புக்கிட் பெருவாங்
புக்கிட் பெருவாங் (மலாய்; ஆங்கிலம்: Bukit Beruang; சீனம்: 武吉伯鲁昂); என்பது மலேசியா, மலாக்கா மத்திய மலாக்கா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். மலாக்காவில் மிகப் பழைமையான நகரங்களில் இதுவும் ஒன்றாகும். முன்பு காலத்தில் தமிழர்கள் மிகுதியாக வாழ்ந்த இடமாகவும் அறியப்படுகிறது.
புக்கிட் பெருவாங் | |
---|---|
Bukit Beruang | |
மலாக்கா | |
ஆள்கூறுகள்: 2°14′24″N 102°16′44.4″E / 2.24000°N 102.279000°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | மலாக்கா |
மாவட்டம் | மத்திய மலாக்கா |
உள்ளாட்சி தகுதி | 1 சனவரி 2010 |
அரசு | |
• வகை | உள்ளாட்சி மன்றம் |
• நிர்வாகம் | ஆங் துவா ஜெயா நகராட்சி |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசியாவின் அஞ்சல் குறியீடுகள் | |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +06 06-2324 0000 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | M |
இணையதளம் | www |
இந்த நகரத்திற்கு அருகில் 116 அடி உயரம் கொண்ட ஒரு குன்று உள்ளது. அந்த குன்றின் பெயரால் இந்த நகரத்திற்கும் பெயரிடப்பட்டது. இந்தக் குன்று நடைப் பயணத்திற்கு பிரபலமான இடமாகவும் விளங்குகிறது.[3][4]
பொது
தொகுபுக்கிட் பெருவாங் எனும் பெயரில் இரு சொற்களின் பொருள் உள்ளது. மலாய் மொழியில் புக்கிட் (Bukit) என்றால் குன்று;. பெருவாங் (Beruang) என்றால் கரடி என்று பொருள். முன்பு காலத்தில் இங்கு கரடிகள் வாழ்ந்ததாக கிராம மக்களின் புராணக் கதைகளில் சொல்லப்படுகின்றன.
மலேசிய தொலைத்தொடர்பு நிறுவனமான டெலிகோம் மலேசியா நிறுவனத்திற்குச் சொந்தமான மலேசிய பல்லூடக பல்கலைக்கழகம் (Multimedia University); புக்கிட் பெருவாங் நகரத்தில் மிகவும் பிரபலமான அடையாளமாகக் கருதப்படுகிறது.
குடியிருப்பு வீடுமனை வளாகங்கள்
தொகு- ரூமா அவாம் புக்கிட் பெருவாங்
- தாமான் பூங்கா ராயா
- தாமான் புக்கிட் மலாக்கா
- தாமான் கெர்ஜாசாமா
- தாமான் பரிதா
- தாமான் மேகா
- தாமான் புக்கிட் பெருவாங்
- தாமான் புக்கிட் பெருவாங் உத்தாமா
- தாமான் டெலியா
- தாமான் புக்கிட் பெருவாங் பெர்மாய்
- தாமான் புக்கிட் பெருவாங் இண்டா
- தாமான் சந்தோசா
- தாமான் சரோஜா
- கம்போங் புக்கிட் பெருவாங் ஜெயா
- தாமான் மெளவிஸ்
- கம்போங் பாரு புக்கிட் பெருவாங்
- கம்போங் சாகா புக்கிட் பெருவாங்
- கம்போங் வக்காப்
- கம்போங் டெலோக்
- செரி தெமங்கோங் போலீஸ் அடுக்குமாடி
- இக்சோரா அடுக்குமாடி
- தாமான் சௌஜானா கெமோக் வான் சைருல்
அருகாமை நகரங்கள்
தொகு- புக்கிட் மலாக்கா
- ஆயர் குரோ
- புக்கிட் கட்டில்
- பத்து பிரண்டாம்
- புக்கிட் பாரு
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Poskod Bukit Beruang, Ayer Keroh, Melaka, Malaysia". www.poskod.com. பார்க்கப்பட்ட நாள் 8 February 2024.
- ↑ "Ayer Keroh, Melaka Postcode List - Page 7 - Malaysia Postcode". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 8 February 2024.
- ↑ "Mendaki Puncak Bukit Beruang".
- ↑ "Archived copy". Archived from the original on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 4 September 2015.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)