லோங் அக்கா வானூர்தி நிலையம்
சரவாக் மாநிலத்தில் உள்ள வானூர்தி நிலையம்
லோங் அக்கா வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: LKH, ஐசிஏஓ: WBGL); (ஆங்கிலம்: Long Akah Airport; மலாய்: Lapangan Long Akah) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தின் மருடி பிரிவு, தெலாங் ஊசான் மாவட்டத்தில் உள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.
வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
இயக்குனர் | மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம் Malaysia Airports Holdings Berhad | ||||||||||
சேவை புரிவது | லோங் அக்கா, சரவாக், மலேசியா | ||||||||||
அமைவிடம் | தெலாங் ஊசான், மருடி பிரிவு, சரவாக், கிழக்கு மலேசியா | ||||||||||
திறக்கப்பட்டது | 7 ஏப்ரல் 2004 | ||||||||||
நேர வலயம் | மலேசிய நேரம் ({{{utc}}}) | ||||||||||
உயரம் AMSL | 289 ft / 88 m | ||||||||||
ஆள்கூறுகள் | 03°18′47″N 114°46′59″E / 3.31306°N 114.78306°E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
Source: Aeronautical Information Publication Malaysia[1] |
இந்த வானூர்தி நிலையம் பாராம் ஆற்றின் (Baram River) மேல் பகுதியில், மாநிலத் தலைநகர் கூச்சிங்கின் வட கிழக்கே 531 கி.மீ. (330 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.[2]
பொது
தொகுலோங் அக்கா கிராமம், முன்பு காலத்தில் ஒரு பழைய சீன வர்த்தக நிலையம் ஆகும். சார்லஸ் வைனர் புரூக்கின் (Charles Vyner Brooke) காலத்தில், அவருடைய நிர்வாக மையங்களில் ஒன்றாக விளங்கியது.
1929-ஆண்டில் கட்டப்பட்ட ஒரு கோட்டை இன்றும் உள்ளது. மிகவும் கடினமான இரும்பு மரம் என்று சொல்லப்படும் காயு பெலியான் (Kayu Belian) மரங்களைக் கொண்டு இந்த இரண்டு மாடி கோட்டை கட்டப்பட்டது.[3]
சேவை
தொகுவிமானச் சேவைகள் | சேரும் இடங்கள் |
---|---|
மாஸ் விங்ஸ் (MASwings) |
மருடி வானூர்தி நிலையம் மிரி வானூர்தி நிலையம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ AIP Malaysia: Index to Aerodromes பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம் at Department of Civil Aviation Malaysia
- ↑ "Long Akah, Malaysia". Geonames. 2010-08-09. பார்க்கப்பட்ட நாள் 2010-12-27.
- ↑ "On Sarawak river boats to Long Akah". Archived from the original on 2011-01-01. பார்க்கப்பட்ட நாள் 2011-01-02.
வெளி இணைப்புகள்
தொகு- The Brooke Trust – புரூக் வம்சத்தின் பாரம்பரியம் பற்றிய கூடுதல் தகவல்கள்