விப்ரோ லிமிடெட் (முபச507685 , தேபசWIPRO , நியாபசWIT) என்பது இந்தியாவில் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு உலகளாவிய தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனமாகும். விப்ரோ 2011ம் ஆண்டு வருவாய் படி இந்தியாவின் மூன்றாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாக உள்ளது; 2011 ஆம் ஆண்டு தகவல் சேவை வழங்குநர்கள் பட்டியலில் உலக அளவில் 31 வது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் மூன்று பிரிவுகளில் செயல்படுகிறது: தகவல் தொழில்நுட்பச் சேவைகள், தகவல் தொழில்நுட்பத் தயாரிப்புகள், நுகர்வோர் சேவை மற்றும் விளக்குகள்.

விப்ரோ, சோழிங்கநல்லூர், சென்னை
விப்ரோ லிமிடெட்
வகைபொது
நிறுவுகை1945
நிறுவனர்(கள்)அசிம் பிரேம்ஜி
தலைமையகம்பெங்களூர், கர்நாடகம், இந்தியா
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முக்கிய நபர்கள்அசிம் பிரேம்ஜி
(தலைவர்)
டி கே குரியன்
(சி.ஈ.ஓ மற்றும் நிருவாக இயக்குனர்)
தொழில்துறைதகவல் தொழில்நுட்ப சேவை மேலாண்மைs
தகவல் தொழில்நுட்ப ஆலோசனை
சேவைகள்அவுட்சோர்ஸிங்
பிபிஓ
மென்பொருள் சேவை
வருமானம் US$ 7.3 பில்லியன் (31, 2014)[1]
இயக்க வருமானம் US$ 1.270 பில்லியன் (2011)[1]
இலாபம் US$ 1.167 பில்லியன் (2011)[1]
மொத்தச் சொத்துகள் US$ 8.182 பில்லியன் (2011)[1]
மொத்த பங்குத்தொகை US$ 5.280 பில்லியன் (2011)[1]
பணியாளர்122,385 (March 2011)[2]
பிரிவுகள்விப்ரோ கன்ஸ்யூமர் கேர் & விளக்கு
Wipro EcoEnergy
விப்ரோ உள்கட்டமைப்பு பொறியியல்
விப்ரோ ஜி.இ. மெடிக்கல் சிஸ்டம்ஸ் லிமிடெட்
இணையத்தளம்Wipro.com

வரலாறு தொகு

விப்ரோ நிறுவனம் டிசம்பர் 29, 1945 அன்று மும்பையில் மேற்கு இந்திய தயாரிப்புகள் லிமிடெட் எனும் பெயரில், முஹம்மது ஹசம் பிரேம்ஜி மூலம் தொடங்கப்பட்டது. பிறகு இதன் சுருக்கமாக விப்ரோ என அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் இந்நிறுவனம் காய்கறிகள் மூலம் நெய், வனஸ்பதி, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆகிய தயாரிப்புகளை மகாராஷ்டிர மாநிலம் ஜலகோன் மாவட்ட அம்ல்னர் என்னும் ஊரில் தயாரித்து வந்தது. கிஸான் என்ற பெயரிலும், ஒட்டகம் மற்றும் சூரியகாந்தி பூவை குழுமச் சின்னமாக வைத்தது. அன்று முதல் இன்று வரை விப்ரோ தங்களது அனைத்து வியாபாரங்களிலும் சூரியகாந்திப் பூவை குழுமச் சின்னமாக வைத்துள்ளது.

1966ஆம் ஆண்டு, தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, தனது 21ஆவது வயதில் அசிம் பிரேம்ஜி, விப்ரோவின் தலைவராக பொறுப்பெற்றார். 175 நாடுகளில் உள்ள 175+ வாடிக்கையாளர்களுக்கு மென்பொருள் சேவை செய்கிறது.


நிர்வாக இயக்குநர்களின் பதவி விலகல் - 2011 ஆம் ஆண்டு தொகு

2011 ஆம் ஆண்டு, எதிர்பார்த்த இலாபத்தினை ஈட்டாததற்குக் காரணமாக தானே கொணர்ந்த இரட்டை நிருவாக இயக்குநர் முறையைக் காரணம் காட்டினார் அஜிம் பிரேம்ஜி. அதன் விளைவாக கிரிஷ் மற்றும் சுரேஷ் வாஷ்வானி எனும் இரு நிருவாக இயக்குநர்களில் யாரேனும் ஒருவர் பதவி விலக வேண்டிய சூழலில், ஏற்கனவே பதவியேற்றபோது ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுப்பதில்லை என்று தாங்கள் கொண்ட கொள்கைப்படி இருவருமே விப்ரோவை விட்டு விலகினர்.அதன் பின்னர் டி கே குரியன் நிருவாக இயக்குநராகப் பதவியேற்றார்.[3] விப்ரோவின் நிர்வாக இயக்குநர்களின் பதவி விலகல் செய்தியை முதலில் ஊடகத்திற்குத் தந்தவர் காக்னிசன்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான பிரான்சிஸ் டி சௌசா.

நுகர்வோர் சேவை மற்றும் விளக்குகள் தொகு

  • "விப்ரோவின் நுகர்வோர் சேவை மற்றும் விளக்குகள் "அத்துறையில் பல முன்னணி நிறுவனங்களை வாங்கியுள்ளது. 2004 ஆம் ஆண்டு கேரளாவை அடிப்படையாகக் கொண்ட சந்திரிகா சோப் நிறுவனத்தை வாங்கியது.
  • லண்டனின் யார்ட்லி (yardley) நிறுவனத்தின் சோப்பு,வாசனைத் திரவியங்கள் போன்ற பொருட்களின்ஆசிய, மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் வியாபாரத்தை 2009 ஆம் ஆண்டு விப்ரோ வாங்கியது.

...

மைல்கற்கள் தொகு

 
விப்ரோ மென்பொருள் நிறுவனம், சோழிங்கநல்லூர், சென்னை
  • 1945ல் வெஸ்டர்ன் இந்தியா வெஜிடபிள் பிராடக்ட்ஸ் என்ற பெயரில் தொடக்கம்
  • 1946ல் ஐபிஓ
  • 1984 விப்ரோ மென்பொருள் நிறுவனம் தொடக்கம்
  • மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை[நவம்பர் 2014] - 154,297[4]
  • வருவாய் [மே 31, 2014] - 7.3 பில்லியன்[5]
  • நியூயார்க் பங்குச் சந்தையால் 2000ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்டுள்ளது.
  • 2002 விப்ரோ பிபிஓ

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  2. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).[தொடர்பிழந்த இணைப்பு]
  3. http://forbesindia.com/article/boardroom/behind-the-czars-decree-whats-happening-at-wipro/21892/1
  4. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  5. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
"https://ta.wikipedia.org/w/index.php?title=விப்ரோ&oldid=3571675" இருந்து மீள்விக்கப்பட்டது