கோலா திராங்கானு

திராங்கானு மாநிலத்தின் தலைநகரம்.
(கோலா திரங்கானு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோலா திராங்கானு (மலாய்: Kuala Terengganu; ஆங்கிலம்: Kuala Terengganu; சீனம்: 登嘉楼; ஜாவி: ترڠݢانو) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தின் நிர்வாகத் தலைநகரம்; அரசத் தலைநகரம்; மற்றும் கோலா திராங்கானு மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்.

கோலா திராங்கானு
Bandaraya Kuala Terengganu
City of Kuala Terengganu
 திராங்கானு
மாநிலத் தலைநகரம்
அரச நகரம்
வலது மேற்புறம் இருந்து
அபிடின் மசூதி, பளிங்கு மசூதி, கோலா திராங்கானு சைனாடவுன், டூயோங் தீவில் இருந்து கோலா திராங்கானு மசுதானா அரண்மனை
கோலா திராங்கானு-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் கோலா திராங்கானு
சின்னம்
Map
கோலா திராங்கானு is located in மலேசியா
கோலா திராங்கானு
      கோலா திராங்கானு
ஆள்கூறுகள்: 05°19′45″N 103°08′10″E / 5.32917°N 103.13611°E / 5.32917; 103.13611
நாடு மலேசியா
மாநிலம் திராங்கானு
மாவட்டம்கோலா திராங்கானு மாவட்டம்
கோலா நெருசு மாவட்டம்
நகராண்மை18 சனவரி 1979
மாநகரத் தகுதி1 சனவரி 2008
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்கோலா திராங்கானு மாநகராட்சி
 • மேயர்துவான் ரோசுலி லத்திப்
5 சூன் 2022
பரப்பளவு
 • மொத்தம்605[1] km2 (233.59 sq mi)
ஏற்றம்
15 m (49 ft)
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்3,75,424 [1]
 • அடர்த்தி557.94/km2 (1,445.07/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
20xxx
தொலைபேசி09-6xxxxxxx
வாகனப் பதிவெண்கள்T
இணையதளம்mbkt.terengganu.gov.my

இந்த நகரம், மாநிலத்தின் முதன்மைப் பொருளாதார மையமாகவும் விளங்குகிறது. கோலாலம்பூரில் இருந்து வடகிழக்கில் 440 கிலோமீட்டர் தொலைவில் தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரையோரம் அமைந்து உள்ளது. இந்த நகரம் திராங்கானு ஆற்றின் கழிமுகப் பகுதியில் தென் சீனக் கடலை நோக்கியபடி அமைந்து உள்ளது.

கோலா திராங்கானு மாவட்டம் பரப்பளவில் மிகச் சிறியது. ஆனால், நகரப் பகுதியை உள்ளடக்கிய கோலா நெருஸ் மாவட்டத்தையும் சேர்த்து அதிக மக்கள் தொகையைக் கொண்டது. 2010-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 406,317.[1][2] 2008 சனவரி 1-ஆம் தேதி கரையோர மரபுரிமை நகரம் எனும் பெயருடன் மாநகரத் தகுதி வழங்கப்பட்டது.

பொது

தொகு

இந்த நகரம், திராங்கானு மாநிலத்தின் முக்கியமான அரசியல், பொருளாதார மையமாக இருப்பதுடன், மாநிலத்தின் பல சுற்றுலா மையங்களுக்கான நுழைவாயிலாகவும் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள கம்போங் சீனா, பசார் பெசார் கெடாய் பாயாங் (Pasar Besar Kedai Payang), திராங்கானு மாநில அருங்காட்சியகம் (Terengganu State Museum), பத்து பூரோக் கடற்கரை (Batu Buruk Beach) போன்றவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களாக உள்ளன.

நனீனத்துவமும், வளர்ச்சியும் இந்த நகரத்தையும் விட்டுவைக்கவில்லை எனினும், கோலா திராங்கானு துறைமுகமாக அதன் நீண்ட வரலாற்றினூடாக ஏற்பட்ட பிற பண்பாட்டுக் கலப்புடன், வலுவான மலாய்ச் செல்வாக்கை இன்னும் தக்கவைத்து உள்ளது.[3]

வரலாறு

தொகு

திராங்கானு பற்றிய குறிப்புக்கள் காணப்படும் மிகப் பழைய மூலங்களுள் சீன வரலாற்று மூலங்களும் அடங்கும். சுயி அரச மரபு (Sui dynasty) காலத்தைச் சேர்ந்த சீன எழுத்தாளர் ஒருவரின் குறிப்பு; தான்-தான் (Tan-Tan) என்னும் அரசு; சீனாவுக்குத் திறை செலுத்தியதாகக் கூறுகிறது.[4][5] இந்தத் தான்-தான் அரசு திராங்கானு நிலப்பகுதிக்கு உட்பட்ட ஓர் இடத்தில் அமைந்து இருந்ததாகவும் கூறப் படுகிறது.[6]

சீனாவின் சுயி அரசமரபு வீழ்ச்சி அடைந்த பின்னர், தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரையில் இருந்த அந்தத் தான்-தான் அரசு; அந்தக் காலக் கட்டத்தில் சீனாவை ஆட்சி செய்த தாங் அரச மரபுக்குத் (Tang dynasty) திறை செலுத்தியது.[4] எனினும் 7-ஆம் நூற்றாண்டில் தான்-தான் அரசு ஸ்ரீ விஜயப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டது. அதன் பின்னர் சீனாவுக்குத் திறை செலுத்துவதை நிறுத்திக் கொண்டது.

  • 1226-இல் சாவோ ருகுவா (Zhao Rugua) எழுதிய சூ பான் சி (San-fo-ts’i) எனும் நூல்;

ஆகிய இரண்டு நூல்களும் திராங்கானுவை டெங்-யா-நு (Teng-ya-nu) அல்லது டெங்-யா-நுங் (Teng-ya-nung) என்று குறிப்பிடுகின்றன. ஸ்ரீ விஜயப் பேரரசை சான் போசி (San-fo-ts’i) என்று குறிப்பிடுகின்றன. திராங்கானுவை ஸ்ரீ விஜயப் பேரரசின் சிற்றரசு எனவும் குறிப்பிடுகின்றன.

மலாக்கா சுல்தானகத்தின் கட்டுப்பாட்டுக்குள் திராங்கானு

தொகு
 
கோலா திராங்கானுவில் ஜாலான் பங்கோல்
 
1882-ஆம் ஆன்டில் தீயினால் அழிந்து போன பழைய அரண்மனைக்குப் பதிலாக மசியா அரண்மனை கட்டப்பட்டது.
 
ஜூன் 1961-இல் கோலா திராங்கானுவில் ஒரு சீனக் கடையின் பின்னணியில் தெரு.

13-ஆம் நூற்றாண்டில் சிறீவிசயத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், மஜபாகித் பேரரசின் செல்வாக்கின் கீழ் திராங்கானு கண்காணிக்கப்பட்டது.[7] 15-ஆம் நூற்றாண்டில் மஜபாகித் அரசு, மலாயா தீபகற்பத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அயூத்தியா இராச்சியம் (Ayutthaya Kingdom), மலாக்கா சுல்தானகம் (Malacca Sultanate) ஆகிய இரு அரசுகளுடன் போட்டி போட்டது.

அந்தப் போட்டியில் மலாக்கா வெற்றி பெற்றது. அதன் பின்னர் திராங்கானு நிலப்பகுதி, மலாக்கா சுல்தானகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.[8] 1511ல் மலாக்கா போர்த்துக்கீசியயரால் தோற்கடிக்கப் பட்டதும்; புதிதாக உருவான ஜொகூர் சுல்தானகம் (Sultanate of Johor), திரங்கானு உள்ளிட்ட முன்னைய மலாக்கா சுல்தானகத்தின் பல ஆட்சிப் பகுதிகளைத் தன் செல்வாக்கிற்குள் கொண்டு வந்தது.

அந்த வகையில் 17-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சில காலம் திராங்கானு, அச்சே சுல்தானகத்தின் (Aceh Sultanate) கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஆனாலும், அதே அந்த 17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜொகூர் சுல்தானகம் மீண்டும் திராங்கானு மீது தன் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டது.

திராங்கானு சுல்தானகம்

தொகு

தற்போதைய திராங்கானு சுல்தானகம் 1708-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.இதன் முதலாவது சுல்தான்: முதலாவது சைனல் ஆப்தீன் (Sultan Zainal Abidin I) தன்னுடைய ஆட்சிப் பீடத்தை கோலா பேராங்கில் நிறுவினார். பின்னர் சில தடவைகள் தன் ஆட்சிப் பீட இடங்களை மாற்றினார். பின்னர், இறுதியாக கோலா திராங்கானுவில் உள்ள புக்கிட் கிளேடாங் (Bukit Keledang) எனும் இடத்திற்கு அருகில் நிறுவினார்.

18-ஆம் நூற்றாண்டில் கோலா திராங்கானு ஒரு சிறிய நகரமாக இருந்தது. அந்த நகரத்தைச் சுற்றி ஆயிரம் வீடுகள் பரவி இருந்தன எனச் சொல்லப்பட்டது. அக்காலத்தில் ஏற்கனவே சீனர்கள் கோலா திராங்கானுவில் காணப் பட்டனர். அந்தக் கட்டத்தில் கோலா திராங்கானு நகரின் மக்கள் தொகையில் அரைப் பங்கினர் சீனர்கள். அவர்கள் வேளாண்மையிலும், வணிகத்திலும் ஈடுபட்டு இருந்தனர்.[9][10]

1831-ஆம் ஆண்டில் சுல்தான் தாவூத் (Sultan Daud) இறந்த பின்னர் தெங்கு மன்சூர் (Tengku Mansur), தெங்கு ஓமார் (Tengku Omar) ஆகியோரிடையே வாரிசுரிமைப் போட்டி ஏற்பட்டு உள்நாட்டுப் போராக வெடித்தது.

சுல்தான் ஓமார்

தொகு

அப்போது தெங்கு ஓமார் புக்கிட் புத்திரி (Bukit Puteri) எனும் இடத்தில் இருந்தார். தெங்கு மன்சூர் பாலிக் புக்கிட் (Balik Bukit) எனும் இடத்தில் இருந்தார். இறுதியில் தெங்கு ஓமார் தோல்வியுற்று கோலா திராங்கானுவை விட்டுத் தப்பியோடினார்.

தெங்கு மன்சூர், சுல்தான் இரண்டாவது மன்சூர் (Sultan Mansur II) என்னும் பெயரில் அடுத்த சுல்தானானார். 1837-ஆம் ஆண்டில் சுல்தான் மன்சூர் இறக்கவே அவரின் மகன் சுல்தான் முகமத் என்னும் பெயரில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

1839-ஆம் ஆண்டில் படையுடன் திராங்கானுவுக்குத் திரும்பிய தெங்கு ஓமார், சுல்தான் முகமத்தைத் தோற்கடித்து சுல்தான் ஓமார் என்னும் பெயரில் முடி சூடிக் கொண்டார்.

நிர்வாகம்

தொகு
 
மாநிலச் செயலகக் கட்டிடம் விஸ்மா டாருல் இமான். திராங்கானு சட்டமன்றம் மற்றும் மந்திரி பெசார் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.
 
கோலா திராங்கானு நகர சபை; மற்றும் திராங்கானு மாநிலப் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்; ஆகியவற்றின் அலுவலகங்கள் உள்ள் கட்டிடம்

கோலா திராங்கானு மாநகராட்சி (Kuala Terengganu City Council) கோலா திராங்கானு மாநகரத்தை நிர்வகிக்கிறது, இந்த மாநராட்சி, கோலா நெருஸ் மாவட்டத்தை உள்ளடக்கியது.

திராங்கானு ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்து உள்ள கோலா திராங்கானு மாவட்டம்; அதன் பகுதிகளை இருப்பிடம் மாவட்டத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது.

கோலா திராங்கானு உத்தாரா

தொகு

ஒரு பகுதி கோலா திராங்கானு உத்தாரா (Kuala Terengganu Utara) (வடக்கு கோலா திராங்கானு). இந்தப் பகுதி இப்போது கோலா நெருசு (Kuala Nerus) என்று அழைக்கப் படுகிறது.

கோலா திராங்கானு செலாத்தான்

தொகு

மற்றொரு பகுதி கோலா திராங்கானு செலாத்தான் (Kuala Terengganu Selatan) (தெற்கு கோலா திராங்கானு). இது தான் கோலா திராங்கானு மாநகரின் மையமாகக் கருதப் படுகிறது.

கோலா திராங்கானு மாநகரம், மாநிலத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரச் செயல்பாடுகளுக்கு இன்றியமையாதது. மாநில மற்றும் மத்திய அரசு நிறுவனங்களின் நிர்வாகக் கட்டிடங்களுக்கான மையமாக விளங்குகிறது. பல அமைச்சகங்களின் துறைகள் மற்றும் அரசாங்க அமைப்புகளின் அலுவலகங்கள் இங்கு உள்ளன.

கோலா திராங்கானுவில் சுல்தானின் அரண்மனைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக இஸ்தானா படரியா (Istana Badariah) மற்றும் இஸ்தானா மசியா (Istana Maziah).

நான்கு மாநிலச் சட்டமன்றப் பிரிவுகள்

தொகு

மலேசியாவின் தேர்தல் ஆணையம் கோலா திராங்கானுவை நான்கு மாநிலச் சட்டமன்றப் பிரிவுகளாகப் பிரித்து உள்ளது, அவை:[11]

  1. N13 - வாக்காப் மாம்பலம் (Wakaf Mempelam)
  2. N14 - பண்டார் (Bandar)
  3. N15 - லாடாங் (Ladang)
  4. N16 - பத்து பூரோக் (Batu Buruk)

முக்கியச் சேவை மையங்கள்

தொகு
  • மலேசியா திராங்கானு பல்கலைக்கழகம் (Universiti Malaysia Terengganu)
  • சுல்தான் சைனல் அபிடின் பல்கலைக்கழகம் (Universiti Sultan Zainal Abidin)
  • ஆசிரியர் கல்வி நிறுவனம் (டத்தோ ரசாலி இஸ்மாயில் வளாகம்) (The Institute of Teacher Education Dato Razali Ismail Campus)
  • தொழில்துறை பயிற்சி நிறுவனம் (industrial training institute)
  • சுல்தான் ஜைனல் அபிடின் (UniSZA) போதனா மருத்துவமனைப் பல்கலைக்கழகம் (Universiti Sultan Zainal Abidin (UniSZA) Teaching Hospital)

சுல்தான் மாமுட் வானூர்தி நிலையம் (Sultan Mahmud Airport); சுல்தான் மிசான் ஜைனல் அபிடின் பல்நோக்கு அரங்கம் (Sultan Mizan Zainal Abidin Stadium) போன்ற சேவை மையங்களும் கோலா திராங்கானு மாவட்டத்திற்குள் அமைந்துள்ளன.

டூயோங் மெரினா உல்லாச விடுதியில் இருந்து கோலா திராங்கானு மற்றும் திராங்கானு ஆற்று முகத்துவாரத்தின் காட்சி.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 The total population and total area also includes the population and area for the district of Kuala Nerus, which was a part of the district of Kuala Terengganu, but Kuala Nerus is still under the jurisdiction of Kuala Terengganu City Council.
  2. "Total Population by Ethnic Group, Sub-district and State, Malaysia, 2010". Kuala Terengganu City Council. Archived from the original on 8 April 2015. பார்க்கப்பட்ட நாள் 22 March 2015.
  3. David Bowden (9 April 2013). "The East Coast of Malaysia, an Enchanting Encounter". Expat Go Malaysia. பார்க்கப்பட்ட நாள் 25 March 2015.
  4. 4.0 4.1 Nazarudin Zainun; Nasha Rodziadi Khaw; Tarmiji Masron; Zulkifli Jaafar (2009). "Hubungan Ufti Tan-Tan dan P'an-P'an dengan China pada Zaman Dinasti Sui dan Tang: Satu Analisis Ekonomi" (PDF) (in Malay). Beijing Foreign Studies University, University of Malaya. பார்க்கப்பட்ட நாள் 7 April 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. Paul Wheatley (1980). The Golden Khersonese: Studies in the Historical Geography of the Malay Peninsula Before A.D. 1500. University Malaya.
  6. George Cœdès (1968). The Indianized States of South-East Asia. University of Hawaii Press. pp. 52–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.
  7. Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society. Malaysian Branch of the Royal Asiatic Society. 1992.
  8. Encyclopaedia Britannica, Inc. (1 March 2009). Britannica Guide to the Islamic World. Encyclopaedia Britannica, Inc. pp. 380–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59339-849-1.
  9. Maznah Mohamad (1996). The Malay Handloom Weavers: A Study of the Rise and Decline of Traditional Manufacture. Institute of Southeast Asian Studies. pp. 89–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-3016-99-6.
  10. Yow Cheun Hoe (26 June 2013). Guangdong and Chinese Diaspora: The Changing Landscape of Qiaoxiang. Routledge. pp. 44–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-17119-2.
  11. "Peta Kawasan (Kawasan Parlimen Negeri Terengganu)". State Legislative Assembly of Terengganu. பார்க்கப்பட்ட நாள் 15 March 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலா_திராங்கானு&oldid=4035902" இலிருந்து மீள்விக்கப்பட்டது