சைபர்ஜெயா

மலேசியா, சிப்பாங் மாவட்டத்தில் உள்ள ஓர் உயர் அறிவியல் தொழில்நுட்ப நகரம்

சைபர்ஜெயா (மலாய்:Cyberjaya; ஆங்கிலம்:Cyberjaya) என்பது மலேசியா, சிலாங்கூர், சிப்பாங் மாவட்டத்தில் உள்ள ஓர் உயர் அறிவியல் தொழில்நுட்ப நகரமாகும். மலேசியாவின் மலேசிய பல்லூடகப் பெருவழி (Multimedia Super Corridor) திட்டத்திற்கு முதுகெலும்பாய்த் திகழ்கிறது.

சைபர்ஜெயா
Cyberjaya
சைபர்ஜெயா வளாகம்
சைபர்ஜெயா வளாகம்
சைபர்ஜெயா is located in மலேசியா
சைபர்ஜெயா
      சைபர்ஜெயா
ஆள்கூறுகள்: 2°55′21″N 101°39′18″E / 2.92250°N 101.65500°E / 2.92250; 101.65500
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
உருவாக்கம்17 மே 1997
பரப்பளவு
 • மொத்தம்3.2 km2 (1.2 sq mi)
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்1,44,000
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
63000
தொலைபேசி எண்கள்+60-83, +60-86, +60-88
இணையதளம்cyberjayamalaysia.com.my
mpsepang.gov.my

இந்தத் தொழில்நுட்ப நகரம், மலேசிய அரசாங்கத்தின் நிர்வாக நகரமான புத்ராஜெயாவுடன், சமகாலத்தில் இணைந்து உருவாக்கப்பட்டது. இங்கு பல பன்னாட்டு நிறுவனங்களும்; தரவு மையங்களும் தங்களின் தொழில்நுட்ப நிறுவனங்களை அமைத்துள்ளன.[1]

மலேசியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு (Silicon Valley of Malaysia) என்று அழைக்கப்படும் இந்த நகரத்தின் கட்டுமானம், 1997 மே 17-ஆம் தேதி, மலேசியாவின் நான்காவது பிரதமர் மகாதீர் பின் முகமது அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கப்பட்டது. [2]

அமைவிடம்

தொகு
 
சாப்ட்சுபரி சதுக்கம், சைபர்ஜெயா

கோலாலம்பூர் மாநகருக்கு தெற்கே சுமார் 26 கி.மீ. தொலைவில், உருவாக்கப்பட்ட இந்த நகரம் 2,890 எக்டர் பரப்பளவைக் கொண்டது. முன்பு இங்கு எண்ணெய்ப் பனைத் தோட்டங்கள் இருந்தன.

சிலாங்கூர் மாநிலத்தின், சிப்பாங் மாவட்டத்தில், டெங்கில் முக்கிம் பகுதியில் உருவாக்கப்பட்டு உள்ளது. இது மலேசியாவின் நிர்வாகத் தலைநகரான புத்ராஜெயாவிற்கு (Federal Territory of Putrajaya) மிக அருகில் உள்ளது.

சைபர்ஜெயாவிற்கு அருகிலுள்ள நகரங்கள்

தொகு

சைபர்ஜெயா, லங்காட் பள்ளத்தாக்கின் நடுவில், காஜாங்கிற்கும் பந்திங்கிற்கும் இடையில் பாதி தூரத்திலும்; கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து வடக்கே 20 கி.மீ. தொலைவிலும்; சிரம்பான் மாநகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

பூச்சோங், ஸ்ரீ கெம்பாங்கான் (Seri Kembangan), புத்ரா அயிட்ஸ் (Putra Heights), செஞ்சாரோம் (Jenjarom) மற்றும் பண்டார் பாரு பாங்கி (Bandar Baru Bangi) ஆகிய நகரங்கள் சைபர்ஜெயாவிற்கு அருகிலுள்ள பிற நகரங்களாகும்.

வரலாறு

தொகு
 
சைபர்ஜெயாவில் சூரியன் மறையும் காட்சி (2010)

இன்று சைபர்ஜெயா, புத்ராஜெயா, டிங்கில் (Dengkil) என்று அழைக்கப்படும் இடங்கள்; 1975-ஆம் ஆண்டு வரை உலு லங்காட் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இருந்தன. இன்றைய சைபர்ஜெயா நகரத்தில்; அப்போதைய காலத்தில் பிராங் பெசார் எனும் ரப்பர் தோட்டம் (Prang Besar Estate) இருந்தது.

மலேசிய பல்லூடகப் பெருவழி திட்டத்தை உருவாக்குவதற்கு மெக்கின்சே (McKinsey & Company) எனும் மேலாண்மை ஆலோசனை நிறுவனம், மலேசியா மத்திய அரசால் ஏற்கனவே நியமிக்கப்பட்டு இருந்தது. 1995-ஆம் ஆண்டு, அந்த நிறுவனம் நடத்திய ஓர் ஆய்வில் இருந்து சைபர்ஜெயா என்ற ஒரு தகவல் தொழில்நுட்ப நகரத்தையும் உருவாக்கலாம் எனும் திட்டத்தை அந்த நிறுவனம் முன்வைத்தது.

கட்டுமானம்

தொகு
 
மல்டிமீடியா பல்கலைக்கழகம்

மலேசிய பல்லூடகப் பெருவழி திட்டத்தை உருவாக்குவதற்கு மல்டிமீடியா டெவலப்மென்ட் கார்ப்பரேசன் (Multimedia Development Corporation) எனும் நிறுவனத்திற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அந்தப் பெருவழித் திட்டம் செயல்படுத்துவதை மேற்பார்வையிடும் நிறுவனமாகவும் சேவை செய்து வந்தது.

சைபர்ஜெயாவை உருவாக்கும் திட்டம் உறுதியானதும்; இந்தப் புதிய திட்டத்தை மேற்பார்வையிட அதே மல்டிமீடியா டெவலப்மென்ட் கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

அந்த வகையில் அந்த மல்டிமீடியா டெவலப்மென்ட் கார்ப்பரேசன் நிறுவனம், சைபர்ஜெயா உருவாக்கத்தை மேற்பார்வையிட சைபர்வியூ நிறுவனம் (Cyberview Sdn Bhd) என மறுபெயரிடப்பட்டது; பின்னர் தனியார் மயமாக்கப்பட்டது.

சைபர்வியூ நிறுவனத்தின் பங்குதாரர் நிறுவனங்கள்

தொகு
 
சைபர்ஜெயா பள்ளிவாசல்
  • செத்தியா அருமான் நிறுவனம் - Setia Haruman Sdn Bhd (SHSB)
  • நிப்பான் தொலைபேசி தந்தி நிறுவனம் - Nippon Telephone and Telegraph (NTT)
  • கோல்டன் ஹோப் நிறுவனம் - Golden Hope
  • எம்டெக் நிறுவனம் - MDeC
  • பெர்மோடாலான் நேசனல் பெர்காட் நிறுவனம் - Permodalan Nasional Berhad (PNB)
  • கும்புலான் டாருல் ஏசான் பெர்காட் நிறுவனம் - Kumpulan Darul Ehsan Berhad (KDEB)

மேலே சொல்லப்பட்ட நிறுவனங்களில் கும்புலான் டாருல் ஏசான் பெர்காட் நிறுவனம்; சிலாங்கூர் மாநில அரசாங்கத்தைப் பிரதிநிதித்த நிறுவனமாகும். சைபர்வியூ நிறுவனத்தின் பங்குதாரர் நிறுவனங்களில் தலைமை நிறுவனமாக செத்தியா அருமான் நிறுவனம் விளங்கியது.

செத்தியா அருமான் நிறுவனம்

தொகு
 
பிப்ரவரி 2011-இல் சைபர்வியூ தங்கும் விடுதிகள்.

செத்தியா அருமான் நிறுவனத்தின் துணை நிறுவனங்களாகச் செயல்பட்ட நிறுவனங்கள்:

  • ரெனோங் - Renong
  • லேண்ட்மார்க் - Landmarks
  • எம்கே லேண்ட் - MKLand
  • கண்டிரி அயிட்ஸ் - Country Heights

மத்திய அரசு சார்பில் டெலிகாம் மலேசியா (Telekom Malaysia) மற்றும் தெனகா நேசனல் (Tenaga Nasional) ஆகிய இரு நிறுவனங்களும் முறையே தொலைத்தொடர்பு மற்றும் மின் விநியோக உள்கட்டமைப்பை வழங்குவதற்காகப் பரிந்துரைக்கப்பட்டன.

1997 ஆசிய நிதி நெருக்கடி

தொகு

இருப்பினும், 1997 ஆசிய நிதி நெருக்கடி (1997 Asian Financial Crisis) காரணமாக, சைபர் ஜெயா திட்டம் தாமதமானது. இந்தக் கட்டத்தில் மலேசிய அரசாங்கம் தலையிட்டு மலேசிய நிதி அமைச்சகத்தின் மூலம் 70% பங்குகளைப் பெற்றுக் கொண்டது. அந்த வகையில், அன்றில் இருந்து சைபர்வியூ நிறுவனம் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமாகவே உள்ளது.

2014-இல், சைபர்ஜெயாவை மலேசியாவின் முதல் சைபர் நகரத் தகுதியில் இருந்து உலகளாவிய தொழில்நுட்ப மையமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அலுவலகம் மற்றும் வணிக வசதிகள்

தொகு
 
சைபர்ஜெயா ஏரிப் பூங்கா.

500-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் சைபர்ஜெயாவிற்கு தங்கள் செயல்பாடுகளை மாற்றியுள்ளன. அவற்றில் சில நிறுவனங்கள்:

கல்வி வசதிகள்

தொகு

சைபர்ஜெயாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் மல்டிமீடியா பல்கலைக்கழகம் (Multimedia University) ஒன்றாகும். இந்தப் பல்கலைக்கழகத்தின் சைபர்ஜெயா வளாகம் 8 ஜூலை 1999-இல் திறக்கப்பட்டது.

இந்தப் பல்கலைக்கழகத்தில் 20,277 மாணவர்கள் பயில்கிறார்கள். இவர்களில் ஏறத்தாழ 19 விழுக்காட்டு மாணவர்கள், 80 நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு மாணவர்கள் ஆகும்.

சைபர்ஜெயாவில் உள்ள பிற உயர்க் கல்வி நிறுவனங்கள்

தொகு
  • லிம் கோக் விங் கிரியேட்டிவ் டெக்னாலஜி பல்கலைக்கழகம் - Limkokwing University of Creative Technology
  • கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பல்கலைக்கழகம் மலேசியா - University Malaysia of Computer Science & Engineering (UNIMY)
  • சைபர்ஜெயா மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகக் கல்லூரி - Cyberjaya University College of Medical Sciences
  • மலேசிய இஸ்லாமியப் பல்கலைக்கழகம் - Universiti Islam Malaysia (UIM),
  • சைபர் புத்ரா கல்லூரி - Cyber Putra College
  • கிர்க்பி அனைத்துலகக் கல்லூரி - Kirkby International College

சைபர்ஜெயா காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "YB Dr Ong Kian Ming Deputy Minister of International Trade and Industry visits Huawei Malaysia Global Training Centre". Huawei. https://www.huawei.com/my/press-events/news/my/2019/deputy-minister-of-international-trade-industry-visits-huawei-malaysia-global-training-centre. 
  2. "The Story of a Global Tech Hub". Cyberjaya. Archived from the original on 26 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 7 June 2021.

சான்றுகள்

தொகு
  • Town & Country Planning Department, Malaysia (2000). Urban Design Guidelines for Cyberjaya. Kuala Lumpur, Malaysia: Selangor Town & Country Planning Department. 
  • Multimedia Development Corporation (2003). Guidelines on Telecommunication Infrastructure & Facilities Provisioning for Buildings in MSC. Kuala Lumpur, Malaysia: Multimedia Development Corporation. 

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைபர்ஜெயா&oldid=4097305" இலிருந்து மீள்விக்கப்பட்டது