சிறு தொலைவு வானூர்தி நிலையம்
சிறு தொலைவு வானூர்தி நிலையம் (ஆங்கிலம்: Short Take-Off and Landing) மலாய்: Lapangan Berlepas dan Mendarat Pendek) என்பது சிறிய தொலைவு இடத்தில் வானூர்திகள் தரை இறங்குவதற்கும்; பின்னர் தரையில் இருந்து மேல் எழுவதற்கும் வடிவமைக்கப்பட்ட வானூர்தி நிலையமாகும்.
இந்த வானூர்தி நிலையத்தைச் சுருக்கமாக சுத்தோல் நிலையம் (STOLport or STOLPORT) என்றும் அழைக்கிறார்கள். 2008-ஆம் ஆண்டிற்குப் பின்னர் தான் சிறு தொலைவு ஏற்ற இறக்க வானூர்தி நிலையம் எனும் பெயர்ச் சொல் பயன்பாட்டிற்கு வந்தது.[1]
பொது
தொகுஒரு சுத்தோல் வானூர்தி நிலையம் (STOLport); பொதுவாக 1,500 மீ. (5,000 அடிக்கும்) குறைவான குறுகிய ஒற்றை ஓடுபாதையைக் கொண்டது.
சுத்தோல் வானூர்தி நிலையங்கள் குறிப்பிட்ட சில வகையான வானூர்திகளை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றன. பெரும்பாலும் சிறிய காற்றாடிகள் (அலகுகள்) கொண்ட வானூர்திகளையும்; ஒரு வரம்புக்கு உட்பட்ட எரிபொருளை எடுக்கக்கூடிய வானூர்திகளையும் ஏற்றுக் கொள்கின்றன.[2]
சுத்தோல் வானூர்தி நிலையம்
தொகுபொதுவாகவே, குறுகிய ஓடுபாதை வசதிகள் கொண்ட எல்லா சிறு தொலைவு ஏற்ற இறக்க வானூர்தி நிலையங்களையும் வானூர்தி நிலையங்கள் என்றே அழைக்கப் படுகின்றன.
1970-களின் முற்பகுதி வரையில் சுத்தோல் வானூர்தி நிலையம் (STOLport) என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
எசுகேசு வானூர்தி நிறுவனம்
தொகுமலேசியாவைச் சேர்ந்த எசுகேசு வானூர்தி நிறுவனம் (SKS Airways), மலேசிய உள்நாட்டுத் தீவுகளில் இருக்கும் சுத்தோல் வானூர்தி நிலையங்களின் மீது தன் கவனத்தைச் செலுத்தியது. அதன் பின்னர் சனவரி 2022-இல் தன் வணிகச் செயல்பாட்டைத் தொடங்கியது.
தொடக்கத்தில் அந்த நிறுவனம், சுபாங் அல்லது ஜொகூர் பாரு ஆகிய வானூர்தி நிலையத்தில் இருந்து பங்கோர் தீவு, ரெடாங் தீவு மற்றும் தியோமான் தீவு போன்ற தீவுகளுக்குத் தன் இரட்டை ஓட்டர் (Twin Otter) ரக வானூர்திகளைப் பயன்படுத்தியது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Stolport Manual பரணிடப்பட்டது 2006-10-13 at the வந்தவழி இயந்திரம் (Doc 9150) International Civil Aviation Organization (ICAO)
- ↑ FAA. Advisory Circular 150/5200-35 பரணிடப்பட்டது 2011-06-07 at the வந்தவழி இயந்திரம். Page 6. (PDF page 8) FAA SITE NR S = Stolport
- ↑ Luke Bodell (25 January 2022). "Airline Startup Of The Week: Malaysia's SKS Airways". Simple Flying. பார்க்கப்பட்ட நாள் 28 January 2022.