சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம்

சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம் அல்லது சுபாங் பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஆங்கிலம்: Sultan Abdul Aziz Shah Airport அல்லது Subang International Airport; மலாய்: Lapangan Terbang Sultan Abdul Aziz Shah அல்லது Lapangan Terbang Subang; சீனம்: 苏丹阿都阿兹沙机场; ஜாவி: لاڤڠن تربڠ انتارابڠسا سلطان عبدالعزيز شه) என்பது மலேசியாவின் முன்னாள் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.

சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம்
Sultan Abdul Aziz Shah Airport
புதியதாக புதுப்பிக்கப்பட்ட சுபாங் இசுக்கை பார்க் (Skypark) முனையத்தின் தோற்றம்
  • ஐஏடிஏ: SZB
  • ஐசிஏஓ: WMSA
    Sultan Abdul Aziz Shah Airportt is located in மலேசியா
    Sultan Abdul Aziz Shah Airportt
    Sultan Abdul Aziz Shah Airportt
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொதுத்துறை
உரிமையாளர்மலேசிய அரசு
இயக்குனர்சுபாங் இசுக்கை பார்க்கு Sdn Bhd
சேவை புரிவதுகிள்ளான் பள்ளத்தாக்கு, மலேசியத் தீபகற்பம்
அமைவிடம்சுபாங், சிலாங்கூர், மலேசியத் தீபகற்பம்
மையம்ராயா வானூர்தி நிறுவனம்
நேர வலயம்மலேசிய நேரம் (UTC+08:00)
உயரம் AMSL89 ft / 27 m
ஆள்கூறுகள்03°07′52″N 101°32′53″E / 3.13111°N 101.54806°E / 3.13111; 101.54806
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
15/33 3,780 12,402 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2013)
பயணிகள்1859020
பயணிகளில் மாற்றம் 12–1328.9%
வானூர்தி போக்குவரத்து80047
போக்குவரத்தில் மாற்றம் 12–138.2%
மூலம்: அலுவல்முறை வலைத்தளம்[1]
வான்வழிப் போக்குவரத்து தகவல் வெளியீடு, மலேசியா[2]

இந்தப் பன்னாட்டு வானூர்தி நிலையத்தை, சுபாங் விமான நிலையம் (Subang Airport) அல்லது சுபாங் வானூர்தி நிலையம் என்றும் சுருக்கமாக முன்னர் அழைத்தனர்.

பொது தொகு

இந்தப் பன்னாட்டு வானூர்தி நிலையம் மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தின் சுபாங் புறநகர் பகுதியில் அமைந்துள்ள வானூர்தி நிலையமாகும். இது பொது வான்வழிப் போக்குவரத்திற்கும் உள்ளூர் பயணங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

இதனைக் குறைந்த கட்டண வான்சேவைகளுக்கான மையமாக மாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டன. இருப்பினும் சுபாங் ஜெயா நகர மக்களின் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டது.

முதன்மை வானூர்தி நிலையம் தொகு

1998-இல் சிப்பாங்கில் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் திறக்கப்படும் வரை சுபாங் பன்னாட்டு வானூர்தி நிலையமே கோலாலம்பூரின் முதன்மை வானூர்தி நிலையமாக விளங்கியது.

தற்போது இந்த நிலையம் பயர்பிளை வானூர்திச் சேவை (Firefly), மலின்டோ ஏர் (Batik Air Malaysia) வணிக சேவைகளின் வானூர்திகளுக்கு அச்சு மையமாக விளங்குகிறது.

இருப்பினும் இந்த நிலையத்திற்கு அண்மையில் வசிப்போர் இங்கு தாரைப் பொறி வானுர்திகள் இயக்கப் படுவதையும்; அவை கிளப்பும் ஓசைக்காகவும் எதிர்ப்பு தெரித்து வருகின்றனர்.

வரலாறு தொகு

சுபாங் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 1961-ஆம் ஆண்டில் தொடங்கின. 1965-ஆம் ஆண்டில் $64 மில்லியன் செலவில் முடிக்கப்பட்டன. எளிமையான வடிவமைப்பு. மிதக்கும் கான்கிரீட் ஓடுகளால் ஆன கூரையைக் கொண்டிருந்தது.

இந்த விமான நிலையம் 30 ஆகஸ்ட் 1965 அன்று அதிகாரப்பூர்வமாக போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. மேலும் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக நீளமான ஓடுபாதையைக் (3.7 கிமீ நீளம், 45 மீ அகலம்) கொண்டு இருந்தது.[3]

மூன்று முனையங்கள் தொகு

1990-களில், விமான நிலையம் மூன்று முனையங்களைக் கொண்டிருந்தது. பன்னாட்டு விமானங்களுக்கான முனையம் 1; சிங்கப்பூர் விமான நிறுவனம் மற்றும் மலேசியா விமான நிறுவனம் மூலம் சிங்கப்பூருக்கான முனையம் 2; உள்நாட்டு விமானங்களுக்கான முனையம் 3.

தன்னுடைய சேவை காலத்தின் முடிவில், இந்த விமான நிலையம் குறைந்தது இரண்டு பெரிய தீ விபத்துகளை சந்தித்தது. இதனால் போக்குவரத்தை மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஏர் ஏசியா விமான நிறுவனம் தொகு

1997-ஆம் ஆண்டின் இறுதியில், சுபாங் விமான நிலையம் 15.8 மில்லியன் பயணிகளைக் கையாண்டது. 2003 இல் முனையம் 1 இடிக்கப்பட்டது.[4]

ஜூலை 2002-இல், ஏர் ஏசியா விமானங்கள், கே.எல்.ஐ.ஏ. சிப்பாங் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து பறக்கத் தொடங்கின. இருப்பினும் 2004-இல், ஏர் ஏசியா விமான நிறுவனம், இந்த நிலையத்தைத் தன்னுடைய முதன்மை மையமாகப் பயன்படுத்தக் கருதியது. ஆனால், அந்த திட்டத்தை மலேசிய அரசாங்கம் நிராகரித்து விட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. Sultan Abdul Aziz Shah Airport, Subang பரணிடப்பட்டது 2012-03-08 at the வந்தவழி இயந்திரம் at Malaysia Airports Holdings Berhad
  2. WMSA – SUBANG/SULTAN ABDUL AZIZ SHAH பரணிடப்பட்டது 2013-12-27 at the வந்தவழி இயந்திரம் at Department of Civil Aviation Malaysia
  3. Kumar, Prem (29 August 1965). "All Set for Airport Opening". The Straits Times: 9. 
  4. "New Straits Times - Google News Archive Search". news.google.com.

மேலும் காண்க தொகு