லோங் பங்கா வானூர்தி நிலையம்
லோங் பங்கா வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: LBP, ஐசிஏஓ: -); (ஆங்கிலம்: Long Banga Airport; மலாய்: Lapangan Long Banga) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தின் மருடி மாவட்டம், தெலாங் ஊசான் மாவட்டத்தில், லோங் பாங்கா கிராமத்தில் உள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.[2]
வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
இயக்குனர் | மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம் Malaysia Airports Holdings Berhad | ||||||||||
சேவை புரிவது | லோங் பங்கா, சரவாக், மலேசியா | ||||||||||
அமைவிடம் | தெலாங் ஊசான், மருடி மாவட்டம், சரவாக், கிழக்கு மலேசியா | ||||||||||
நேர வலயம் | மலேசிய நேரம் ({{{utc}}}) | ||||||||||
உயரம் AMSL | 750 ft / 229 m | ||||||||||
ஆள்கூறுகள் | 03°12′08″N 115°24′07″E / 3.20222°N 115.40194°E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
Source: Aeronautical Information Publication Malaysia[1] |
இந்த வானூர்தி நிலையம் 1965 வரை ஒரு சிறிய புல்வெளி விமான ஓடுதளமாக இருந்தது. இந்தோனேசியா - மலேசியா மோதல் (Indonesia-Malaysia Confrontation) ஏற்பட்ட போது பிரித்தானிய இராணுவத்தால், விமான ஓடுதளம் மேம்படுத்தப்பட்டது.[3] [4]
மாநிலத் தலைநகர் கூச்சிங்கின் வட கிழக்கே 589 கி.மீ. (366 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.[5]
பொது
தொகு"லோங் பங்கா" எனும் பெயர் லோங் பங்கா கிராமத்தின் அருகிலுள்ள ஒரு சிறிய நதியில் இருந்து உருவானது.
இந்தோனேசியா கலிமந்தான் (Indonesian Kalimantan); மலேசியா சரவாக்கிற்கும் இடையே உள்ள அனைத்துலக எல்லைக்கு மிக அருகில் உள்ள பத்து காலோங் (Batu Kallong) எனும் இடத்தில் இந்த வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. இந்தப் பகுதி பாராம் ஆற்றின் (Baram River) மேல் பகுதியில் உள்ளது.[6]
சேவை
தொகுவிமானச் சேவைகள் | சேரும் இடங்கள் |
---|---|
மாஸ் விங்ஸ் (MASwings) |
மருடி வானூர்தி நிலையம் மிரி வானூர்தி நிலையம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ AIP Malaysia: Index to Aerodromes பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம் at Department of Civil Aviation Malaysia
- ↑ "On Sarawak river boats to Long Akah". Archived from the original on 2011-01-01. பார்க்கப்பட்ட நாள் 2011-01-02.
- ↑ "Telang Usan: Long Banga, Upper Baram". 2011-03-05. பார்க்கப்பட்ட நாள் 2011-03-07.
- ↑ "Telang Usan: The Baram River of Sarawak". 2011-02-08. பார்க்கப்பட்ட நாள் 2011-02-11.
- ↑ "Long Banga, Malaysia". Geonames. 2010-08-09. பார்க்கப்பட்ட நாள் 2010-12-27.
- ↑ Charles de Ledesma; Mark Lewis; Pauline Savage (28 October 2003). Rough guide to Malaysia, Singapore & Brunei. Rough Guides. pp. 500–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84353-094-7. பார்க்கப்பட்ட நாள் 2011-03-07.
வெளி இணைப்புகள்
தொகுமேலும் காண்க
தொகு- சிறு தொலைவு வானூர்தி நிலையம்
- லோங் அக்கா வானூர்தி நிலையம்
- லோங் பங்கா வானூர்தி நிலையம்
- லோங் லேலாங் வானூர்தி நிலையம்
- லோங் செரிடான் வானூர்தி நிலையம்