சுல்தான் மாமுட் வானூர்தி நிலையம்

மலேசியா, திராங்கானு மாநிலத்தில் அமைந்துள்ள வானூர்தி நிலையம்

சுல்தான் மாமுட் வானூர்தி நிலையம் அல்லது கோலா திராங்கானு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: TGGஐசிஏஓ: WMKN); (ஆங்கிலம்: Sultan Mahmud Airport அல்லது Kuala Terengganu Airport; மலாய்: Lapangan Terbang Sultan Mahmud) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தில், கோலா நெருஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள வானூர்தி நிலையம் ஆகும்.[1][2]

சுல்தான் மாமுட்
வானூர்தி நிலையம்
Sultan Mahmud Airport
  • ஐஏடிஏ: TGG
  • ஐசிஏஓ: WMKN
    WMKN is located in மலேசியா
    WMKN
    WMKN
    சுல்தான் மாமுட்
    வானூர்தி நிலையத்தின் அமைவு
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்மலேசிய வானூர்தி நிலையங்கள் நிறுவனம்
இயக்குனர்மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்
Malaysia Airports Holdings Berhad
சேவை புரிவதுகோலா திராங்கானு, மலேசியா
அமைவிடம்கோலா நெருஸ், திராங்கானு, மலேசியா
நேர வலயம்மலேசிய நேரம் (ஒ.ச.நே + 08:00)
உயரம் AMSL21 ft / 6 m
ஆள்கூறுகள்05°22′53″N 103°06′17″E / 5.38139°N 103.10472°E / 5.38139; 103.10472
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
04/22 3,480 11,417 தார்
புள்ளிவிவரங்கள் (2018)
பயணிகள் போக்குவரத்து894,737 ( 5.2%)
சரக்கு (டன்கள்)363 (Increase 47.1%)
வானூர்தி போக்குவரத்து10,637 ( 7.4%)

இந்த வானூர்தி நிலையம், கோலா திராங்கானு மாநகர் மக்களுக்கும்; திராங்கானு மாநில மக்களுக்கும்; கிளாந்தான் மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள மக்களுக்கும் வானூர்திச் சேவையை வழங்கும் நிலையமாக விளங்குகிறது.

1979-ஆம் ஆண்டில் இருந்து 1998-ஆம் ஆண்டு வரை திராங்கானு மாநிலத்தை ஆட்சி செய்த சுல்தான் மகமூத் அல்-முக்தாபி பில்லா ஷாவின் (Sultan Mahmud Al-Muktafi Billah Shah) நினைவாக இந்த விமான நிலையத்திற்குப் பெயரிடப்பட்டது.

பொது

தொகு

2008-ஆம் ஆண்டில், சுல்தான் மாமுட் வானூர்தி நிலையத்தை மேம்படுத்த மலேசிய அரசாங்கம் 200 மில்லியன் ரிங்கிட் வழங்கியது. ஓடுபாதையை நீட்டிக்கவும், வானூர்தி நிலையத்தின் முனையத்தை மேம்படுத்தவும் அந்த நிதி பயன்படுத்தப்பட்டது.[3]

ஒவ்வோர் ஆண்டும் 2 மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் இந்த வானூர்தி நிலையத்த்தின் முனையம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

போயிங் 747-400 வானூர்தி

தொகு

சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா மற்றும் மதீனா வழியாக மக்காவிற்கு பயணிகளை கொண்டு செல்ல மலேசியா எயர்லைன்சு நிறுவனம் தாபோங் அஜி (Tabung Haji) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

2008 அக்டோபர் 11-ஆம் தேதி, மலேசியா எயர்லைன்சு நிறுவனத்தின் மிகப் பெரிய போயிங் 747-400 ரக வானூர்தி (Boeing 747-400) அங்கு தரையிறங்கியது. பெரிய ரக வானூர்திகள் சுல்தான் மாமுட் வானூர்தி நிலையத்தில் தரை இறங்க முடியும் என்பதற்கு அந்த நிகழ்வு ஒரு சான்றாக அமைந்தது.

வானூர்திச் சேவைகள்

தொகு
சேவைகள் சேரிடங்கள்
ஏர்ஏசியா கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (சிப்பாங்); கோத்தா கினாபாலு
பயர்பிளை சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம் (கோலாலம்பூர்–சுபாங்)
மலேசியா எயர்லைன்சு கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (சிப்பாங்)
மலின்டோ ஏர் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம் (கோலாலம்பூர்–சுபாங்)

உள்நாட்டுச் சேவைகள்

தொகு
பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வானூர்திகளின் புள்ளிவிவரங்கள்
ஆண்டு பயணிகள்
வருகை
பயணிகள்
% மாற்றம்
சரக்கு
(டன்கள்)
சரக்கு
% மாற்றம்
வானூர்தி
நகர்வுகள்
வானூர்தி
% மாற்றம்
2003 394,240   160   5,508  
2004 435,620  10.5 124 22.5 5,834   5.9
2005 419,475 3.7 94 24.2 5,622 3.6
2006 398,252 5.1 70 25.5 3,792 32.5
2007 430,800  8.2 47 32.8 8,781   131.6
2008 487,495  13.2 24 49.0 10,045   14.4
2009 523,619  7.4 24   9,875 1.7
2010 520,611 0.6 50  108.3 10,959   11.0
2011 502,966 3.4 103  106.0 14,296   30.4
2012 550,831  9.5 147  42.7 12,809 10.4
2013 699,310  27.0 103 29.7 11,402 11.0
2014 842,651   20.5 148   43.8 14,057   23.3
2015 857,239   1.7 329   121.9 12,587 10.5
2016 900,218   5.0 253 23.1 12,066 4.1
2017 943,660   4.8 247 2.4 11,485 4.8
2018 894,737 5.2 363   47.1 10,637 7.4
2019 913,829   2.1 427   47.1 11,072   4.1
2020 302,280 66.9 173 59.4 5,519 50.2
சான்று: மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்[4]

இலக்குகள்

தொகு
'சுல்தான் மாமுட் வானூர்தி நிலையத்தின் உள்நாட்டுச் சேவைகள் (2022 மே மாதம் - புள்ளிவிவரங்கள்)
தரவரிசை இலக்குகள் பயணங்கள்
(வாரம்)
வானூர்தி
நிறுவனங்கள்
Note
1   கோலாலம்பூர்–சுபாங்
சிலாங்கூர்
33 FY, OD
2   கோலாலம்பூர்–சிப்பாங்
கோலாலம்பூர்
26 AK, MH
3   கோத்தா கினபாலு, சபா 2 AK

மேற்கோள்கள்

தொகு
  1. Sultan Mahmud Airport, Kuala Terengganu at Malaysia Airports Holdings Berhad
  2. WMKN - KUALA TERENGGANU/SULTAN MAHMUD at Department of Civil Aviation Malaysia
  3. "Airport to be upgraded". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-13.
  4. "Malaysia Airports: Airports Statistics 2020" (PDF). malaysiaairports. 2 April 2021. Archived from the original (PDF) on 28 ஜூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 5 October 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு