டெக் மஹிந்திரா
டெக் மஹிந்திரா (Tech Mahindra) என்பது இந்தியாவைச் சேர்ந்த பன்னாட்டு தகவல் தொழில்நுட்பம் சேவைகள் வழங்கும் நிறுவனமாகும். மகிந்திரா குழுமத்தின் துணை நிறுவனமான இந்நிறுவனம் இந்தியாவின் ஐந்தாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகும். ஹைதராபாத்தை சேர்ந்த சத்யம் மென்பொருள் நிறுவனத்தில் நடத்த ஊழலைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் பங்குகளை மஹிந்திரா குழுமம் வாங்கி மஹிந்திரா சத்யம் எண்று பெயர் மாற்றியது. பின் மஹிந்திரா சத்யம் நிறுவனம் டெக் மஹிந்திரா நிறுவனத்துடன் 2013 ஆம் ஆண்டு இணைக்கப்பட்டது.[1][2]
வகை | பொது தேபச: TECHM முபச: 532755 |
---|---|
நிறுவனர்(கள்) | ஆனந்த் மஹிந்திரா |
தலைமையகம் | பூனே, மகாராஷ்டிரா |
சேவை வழங்கும் பகுதி | உலகம் முழுவதும் |
தொழில்துறை | தகவல் தொழில்நுட்பம் |
தாய் நிறுவனம் | மகிந்திரா குழுமம் |
இணையத்தளம் | www |
இந்தியப் பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனம் சந்தை மதிப்பு அடிப்படையில் இந்தியாவின் 50 நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.