ராயா வானூர்தி நிறுவனம்

மலேசியாவில் ஒரு சரக்கு வானூர்தி நிறுவனம்

ராயா வானூர்தி நிறுவனம் அல்லது ராயா ஏர்வேய்ஸ் (ஆங்கிலம்: Raya Airways (Raya Airways Sdn Bhd); மலாய்: Raya Airways (Raya Airways Sdn Bhd)) (TH/RMY) என்பது மலேசியா, சிலாங்கூர், சுபாங், சுல்தான் அப்துல் அசிஸ் ஷா வானூர்தி நிலையத்தின் சரக்கு மையத்தில் (Cargo Complex), தலைமை அலுவலகத்தைக் கொண்ட ஒரு சரக்கு வானூர்தி நிறுவனம் ஆகும்.[1]

ராயா வானூர்தி நிறுவனம்
Raya Airways
IATA ICAO அழைப்புக் குறியீடு
TH RMY Raya Express
நிறுவல்1993; 31 ஆண்டுகளுக்கு முன்னர் (1993) (Transmile Air Services)
மையங்கள்சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம்
வானூர்தி எண்ணிக்கை4
சேரிடங்கள்10
தலைமையிடம்சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம்
சுபாங், மலேசியா
வலைத்தளம்rayaairways.com

இந்த வானூர்தி நிறுவனம், நவம்பர் 1993-இல் திரான்சுமைல் ஏர் (Transmile Air) எனும் பெயரில் நிறுவப்பட்டது. பின்னர் 2014-ஆம் ஆண்டில் ராயா ஏர்வேய்ஸ் என பெயர் மாற்றம் கண்டது. ராயா வானூர்தி மையம் (Raya Airways Centre) எனும் வணிக மையத்தை உருவாக்கி, அங்கிருந்து இயங்கி வருகிறது.

தீபகற்ப மலேசியாவிற்கும்; கிழக்கு மலேசியாவிற்கும் இடையே, டி.எச்.எல். எக்ஸ்பிரஸ் (DHL Express); யுனைடெட் பார்சல் சர்வீஸ் (United Parcel Service); ஏர் மக்காவ் (Air Macau) மற்றும் சென் வோர்ல்டு வைட் (CEN Worldwide) ஆகிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு விரைவு அஞ்சல் போக்குவரத்து சேவைகளையும் வழங்கி வருகிறது.

1996-இல் மலேசியப் போக்குவரத்து அமைச்சகத்தால் தேசிய வானூர்தி சரக்கு சேவையாளராக (National Cargo Carrier) ராயா வானூர்தி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.[1]

வரலாறு தொகு

1993-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கிழக்கு மலேசியாவிற்கு விரைவு அஞ்சல் போக்குவரத்துச் சேவையை வழங்குவதில் இருந்து இந்த நிறுவனம் அதன் சேவையைத் தொடங்கியது.

அப்போது ஒரே ஒரு போயிங் 737 வானூர்தியையும்; ஒரு சிறிய செசனா வானூர்தியையும் (Cessna Grand) தன் சேவையில் ஈடுபடுத்தியது. பின்னர் பன்னாட்டு நிறுவனமாக வளர்ச்சி பெற்று, இன்று ஒரு சிறப்பான நிலையை அடைந்துள்ளது.

முதல் போயிங் 727 வானூர்திச் சேவை தொகு

இந்த நிறுவனத்தின் முதல் போயிங் 727 வானூர்திச் சேவை; 2000-ஆம் ஆண்டு கோலாலம்பூர் - பினாங்கு - பாங்காக் - ஆங்காங் அஞ்சல் போக்குவரத்துச் சேவைக்காகப் பயன்படுத்தப்பட்டது.

2005-ஆம் ஆண்டில், தென்கிழக்கு ஆசியாவில் அதிகரித்து வரும் சரக்குச் சேவைகளின் தேவை காரணமாக, ராயா ஏர்வேய்ஸ் அதன் போயிங் 727 ரக விமானங்களின் எண்ணிக்கையை 10-ஆக உயர்த்தியது.

அப்போது ராயா வானூர்தி நிறுவனம் பழைய டிரான்ஸ்மைல் ஏர் எனும் பெயரில்தான் இயங்கியது. 2014-ஆம் ஆண்டில் தான் பெயர் மாற்றம் கண்டது. 2005-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் - ஆங்காங் - லாஸ் ஏஞ்சல்ஸ் சேவையைத் தொடங்கியது.

விமானங்கள் தொகு

 
ராயா ஏர்வேய்ஸ் நிறுவனத்தின் போயிங் 767-200 ரக வானூர்தி.

2021 அக்டோபர் நிலவரப்படி, ராயா ஏர்வேஸ் நிறுவனம் பின்வரும் வானூர்திகளைக் கொண்டிருந்தது :[2]

ராயா ஏர்வேஸ் வானூர்திகள்
விமானம் எண்ணிக்கை
போயிங் 737 (Boeing 737-400F) 1
போயிங் 767 (Boeing 767-200BDSF) 3

இலக்குகள் தொகு

சீனா தொகு

மலேசியா தொகு

ஆங்காங் தொகு

இந்தோனேசியா தொகு

சிங்கப்பூர் தொகு

வியட்நாம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "MAB Kargo Sdn Bhd, also known as MASkargo is the cargo arm for Malaysia Airlines and a subsidiary of its parent company Malaysia Aviation Group, which operates scheduled and chartered air cargo services, ground handling services as well as airport to seaport cargo logistics via ground transportation". www.maskargo.com. பார்க்கப்பட்ட நாள் 9 June 2022.
  2. "Global Airline Guide 2019 (Part One)". Airliner World October 2019: 20. 
  3. "Raya Airways is first Malaysian freight service into Nanning, China" (PDF). Raya Airways (in ஆங்கிலம்). 15 June 2021.

மேலும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Raya Airways
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராயா_வானூர்தி_நிறுவனம்&oldid=3443818" இலிருந்து மீள்விக்கப்பட்டது