மலேசிய அஞ்சல் குறியீடுகள்

மலேசிய அஞ்சல் குறியீடுகள் (ஆங்கில மொழி: Postal Codes, மலாய்: Poskod) ஐந்து இலக்கங்களைக் கொண்டவையாகும். முதல் இரு இலக்கங்களும் மாநிலம் அல்லது கூட்டரசு பிரதேசத்தைக் குறிக்கும். (எ.கா. 30000 ஈப்போ, பேராக்).

சில இடங்களில் இரு மாநிலங்களுக்கு அருகில் இருக்கும் இடங்களின் அஞ்சல் குறியீடுகள் மாறுபடுவது உண்டு. அதனால், வேறு மாநிலத்தின் அஞ்சல் குறியீடு பயன்படுத்தப்படும். வேறு மாநிலத்தில் உள்ள ஓர் அஞ்சலகம் கடிதப் பட்டுவாடா செய்யும் போது, அந்த மாநிலத்தின் அஞ்சல் குறியீடே பயன்படுத்தப்படுகிறது.

வரலாறு தொகு

 
மலேசியாவில் உள்ள இடங்களின் முதல் இரு அஞ்சல் குறியீட்டு இலக்கங்கள்

மலேசிய அஞ்சல் துறையின் தலைமை இயக்குநராக இருந்த எம். ராஜ்சிங்கம் என்பவரால், மலேசியாவில் அஞ்சல் குறியீட்டு முறை தொடங்கப் பட்டது. இவர் 1976 லிருந்து 1986 வரை, மலேசிய அஞ்சல் துறையின் தலைமை இயக்குநர் பதவியை வகித்தார். 1976-ஆம் ஆண்டு கோலாலம்பூர் மாநகரத்திற்கு மட்டுமே அஞ்சல் குறியீட்டு முறை அமலில் இருந்தது. அஞ்சல் குறியீட்டு முறையை நாடு முழுமைக்கும் விரிவு படுத்த விரும்பிய எம். ராஜ்சிங்கம், பிரான்ஸ் நாட்டின் லா போஸ்டே அஞ்சல் துறையின் உதவியை நாடினார்.

அஞ்சல் குறியீட்டு முறை கடிதங்களைப் பட்டுவாடா செய்வதை எளிமை படுத்தியது. கடிதங்களில் காணப்படும் இலக்கங்களை அஞ்சல் கருவிகள் எளிதாக அடையாளம் கண்டன. கடிதப் பரிவர்த்தனைகளும் துரிதப் படுத்தப்பட்டன. அவரின் அரிய சேவைகளுக்காக, 2014-ஆம் ஆண்டு, மலேசியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான டார்ஜா பாங்லிமா ஜாசா நெகாரா மலாய்: Darjah Panglima Jasa Negara)எனும் டத்தோ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.[1]

அஞ்சல் குறியீடுகள் தொகு

மலேசிய மாநிலங்கள் மற்றும் கூட்டாட்சிப் பகுதிகளின் முதல் இரு அஞ்சல் குறியீட்டு இலக்கங்கள் கீழே தரப்படுகின்றன. மாநிலங்களின் தலைநகரங்கள் அடைப்புக் குறிகளில் உள்ளன.

கூட்டரசு பிரதேசங்கள் தொகு

  • கோலாலம்பூர் மாநகரம் 50xxx லிருந்து 60xxx வரையிலான குறியீடுகளைப் பயன்படுத்துகிறது. அவற்றுள் செராஸ், தாமான் மெலாவாத்தி, புக்கிட் லாஞ்சான், பாண்டான் இண்டா போன்ற இடங்கள் சிலாங்கூர் மாநிலத்தில் இருந்தாலும், அவற்றின் அஞ்சல் குறியீடுகள் மாறுபட்டுள்ளன.
  • புத்ராஜெயாவிற்கு 62xxx
  • லாபுவான் கூட்டரசு பிரதேசத்திற்கு 87xxx

மாநிலங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள் தொகு

  1. Sivanandam, Hemananthani (2014-06-09). "Due recognition for man behind Malaysia's postcode system". The Star (Malaysia) (Petaling Jaya, Malaysia: Star Publications (M) Bhd). http://www.thestar.com.my/News/Nation/2014/06/09/Due-recognition-for-man-behind-Malaysias-postcode-system/. பார்த்த நாள்: 2015-02-18.