மாஸ் விங்ஸ்
மாஸ் விங்ஸ் (ஆங்கிலம்: MASwings (MASwings Sdn Bhd); மலாய்: MASwings) என்பது கிழக்கு மலேசியாவில் வட்டார வானூர்திச் சேவைகளை வழங்கி வரும் ஒரு வானூர்தி நிறுவனமாகும். சபா, சரவாக் மாநிலங்களில் உள்ள நாட்டுப்புற நகரங்களுக்குச் சேவை வழங்குவதை (Rural Air Services) இலக்காகக் கொண்டு உள்ளது. இந்த நிறுவனம் மலேசியா எயர்லைன்சு நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.[1]
| |||||||
நிறுவல் | 1 நவம்பர் 2007 | ||||||
---|---|---|---|---|---|---|---|
மையங்கள் | |||||||
அடிக்கடி பறப்பவர் திட்டம் | மலேசியா எயர்லைன்சு | ||||||
கூட்டணி | None | ||||||
வானூர்தி எண்ணிக்கை | 16 | ||||||
சேரிடங்கள் | 23 | ||||||
தாய் நிறுவனம் | மலேசியா எயர்லைன்சு | ||||||
தலைமையிடம் | கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையம் கோத்தா கினபாலு, சபா, மலேசியா | ||||||
வலைத்தளம் | www |
ஏர் ஏசியா எக்சு (AirAsia X) அல்லது பிளை ஏசியன் எக்பிரஸ் (FlyAsianXpress) எனும் விமான நிறுவனம் 2006; 2007-ஆம் ஆண்டுகளில் சபா, சரவாக் மாநிலங்களில் நாட்டுப்புற விமானச் சேவையை வழங்கி வந்தது. அதற்கு முன்னர் மலேசியா எயர்லைன்சு நிறுவனம் 1965-ஆம் ஆண்டில் இருந்து 2006-ஆம் ஆண்டு வரை அந்தச் சேவையில் ஈடுபட்டு வந்தது.
இந்த இரு நிறுவனங்களுக்குப் பிறகு மாஸ் விங்ஸ், அதே நாட்டுப்புறச் சேவையை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் இதன் சேவையை 2007 அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி தொடங்கியது. இதன் தலைமையகம் தற்சமயம் சபா, கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் உள்ளது.[2]
இதற்கும் முன்னர் மாஸ் விங்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் மிரி வானூர்தி நிலையத்தில் இருந்தது.
சேவைகள்
தொகு- சபா
- லபுவான்
- சரவாக்
- மிரி - மிரி வானூர்தி நிலையம்
- கூச்சிங் - கூச்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம்
- பாகெலாலான் - பாகெலாலான் வானூர்தி நிலையம்
- பாரியோ - பாரியோ வானூர்தி நிலையம்
- பிந்துலு - பிந்துலு வானூர்தி நிலையம்
- லாவாஸ் - லாவாஸ் வானூர்தி நிலையம்
- லிம்பாங் - லிம்பாங் வானூர்தி நிலையம்
- லோங் ஆகா - லோங் ஆகா வானூர்தி நிலையம்
- லோங் பங்கா - லோங் பங்கா வானூர்தி நிலையம்
- லோங் லேலாங் - லோங் லேலாங் வானூர்தி நிலையம்
- லோங் செரிடான் - லோங் செரிடான் வானூர்தி நிலையம்
- மருடி - மருடி வானூர்தி நிலையம்
- முக்கா - முக்கா வானூர்தி நிலையம்
- முலு - முலு வானூர்தி நிலையம்
- சிபு - சிபு வானூர்தி நிலையம்
- சரிக்கே - தஞ்சோங் மானிஸ் வானூர்தி நிலையம்
விமானங்கள்
தொகுசேவையில் உள்ள விமானங்கள்
தொகுஜூலை 2020 நிலவரப்படி, மாஸ் விங்ஸ் பின்வரும் விமானங்களைக் கொண்டுள்ளது:[3][4]
விமானம் | சேவை | பதிவுகள் | பயணிகள் | குறிப்புகள் |
---|---|---|---|---|
ATR 72-500 | 68 | |||
Viking Air DHC-6-400 Twin Otter | 19 | கிராமப்புற விமான சேவைக்கு பயன்படுத்தப்படுகின்றன | ||
மொத்தம் | 16 | — |
மேற்கோள்கள்
தொகு- ↑ MAS launches regional carrier MASWings" Flight Global, 01/10/07
- ↑ Contact Us." MASwings. 11 October 2007. Retrieved on 21 December 2010. "MASwings Sdn. Bhd. 1st Floor, Lot 239, Beautiful Jade Centre, 98000 Miri, Sarawak, Malaysia"
- ↑ "Global Airline Guide 2019 (Part One)". Airliner World October 2019: 20.
- ↑ "MASwings Fleet Details and History". www.planespotters.net (in ஆங்கிலம்).