மிரி வானூர்தி நிலையம்
மிரி வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: MYY, ஐசிஏஓ: WBGR); (ஆங்கிலம்: Miri Airport; மலாய்: Lapangan Terbang Miri) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தின் மிரி நகரில் அமைந்துள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.[2]
Miri Airport | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
உரிமையாளர் | கசானா நேசனல் Khazanah Nasional | ||||||||||
இயக்குனர் | மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம் Malaysia Airports Holdings Berhad | ||||||||||
சேவை புரிவது | மிரி; சரவாக், மலேசியா) | ||||||||||
அமைவிடம் | மிரி; சரவாக், கிழக்கு மலேசியா | ||||||||||
கவனம் செலுத்தும் நகரம் |
| ||||||||||
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒ.ச.நே + 08:00) | ||||||||||
உயரம் AMSL | 10 ft / 3.048 m | ||||||||||
ஆள்கூறுகள் | 04°19′31″N 113°59′18″E / 4.32528°N 113.98833°E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் (2020) | |||||||||||
|
இந்த விமான நிலையம் மலேசியாவில் ஆறாவது விறுவிறுப்பான விமான நிலையமாகவும்; சரவாக்கில் இரண்டாவது விறுவிறுப்பான விமான நிலையமாகவும் விளங்குகிறது.
இந்த வானூர்தி நிலையம், சரவாக் மாநிலத்தின் மிரி பிரிவு பகுதியில் வாழும் மக்களுக்கு வானூர்திச் சேவையை வழங்கும் நிலையமாக விளங்குகிறது. உள்நாட்டுச் சேவைகளை வழங்கி வருகிறது.
2020-ஆம் ஆண்டில், இந்த வானூர்தி நிலையத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை 876,402. அதே வேளையில் 5,345 விமான இயக்கங்களும் நடைபெற்று உள்ளன. மிரி நகர மையத்தில் இருந்து சுமார் 9.5 கி.மீ. தொலைவில் தென் பகுதியில் அமைந்துள்ளது.
பொது
தொகுமாஸ் விங்ஸ் (MASWings) டுவின் ஓட்டர் (Twin Otter) ரக விமானங்களின் சேவைகளுக்கு மிரி விமான நிலையம் ஒரு முக்கிய மையமாக உள்ளது. பிளை ஏசியான் எக்ஸ்பிரஸ் (FlyAsianXpress) எனும் விமானச் சேவை நிறுவனம், மிரியில் உள்ள பெரும்பாலான கிராமப்புற உள்நாட்டு இடங்களுக்குச் சேவைகளை வழங்கி வருகிறது.
சபா, சரவாக் மாநிலங்களுக்கு மத்தியிலும்; புரூணை நாட்டு எல்லைக்கு அருகிலும்; மிரி நகரம் இருப்பதால், கிராமப்புற விமானச் சேவைகளுக்கு ஏற்ற மையமாகவும், சரவாக் மாநிலத்திற்கான முக்கிய நுழைவாயிலாகவும் மிரி வானூர்தி நிலையம் அமைகின்றது.
இரண்டாவது பெரிய விமான நிலையம்
தொகுமிரி வானூர்தி நிலையம்; கூச்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு அடுத்த நிலையில், சரவாக் மாநிலத்தில் இரண்டாவது பெரிய விமான நிலையமாகும். இதன் முனையத் தளம் 16,448 மீ² பரப்பளவு கொண்டது.[3]
மலேசிய சிவில் விமானத் துறையும் (Department of Civil Aviation); மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனமும் (Malaysia Airports Holdings Berhad); மிரி வானூர்தி நிலையத்தை ஒரு பன்னாட்டு வானூர்தி நிலையமாக இன்னும் அங்கீகரிக்கவில்லை. இருப்பினும் திட்டமிடப்பட்ட சில வெளிநாட்டு விமானச் சேவைகளை இந்த நிலையம் வழங்கி வருகிறது.
வரலாறு
தொகுலுத்தோங் வானூர்தி நிலையம்
தொகுமிரி வானூர்தி நிலையத்தின் பழைய பெயர் லுத்தோங் வானூர்தி நிலையம் (Lutong Airport). மிரி நகரத்தின் துணை நகரமான லுத்தோங் நகரில் 1940-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது.
இது ஒரு தனியார் வானூர்தி நிலையம். 'அரச டச்சு செல்' (Royal Dutch Shell) எனும் எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமானது. இரன்டாம் உலகப் போரின் போது ஜப்பானியப் படைகளின் விமானத் தாக்குதலுக்கு உள்ளானது. 1954-ஆம் ஆண்டில் சீரமைக்கப் பட்டது. 1980-ஆம் ஆண்டுகள் வரை லுத்தோங் வானூர்தி நிலையம் எனும் பெயரில் செயல்பட்டது.[4]
மிரி வானூர்தி நிலையம்
தொகுமிரி நகரத்தின் மக்கள்தொகை பெருகியதால், விமானப் போக்குவரத்து எதிர்ப்பார்ப்பைக் குறைக்க, ஒரு பெரிய வானூர்தி நிலையம் தேவைப்பட்டது. ஒரு புதிய தளத்தைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நகர மையத்தின் தென்கிழக்கில் ஓர் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1980-ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் மிரி வானூர்தி நிலையம் முழுமையாகச் செயல்படத் தொடங்கியது.
வானூர்திச் சேவைகள்
தொகுவிமானச் சேவைகள் | சேரும் இடங்கள் |
---|---|
ஏர்ஏசியா | ஜொகூர் பாரு, கோத்தா கினபாலு, கோலாலம்பூர்–சிப்பாங், கூச்சிங், சிங்கப்பூர் |
மலேசியா எயர்லைன்சு | கோலாலம்பூர்–சிப்பாங், கூச்சிங் |
மலேசியா எயர்லைன்சு (மாஸ் விங்ஸ்) |
பாகெலாலான், பாரியோ, பிந்துலு, லபுவான், லாவாஸ், லிம்பாங், லோங் ஆகா, லோங் பங்கா, லோங் லேலாங், லோங் செரிடான், மருடி, முக்கா, முலு, சிபு |
சுகூட் | சிங்கப்பூர் |
சரக்குச் சேவை
தொகுவிமானச் சேவைகள் | சேரும் இடங்கள் |
---|---|
உலக சரக்கு விமானச் சேவை (World Cargo Airlines) |
கோத்தா கினபாலு, கோலாலம்பூர்–சிப்பாங், கூச்சிங் |
போக்குவரத்து புள்ளிவிவரங்கள்
தொகுஆண்டு | பயணிகள் வருகை |
பயணிகள் % மாற்றம் |
சரக்கு (டன்கள்) |
சரக்கு % மாற்றம் |
வானூர்தி நகர்வுகள் |
வானூர்தி % மாற்றம் |
---|---|---|---|---|---|---|
2003 | 1,377,312 | 3,881 | 43,460 | |||
2004 | 1,509,684 | 9.6 | 4,721 | 21.6 | 45,269 | 4.2 |
2005 | 1,594,855 | 5.6 | 5,392 | 14.2 | 42,865 | ▼ 5.3 |
2006 | 1,559,379 | ▼ 2.2 | 4,080 | ▼ 24.3 | 42,680 | ▼ 0.4 |
2007 | 1,454,167 | ▼ 6.7 | 3,564 | ▼ 12.6 | 35,502 | ▼ 16.8 |
2008 | 1,537,840 | 5.7 | 4,146 | 16.3 | 38,172 | 7.5 |
2009 | 1,620,345 | 5.4 | 3,921 | ▼ 5.4 | 41,996 | 10.0 |
2010 | 1,694,915 | 4.6 | 6,770 | 72.7 | 41,682 | ▼ 0.7 |
2011 | 1,856,626 | 9.5 | 8,198 | 21.1 | 43,707 | 4.9 |
2012 | 2,018,415 | 8.7 | 9,879 | 20.5 | 45,127 | 3.2 |
2013 | 2,223,172 | 10.1 | 9,800 | ▼ 0.8 | 47,585 | 5.4 |
2014 | 2,363,080 | 6.3 | 8,029 | ▼ 18.1 | 49,204 | 3.4 |
2015 | 2,249,206 | ▼ 4.8 | 7,292 | ▼ 9.2 | 47,733 | ▼ 3.0 |
2016 | 2,200,546 | ▼ 2.2 | 7,270 | ▼ 0.3 | 45,554 | ▼ 4.6 |
2017 | 2,188,048 | ▼ 0.6 | 4,872 | ▼ 33.0 | 40,692 | ▼ 0.7 |
2018 | 2,350,700 | 7.4 | 5,054 | 3.7 | 44,855 | 10.2 |
2019 | 2,439,492 | 3.8 | 5,278 | 4.4 | 43,752 | ▼ 2.5 |
2020 | 876,402 | ▼ 64.0 | 5,345 | 1.3 | 25,804 | ▼ 41.0 |
சான்று: மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்[5] |
உள்நாட்டுச் சேவைகள்
தொகு
வெளிநாட்டுச் சேவைகள்தொகு
சம்பவங்கள்தொகு
மேற்கோள்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகுமேலும் காண்கதொகு |