டெலிகோம் மலேசியா
டெலிகோம் மலேசியா (மலாய்: Telekom Malaysia Berhad; ஆங்கிலம்: Telekom Malaysia) (TM) மலேசியாவில் 1984-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு மலேசிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் வானொலி ஒலிபரப்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகளுக்கான தேசிய தொலைத்தொடர்பு அமைப்பாகத் தொடக்கப் பட்டது. இன்றைய காலத்தில் அகன்ற அலைவரிசை சேவைகள், கட்டணத் தொலைக்காட்சி மற்றும் இணையச் சேவைகள் போன்றவற்றில் நாட்டின் மிகப்பெரிய சேவையாளராக உருவாகியுள்ளது.
டெலிகோம் மலேசியா சின்னம் | |
வகை | அரசுக்கு சொந்தமான நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 12 அக்டோபர் 1984 |
தலைமையகம் | சைபர்ஜெயா, சிலாங்கூர், மலேசியா[1] |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை | தொலைத்தொடர்பு துறை |
வருமானம் | ▼ RM 11.82 பில்லியன் (2018)[2] |
இயக்க வருமானம் | ▼ RM 375.5 மில்லியன் (2018)[3] |
பணியாளர் | ▼ > 24,000 (2018)[4] |
இணையத்தளம் | www |
மலேசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம்; மற்றும் உலகின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் எனவும் அறியப்படுகிறது.
பொது
தொகு2018-ஆம் ஆண்டில் டெலிகோம் மலேசியா விண்வெளி வழியாக டிஎம் கோ (TMgo) 4G எனும் தொலைத்தொடர்பு முறையின் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் 4-ஆம் தலைமுறையை அறிமுகப்படுத்தியது. அத்துடன் சனவரி 2018-இல், டெலிகோம் மலேசியாவின் 850 MHz சேவையானது யுனி மொபைல் (unifi Mobile) என மறுபெயரிடப்பட்டது.
டெலிகோம் மலேசியா 28,000-க்கும் அதிகமான பணியாளர்கள்; மற்றும் RM 25 பில்லியனுக்கும் அதிகமான பங்குச்சந்தை மூலதனத்தைக் கொண்ட நிறுவனம் ஆகும். அத்துடன் மலேசிய அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களில், டெலிகோம் மலேசியா நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
வரலாறு
தொகுஇரண்டாம் உலகப் போர் மற்றும் சப்பானிய ஆக்கிரமிப்பின் போது மலேசியாவில் பெரும்பாலான தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு பெரிதும் சேதமடைந்தது. சப்பானிய ஆக்கிரமிப்பிற்குப் பின்னர். 1946-ஆம் ஆண்டில், பிரித்தானியர்கள், மலாயாவில் தங்கள் ஆட்சியை மீண்டும் நிறுவியபோது, தொலைத்தொடர்பு வழித்தடங்களை மறுசீரமைப்பு செய்தார்கள்.
இரண்டாம் உலகப் போரில் சேதமடைந்தத தொலைபேசி கம்பங்களை மீட்டெடுத்தார்கள். மற்றும் சேதமடைந்த அல்லது திருடப்பட்ட செப்பு கம்பிகளை மீண்டும் நிறுவினார்கள். சப்பானிய ஆக்கிரமிப்பின் போது, தபால் மற்றும் தந்தி துறை இரண்டு தனித்தனி பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.
கம்பியில்லா தொலைபேசி சேவைகள்
தொகுபிரித்தானியர்கள் மீண்டும் திரும்பி வந்தபோது, அவர்கள் தொடக்கத்தில் இரு பிரிவுகளையும் மீண்டும் ஒன்றிணைத்தனர், ஆனால் இந்த முயற்சி குறுகிய காலமாக இருந்தது. ஏப்ரல் 1, 1946-இல் மலாயா ஒன்றியம் உருவானதும், மலேசிய தொலைத்தொடர்புத் துறை மற்றும் அஞ்சல் சேவைகள் துறை என இரு துறைகள் பிறந்தன.
முன்னாள் தந்தி, தொலைபேசி மற்றும் கம்பியில்லா தொலைபேசி சேவைகளை மலேசிய தொலைத் தொடர்புத் துறை கட்டுப் படுத்தியது. இரண்டாவது துறையான மலேசிய அஞ்சல் சேவைகள் துறை; சேமிப்புக் கணக்குகள், அஞ்சல், பண ஆணைகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தியது.
மலாயாவின் 1948 - 1960 அவசரகாலத்தில், காவல்துறை மற்றும் ஆயுதப் படைகளுக்கான தகவல் தொடர்பு இணைப்புகளை வழங்குவதில் தீவிரமான கவனம் செலுத்தப்பட்டது. 1953-ஆம் ஆண்டு வாக்கில், மலாயாவில் இருந்த ஒவ்வொரு காவல் நிலையமும், காவல் துறை வாகனங்களுடன் தொடர்பு கொள்ள முடிந்தது; மற்றும் தலைமையகத்துடனும் உடனுக்குடன் தொடர்பு கொள்ள முடிந்தது. அப்போதைய மலாயா காவல் துறையின் கம்பியில்லாத் தந்தி சேவைகள் உலகின் மிகப்பெரிய திட்டமாக கருதப்பட்டது.[5]
பன்னாட்டு தொடர்புகள்
தொகு1950-ஆம் ஆண்டு முதல் 1953-ஆம் ஆண்டு வரை, மலாயாவில் நிறுவப்பட்ட தொலைபேசிகளின் எண்ணிக்கை 20,000-இல் இருந்து 39,000-ஆக உயர்ந்தது. அதே வேளையில், மலேசிய தொலைத்தொடர்புத் துறையின் வருவாய் $ 8 மில்லியனில் இருந்து $ 17 மில்லியனாக இரட்டிப்பாகியது.
1954-ஆம் ஆண்டில், சிங்கப்பூர் மலாக்கா, கோலாலம்பூர் மற்றும் பினாங்கு நகரங்களுடன் இணைக்கும் பிரதான தொலைபேசி வழிடத்தடம் கட்டி முடிக்கப்பட்டது. அதன் பின்னர் செயற்கைக் கோள் பரிமாற்றங்கள் வெளிவரத் தொடங்கின. அந்தக் கட்டத்தில், மலேசியாவை உலகின் பிற பகுதிகளுடன் இணைக்கும் பன்னாட்டு தொடர்புகளும் அதிகரித்தன.
கம்பியில்லா தொலைபேசி அழைப்புகள்
தொகு1957-ஆம் ஆண்டில், நாடு சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து, மலாயா தொலைத் தொடர்புத் துறையானது டெலிகாம் இலாகா என பெயர் மாற்றம் கண்டது. அதன் முதல் பணி, நாடு முழுவதும் தொலைத்தொடர்பு வசதிகளை வழங்குவதாகும். அந்த வகையில் நுண்ணலை செலுத்துகைத் தொடர் இணைப்புகள் நிறுவப்பட்டன. 1962-ஆம் ஆண்டு வாக்கில், இந்த இணைப்புகள் மூலமாக தீபகற்ப மலேசியாவில் உள்ள பெரும்பாலான நகர்ப்புற மையங்கள் இணைக்கப்பட்டன.
1962-ஆம் ஆண்டில், கம்பியில்லா தொலைபேசி அழைப்புகளை மலேசிய அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. கோலாலம்பூரில் உள்ள தொலைபேசி உரிமையாளர்கள் சிங்கப்பூர் மக்களுடன் நேரடியாக அழைக்க முடிந்தது. இதைத் தொடர்ந்து வெளிநாட்டு அழைப்பு வசதிகள் மேலும் மேம்படுத்தப்பட்டன.[6]
கிழக்கு மலேசியா தொலை தொடர்புத் துறை
தொகு1963-ஆம் ஆண்டில், தீபகற்ப மலேசியாவில் தொலைக்காட்சி சேவைகளை டெலிகாம் இலாகா அறிமுகப்படுத்தியது. மலேசிய வானொலி தொலைக்காட்சி உள்ளூர் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உள்ளடக்கங்களைக் கவனித்துக் கொன்டது. டெலிகாம் இலாகா ஒளிபரப்பு அலைவரிசைகளை கவனித்துக் கொன்டது.
1963-ஆம் ஆண்டுக்கு முன்னர், அதாவது மலேசியா கூட்டமைப்பு உருவாவதற்கு முன்னர், கிழக்கு மலேசியாவின் சபா, சரவாக் மாநிலங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் சுதந்திரமாக நிர்வகிக்கப்பட்டன. சபா, சரவாக் மாநிலங்கள் மலேசியாவில் இணைக்கப்பட்ட பின்னர், 1968-இல், அந்த மாநிலங்களின் தொலைத்தொடர்புத் துறை மலேசியாவின் தொலைத்தொடர்புத் துறையுடன் இணைக்கப்பட்டது.
பல்வேறு சவால்கள்
தொகு1970-ஆம் ஆண்டில், குவாந்தான் அருகே பூமி செயற்கைக் கோள் நிலையம் கட்டப்பட்டது. 9 மில்லியன் மலாயா டாலர் செலவில் இந்த நிலையம் 12 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது. 1975-ஆம் ஆண்டில், பன்னாட்டு தொலையச்சு (International Telex Exchange) அறிமுகம் செய்யபட்டது. 1985-ஆம் ஆண்டில் வானொலியைப் பயன்படுத்தும் தானியங்கி தொலைபேசி (ATUR) 450 மொபைல் சேவை அறிமுகப் படுத்தப்பட்டது.
மலேசிய அரசாங்கத்தின் தனியார் மயமாக்கல் திட்டத்திற்கு இணங்க, சனவரி 1, 1987 அன்று, தொலைத்தொடர்பு சேவை (வாரிசு நிறுவனம்) சட்டம் 1985-இன் கீழ் (Telecommunications Service (Successor Company) Act 1985), டெலிகாம் மலேசியா நிறுவனம் (Syarikat Telekom Malaysia) உருவானது. அப்போது அந்த நிறுவனம்; பெரும் கடன், பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த தளவாடங்கள் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது.
மலேசிய பங்குச் சந்தையில், டெலிகாம் மலேசியா 7 நவம்பர் 1990-இல் பட்டியலிடப்பட்டது. RM 27 பில்லியன் பங்குச் சந்தை மதிப்பை எட்டியது. பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டதைத் தொடர்ந்து, டெலிகாம் மலேசியா பெர்காட் (Telekom Malaysia Berhad) என புதிய பெயர் அறிவிக்கப்பட்டது.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Alexander Wong (10 May 2023). "Menara TM no longer TM's headquarters, TM Campus is their new home". Soya Cincau. https://soyacincau.com/2023/05/10/tm-launch-tm-campus-new-hq-cyberjaya/. பார்த்த நாள்: 18 May 2023.
- ↑ "Telekom posts net profit of RM153m in FY18, sees better year".
- ↑ "Telekom Malaysia's 2018 net profit falls 83.52pc RM153.52m". 26 February 2019.
- ↑ "Telekom Malaysia Integrated Annual Report 2018". Archived from the original on 2019-06-20. பார்க்கப்பட்ட நாள் 2024-02-08.
- ↑ George, Matt (2007). Transforming A Legacy. TM Group Corporate Communications. p. 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789834358808.
- ↑ Ingram, Derek (2013-10-22). The Commonwealth at Work: The Commonwealth and International Library: Commonwealth Affairs Division. Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781483155098.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Telekom Malaysia தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Official TM WiFi Distributor Malaysia- WiFiSpeedMalaysia