை 1986-இல் நிறுவப்பட்டது; ஆகஸ்டு 1995-இல் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது. இந்த தனியார் மருத்துவமனை நகரவாசிகளுக்கு பரந்த அளவிலான மருத்துவ சேவைகள் மற்றும் மருத்துவ வசதிகளை வழங்குகிறது.[7]

விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தொகு

தோற்றம் பெயர் விளக்கம்
  ஆயர் குரோ ஏரி பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு ஏரி[8]
  ஆயர் குரோ சதுக்கம் பொதுமக்கள் சதுக்கம்[9]
- ஆயர் குரோ கோல்ப் கழகம் தனியார் விளையாட்டு மையம்[10]

காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Taman Mini Malaysia & ASEAN, the Malacca Butterfly & Reptile Sanctuary and the Melaka Zoo.
  2. The zoo’s highlight is the night-viewing safari when visitors are driven around in a tram to see lit-up exhibits of nocturnal wildlife up and about.
  3. "Nestled within the tranquil surroundings of Bukit Baru, Melaka, the 22-acre MMMC campus". Archived from the original on 2016-05-30. பார்க்கப்பட்ட நாள் 2015-01-06.
  4. "Multimedia University".
  5. "KYS International School".
  6. "Kolej Yayasan Saad's website".
  7. "Pantai Malaysia > Our Hospitals > Pantai Hospital Ayer Keroh". pantai.com.my. Archived from the original on 2015-05-07.
  8. "Air Keroh Lake". goMelaka. 3 July 2013.
  9. "RM1.5 juta naik taraf Dataran Sejarah Ayer Keroh". Utusan Online. 9 June 2011. Archived from the original on 27 April 2017. பார்க்கப்பட்ட நாள் 27 April 2017.
  10. "Ayer Keroh Golf and Country Club website".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயர்_குரோ&oldid=3910001" இலிருந்து மீள்விக்கப்பட்டது