பூச்சோங்

பூச்சோங்

பூச்சோங், (மலாய்: Puchong; ஆங்கிலம்: Puchong; சீனம்: 蒲种); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு முக்கியமான நகரம்.[1]

பூச்சோங்
நகரம்
Puchong
பூச்சோங் is located in மலேசியா
பூச்சோங்
பூச்சோங்
தீபகற்ப மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 3°0′6″N 101°37′37″E / 3.00167°N 101.62694°E / 3.00167; 101.62694
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்பெட்டாலிங் மாவட்டம்
அமைவு1900
பரப்பளவு
 • மொத்தம்51.71 km2 (19.97 sq mi)
மக்கள்தொகை (2016)
 • மொத்தம்360,000
 • அடர்த்தி6,486.54/km2 (16,800.1/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
மலேசிய அஞ்சல் குறியீடு47100
43300 (ஸ்ரீ கெம்பாங்கான்)
58200 (கோலாலம்பூர்)
மலேசியத் தொலைபேசி எண்+603-80 and +603-58, rarely +60-3-77, +60-3-79, +603-83 and +603-89
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்B

இந்த நகரத்தின் வடக்கில் சுபாங் ஜெயா; தெற்கில் சிப்பாங் மற்றும் புத்ராஜெயா; கிழக்கில் செர்டாங்; மேற்கில் புத்ரா அயிட்ஸ் ஆகிய இடங்கள் எல்லைகளாக உள்ளன.

வரலாறு தொகு

பூச்சோங் பகுதியில் முதலில் கம்போங் பூலாஸ் '(Kampung Pulas)' எனும் கிராமத்தில் [[ஒராங் அஸ்லி[[ சமூகத்தினர் குடியேறி உள்ளார்கள்.

1900-ஆம் ஆண்டுகளில், ஹெரான் (burung puchong) எனும் கொக்குகள் இந்தப் பகுதியில் ஏராளமாக இருந்தன. அவையே ஒராங் அஸ்லி மக்களுக்கு பிரதான உணவாகவும் அமைந்தது.[2]

ஒராங் அஸ்லி மக்கள் தொகு

இருப்பினும், ஒராங் அஸ்லி மக்களுக்குப் பின்னர், சுமத்திரா மற்றும் ஜாவா தீவுகளில் இருந்து இந்தோனேசியர்கள் குடியேறி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

முதலில் இவர்கள் மீன் வியாபாரிகளாகவும், ரப்பர் தோட்டத் தொழிலாளிகளாகவும், சுரங்கத் தொழிலாளிகளாகவும் வேலை செய்தனர்.

ஈயச் சுரங்கத் தொழில் வளர்ச்சியின் காரணமாக, சீனாவில் இருந்து சீனர்கள் குடியேறினார்கள். ரப்பர் தோட்டங்கள் திறக்கப் பட்டதால் இந்தியாவில் இருந்து இந்தியர்கள் குடியேறினார்கள்.[2]

கம்யூனிஸ்டு கிளர்ச்சி தொகு

1948-ஆம் ஆண்டு கம்யூனிஸ்டு கிளர்ச்சியின் போது, பூச்சோங்கில் இருந்த​​ அனைத்துக் குடியிருப்பாளர்களும் கம்போங் பாரு பத்து 14 என்று அழைக்கப்படும் புதிய பகுதிக்கு மீள்குடியேற்றம் செய்யப் பட்டனர்.[2]

1980-களில், பூச்சோங் தோட்டங்கள் மற்றும் கிராமங்களுக்குச் செல்ல ஒரே ஒரு சாலை தான் இருந்தது.

துரித வளர்ச்சி தொகு

சுரங்கத் தொழில்கள் அற்றுப் போனதும், 1985-ஆம் ஆண்டில் அதன் உள்கட்டமைப்பு வளர்ச்சி பெறத் தொடங்கியது. இப்போது மாபெரும் வளர்ச்சி கண்டு மலைக்க வைக்கிறது.[3]

அதன் பின்னர், பூச்சோங்கில் பல தொழில் பூங்காக்கள், வணிக மையங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் உருவாகின. நகரமயமாக்கல் துரிதமாக நிகழ்ந்தது.

ஆளுகை தொகு

பூச்சோங் நான்கு உள்ளூர் அதிகாரங்களின் அதிகார வரம்பிற்குள் உட்பட்டு உள்ளது:

கோலாலம்பூர் மாநகர் மன்றம் தொகு

பூச்சோங் 5-ஆவது மைலில் இருந்து 7-ஆவது மைல் வரை: கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் (DBKL - Kuala Lumpur City Hall) அதிகார வரம்பிற்கு உட்பட்டது. (செபுத்தே - Seputeh அதிகார வரம்பு).

சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் தொகு

கின்ராரா (Kinrara), 8-ஆவது மைலில் இருந்து 16-ஆவது மைல் வரை: தாமான் பூச்சோங் உத்தாமா (Taman Puchong Utama); தாமான் சௌஜானா பூச்சோங் (Taman Saujana Puchong); பூச்சோங் பிரிமா (Puchong Prima); புக்கிட் பூச்சோங் 1 (Bukit Puchong 1); பண்டார் புத்திரி (Bandar Puteri) மற்றும் பூச்சோங் பெர்மாய் (Puchong Permai) ஆகியவை பெட்டாலிங் மாவட்டத்தில் சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் (Subang Jaya City Council) கீழ் உள்ளன.

சிப்பாங் நகராண்மைக் கழ்கம் தொகு

புக்கிட் பூச்சோங் 2 (Bukit Puchong 2); 16 சியரா (16 Sierra); புலாவ் மெராந்தி (Pulau Meranti); பண்டார் நுசாபுத்ரா (Bandar Nusaputra); தாமான் புத்ரா பெர்டானா (Taman Putra Perdana); தாமான் புத்ரா பிரிமா (Taman Putra Prima); தாமான் மெராந்தி ஜெயா (Taman Meranti Jaya); மற்றும் தாமான் மாஸ் (Taman Mas); சிப்பாங் மாவட்டத்தின் சிப்பாங் நகராண்மைக் கழ்கத்தின் (Sepang Municipal Council) கீழ் உள்ளன.[4]

கோலா லங்காட் நகராண்மைக் கழ்கம் தொகு

பண்டார் சௌஜானா புத்ராவிற்கு (Bandar Saujana Putra) அருகில் உள்ள எஞ்சிய பகுதிகளான தாமான் டகாங் மாஸ் (Taman Dagang Mas); கோய் பிரிமா (Koi Prima); மற்றும் புத்ரா தொழில் பூங்கா (Putra Industrial Park), கோலா லங்காட் மாவட்டத்தின் கோலா லங்காட் நகராண்மைக் கழ்கத்தின் (Kuala Langat District) கீழ் உள்ளன.[5]

பூச்சோங் நகர மையம் (Pusat Bandar Puchong) பெரும்பாலும் பெட்டாலிங் மாவட்டத்தின் சுபாங் ஜெயா உள்ளூர் ஆட்சியின் அதிகார எல்லைக்குள் அமைந்து உள்ளது.

மக்கள் தொகையியல் தொகு

2010-ஆம் ஆண்டு நிலவரப்படி, பூச்சோங் பகுதியின் மக்கள் தொகை 356,125.[6]

மலேசிய புள்ளியியல் துறையின் 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள்.[6]

பூச்சோங் மக்கள் தொகை இனவாரியாக (2010)
இனம் மக்கள் தொகை விழுக்காடு
பூமிபுத்ரா 141,051 39.61%
மலேசியச் சீனர்கள் 133,043 37.36%
மலேசிய இந்தியர்கள் 50,843 14.27%
இதர இனத்தவர் 1,935 0.55%
மலேசியர் அல்லாதவர் 29,253 8.21%

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Puchong
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பூச்சோங்&oldid=3500262" இருந்து மீள்விக்கப்பட்டது