மலாக்கா சுல்தானகம்
மலாக்கா சுல்தானகம் (மலாய் மொழி: Kesultanan Melaka; ஆங்கிலம்: Sultanate of Malacca; ஜாவி: کسلطانن ملاک); என்பது பரமேசுவரா எனும் சிங்கப்பூர் அரசரால் 1400-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட ஒரு சுல்தானகம் ஆகும். பரமேசுவரா என்பவர் இசுகந்தர் ஷா என்றும் அழைக்கப் படுகிறார்.[1]
Malacca Sultanate كسلطانن ملايو ملاك | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1402–1511 | |||||||||||||
தலைநகரம் | மலாக்கா | ||||||||||||
பேசப்படும் மொழிகள் | மலாய் | ||||||||||||
சமயம் | இசுலாம் | ||||||||||||
அரசாங்கம் | Monarchy (மரபுவழி அரசாட்சி) | ||||||||||||
சுல்தான் | |||||||||||||
வரலாறு | |||||||||||||
• தொடக்கம் | 1402 | ||||||||||||
1511 | |||||||||||||
நாணயம் | தங்க, வெள்ளிக் காசுகள் | ||||||||||||
|
15-ஆம் நூற்றாண்டில், மலாக்கா சுல்தானகத்தின் அதிகார உச்சத்தில், தீபகற்ப மலேசியாவின் பெரும்பகுதிகளும்; ரியாவ் தீவுகளும் உள்ளடக்கியதாக இருந்தது. அதன் காலத்தில் மிக முக்கியமான கடல்சார் துறைமுகங்களில் ஒன்றாகவும் விளங்கியது.[2]
பரபரப்பான பன்னாட்டு வர்த்தக துறைமுகமாகவும்; இஸ்லாமிய கற்றல் மற்றும் பரப்புதலுக்கான மையமாகவும் உருவெடுத்தது. மேலும் மலாய் மொழி, இலக்கியம் மற்றும் கலைகளின் வளர்ச்சிக்கும் ஊக்கமளித்தது.[3]
பொது
தொகு1511-ஆம் ஆண்டில், மலாக்காவின் தலைநகரம் போர்த்துகீசியப் பேரரசிடம் வீழ்ந்தது. மலாக்கா சுல்தானகத்தின் கடைசி சுல்தான் மகமுட் ஷா (1488 - 1511) மலாக்காவை விட்டு வெளியேறினார்.
அதன் பின்னர் அவரின் சந்ததியினர் ஜொகூர் சுல்தானகம் மற்றும் பேராக் சுல்தானகம் ஆகிய இரு புதிய சுல்தானகங்களை நிறுவினார்கள்.[4]
தாய்லாந்திற்கு கீழும் சுமாத்திராவிற்கு மேலேயும் உள்ள இடைப்பட்ட நிலத்தில் மலாக்கா சுல்தானகம் பரவியிருந்தது. இதன் தலைநகரத்தில் போர்த்துகீசியர் 1511-ஆம் ஆண்டில் படையெடுத்தனர். இதன் பின்னர் சுல்தான் மகமுட் ஷாவின் இரண்டாவது மகனார், அலாவுதீன் ரியாட் ஷா II என்பவரால் ஜொகூர் சுல்தானகம் நிறுவப்பட்டது.
மலாக்கா சுல்தான்கள்
தொகுமலாக்கா சுல்தான்கள் ஆட்சிக்காலம்
தொகுமலாக்கா சுல்தான்கள் | ஆட்சி காலம் |
---|---|
பரமேசுவரா | |
மெகாட் இசுகந்தர் ஷா | |
சுல்தான் முகமது ஷா | |
பரமேசுவரா தேவ ஷா | |
சுல்தான் முசபர் ஷா | |
சுல்தான் மன்சூர் ஷா | |
சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷா | |
சுல்தான் மகமுட் ஷா | |
சுல்தான் அகமட் ஷா | |
சுல்தான் மகமுட் ஷா |
மேற்கோள்கள்
தொகு- ↑ Cœdès, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press. pp. 245–246. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.
- ↑ Wheatley, Paul (1961). The Golden Khersonese: Studies in the Historical Geography of the Malay Peninsula before A.D. 1500. Kuala Lumpur: University of Malaya Press. pp. 306–307. இணையக் கணினி நூலக மைய எண் 504030596.
- ↑ Borschberg, Peter (28 July 2020). "When was Melaka founded and was it known earlier by another name? Exploring the debate between Gabriel Ferrand and Gerret Pieter Rouffaer, 1918−21, and its long echo in historiography". Journal of Southeast Asian Studies 51 (1-2): 175-196. doi:10.1017/S0022463420000168. https://www.cambridge.org/core/journals/journal-of-southeast-asian-studies/article/abs/when-was-melaka-founded-and-was-it-known-earlier-by-another-name-exploring-the-debate-between-gabriel-ferrand-and-gerret-pieter-rouffaer-191821-and-its-long-echo-in-historiography/CAA1748860BCD9B6247F6BFA6231278A.
- ↑ Wheatley, Paul (1961). The Golden Khersonese: Studies in the Historical Geography of the Malay Peninsula before A.D. 1500. Kuala Lumpur: University of Malaya Press. pp. 306–307. இணையக் கணினி நூலக மைய எண் 504030596.