லகாட் டத்து வானூர்தி நிலையம்

சபா மாநிலத்தில் உள்ள வானூர்தி நிலையம்

லகாட் டத்து வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: LDUஐசிஏஓ: WBKD); (ஆங்கிலம்: Lahad Datu Airport; மலாய்: Lapangan Terbang Lahad Datu) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் லகாட் டத்து நகரில் உள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும். சபா மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.[3]

லகாட் டத்து
வானூர்தி நிலையம்
Lahad Datu Airport
லகாட் டத்து வானூர்தி நிலையம்
  • ஐஏடிஏ: LDU
  • ஐசிஏஓ: WBKD
    LDU WBKD is located in மலேசியா
    LDU WBKD
    LDU WBKD
    லகாட் டத்து வானூர்தி
    நிலையத்தின் அமைவு
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்
Malaysia Airports Holdings Berhad
சேவை புரிவதுலகாட் டத்து மாவட்டம்
நேர வலயம்மலேசிய நேரம் ({{{utc}}})
உயரம் AMSL10 ft / 3 m
ஆள்கூறுகள்05°01′59″N 118°19′16″E / 5.03306°N 118.32111°E / 5.03306; 118.32111
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
11/29 1,371 4,498 தார்
புள்ளிவிவரங்கள் (2020)
பயணிகள்59,739 ( 57.5%)
சரக்கு (டன்கள்)163 ( 115.5%)
விமான நகர்வுகள்2,632 ( 44.2%)
Sources: official web site[1]
Aeronautical Information Publication Malaysia[2]

இந்த வானூர்தி நிலையம் லகாட் டத்து மாவட்டம்; அதன் அண்டை மாவட்டங்களான கினபாத்தாங்கான், பெல்டா சகாபாட் (FELDA Sahabat) மற்றும் கூனாக் (Kunak) மாவட்டம் ஆகியவற்றுக்கும் சேவை செய்கிறது.

குறிப்பாக, லகாட் டத்து மாவட்டத்தில் வாழும் மக்களுக்கான வானூர்திச் சேவை மையமாக விளங்குகின்றது. லகாட் டத்து நகரத்தில் இருந்து ஏறக்குறைய 1 கி.மீ. தொலைவில் உள்ளது.

பொது தொகு

லகாட் டத்து வானூர்தி நிலையத்தில், ATR72 போன்ற பெரிய விமானங்கள் தரை இறங்கும் வசதி உள்ளது. மேலும் இந்த நிலையம் ஆண்டுக்கு 100,000 பயணிகளைக் கையாள முடியும். 2016-ஆம் ஆண்டில், விமான நிலையம் 140,077 பயணிகளையும் 3,713 விமான இயக்கங்களையும் கையாண்டது.

லகாட் டத்து நகரம் கோத்தா கினபாலுவில் இருந்து 430 கி.மீ. தொலைவில், தென் கிழக்கே அமைந்து உள்ளது.[4]

லகாட் டத்து நகரம் தொகு

15-ஆம் நூற்றாண்டில் இங்கு ஒரு குடியேற்றம் இருந்ததாக நம்பப்படுகிறது. அகழ்வாராய்ச்சியின் மூலமாக சீனாவின் மிங் வம்சத்தின் (Ming dynasty) சீன மண்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.[5]

லகாட் டத்துவின் கிழக்கே துங்கு எனும் பெயரில் ஒரு கிராமம் உள்ளது. இந்தக் கிராமம், 19-ஆம் நூற்றாண்டில் கடல் கொள்ளையர்களுக்கும்; மற்றும் அடிமை வியாபாரிகளுக்கும் பெயர் போன தளமாக விளங்கி உள்ளது.[6]

லகாட் டத்து முற்றுகை தொகு

லகாட் டத்து நகரம் சபா மாநிலத்தின் பிரதான நகரங்களில் ஒன்றாகும். இது தாவாவ் மாவட்டத்தில் ஒரு துணை மாவட்டமாகவும் விளங்குகிறது. இந்த நகரில், இந்தோனேசியாவின் தாக்கத்தை அதிகமாகக் காண முடியும்.

இங்கு டூசுன் பூர்வீக இனத்தைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். 2013 பிப்ரவரி 13-ஆம் தேதி, இந்த லகாட் டத்து பட்டணத்திற்கு அருகில் இருக்கும் தண்டுவோ (Tanduo) எனும் கிராமத்தில் ஒரு முற்றுகை நடைபெற்றது.

சூலு சுல்தானகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட சிலர் தண்டுவோ கிராமத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர். இரு வாரங்கள் போராட்டத்திற்குப் பின்னர் மலேசியப் பாதுகாப்பு படையினர் அந்தக் கிராமத்தை மீட்டு எடுத்தனர்.

சேவை தொகு

 
வானூர்தி நிலையத்தின் முன் நுழைவாயில்
விமானச் சேவைகள் சேரும் இடங்கள்
மாஸ் விங்ஸ்
(MASwings)
கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையம்
சண்டக்கான் வானூர்தி நிலையம்

போக்குவரத்து புள்ளிவிவரங்கள் தொகு

பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வானூர்திகளின் புள்ளிவிவரங்கள்
ஆண்டு பயணிகள்
வருகை
பயணிகள்
% மாற்றம்
சரக்கு
(டன்கள்)
சரக்கு
% மாற்றம்
வானூர்தி
நகர்வுகள்
வானூர்தி
% மாற்றம்
2011 131,054   42   3,024  
2012 142,733   8.9 185   340.5 3,147   4.1
2013 145,930   2.2 200   8.1 4,215   33.9
2014 161,230   10.5 179   10.5 4,055   3.1
2015 143,654   10.9 158   11.7 3,929   3.1
2016 140,077   2.5 129   18.4 3,713   5.5
2017 127,651   8.9 101   21.7 3,199   13.8
2018 124,803   2.2 97   4.0 3,135   2.0
2019 140,583   12.6 75   22.7 4,718   50.5
2020 59,739   57.5 163   115.5 2,632   44.2
சான்று: மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்[7]

காட்சியகம் தொகு

லகாட் டத்து வானூர்தி நிலையத்தின் சில காட்சிகள்:

மேற்கோள்கள் தொகு

  1. Lahad Datu Airport, Sabah at Malaysia Airports Holdings Berhad
  2. WBG - LAHAD DATU at Department of Civil Aviation Malaysia
  3. "Official Portal Ministry of Transportation, Malaysia. List of Airports".
  4. "Lahad Datu Airport (IATA: LDU, ICAO: WBKD) is a small airport located in Lahad Datu, Sabah, Malaysia". Aviation.MY. 10 April 2017. பார்க்கப்பட்ட நாள் 10 June 2022.
  5. "Journey Through The Land Below The Wind". பார்க்கப்பட்ட நாள் 23 October 2019.
  6. Oxford Business Group. The Report: Sabah 2011. Oxford Business Group. pp. 12–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-907065-36-1. {{cite book}}: |author= has generic name (help)
  7. "Malaysia Airports: Airports Statistics 2020" (PDF). malaysiaairports. 2 April 2021. Archived from the original (PDF) on 28 ஜூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 5 October 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kudat Airport
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேலும் காண்க தொகு