முக்கா

சரவாக் மாநிலத்தில் அமைந்து உள்ள நகரம்

முக்கா (மலாய் மொழி: Mukah அல்லது Muka; ஆங்கிலம்: Mukah; சீனம்: 沐胶) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் முக்கா பிரிவு; முக்கா மாவட்டத்தில் அமைந்து உள்ள நகரமாகும். இது முக்கா மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்.[1]

முக்கா நகரம்
Mukah Town
Bandar Mukah
முக்கா நகரம்
முக்கா is located in மலேசியா
முக்கா
      முக்கா       மலேசியா
ஆள்கூறுகள்: 2°53′46″N 112°4′43″E / 2.89611°N 112.07861°E / 2.89611; 112.07861
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுமுக்கா பிரிவு
மாவட்டம்முக்கா மாவட்டம்
மாவட்டம்முக்கா நகரம்
ஜேம்சு புரூக்1861
மாலானோ இராச்சியம்
Malano Kingdom
700 கி.பி.
சரவாக் 10-ஆவது பிரிவு
10th Division of Sarawak
1 மார்ச் 2002
பரப்பளவு
 • மொத்தம்2,536 km2 (979 sq mi)
மக்கள்தொகை
 (2016)
 • மொத்தம்49,900 (மாவட்டம்)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
96xxx
மலேசியத் தொலைபேசி எண்கள்+60-84
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்QS; HQ
ஆளுநர்அமிடா பக்கிர்
இணையதளம்www.mukah.sarawak.gov.my

முக்கா நகரம், முக்கா ஆற்றின் முகப்பில், முக்கா கரி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நகரம் இன்னும் கரி சதுப்பு நிலக் காடுகளால் சூழப்பட்டுள்ளது.[2]

வரலாறு

தொகு

மெலனாவ் மக்கள்தான் முக்காவில் முதன்முதலில் வாழ்ந்த பழங்குடியினக் குழுவாகும். முக்காவின் தொடக்கக்கால ஆவணங்கள் மயாபாகித் பேரரசின் வரலாற்றில் காணப்படுகின்றன. "மெலனோ" என்று அழைக்கப்படும் ஓர் இடம் மயாபாகித் பேரரசுக்குத் திறை செலுத்தியாகவும் அறியப் படுகிறது.

பின்னர் மெலனோ எனும் அந்த இடம் 13-ஆம் நூற்றாண்டில் புரூணை பேரரசின் ஒரு பகுதியாக மாறியது. 1860-இல் சரவாக் வெள்ளை இராஜாக்களுக்கு விற்கப்பட்டது.[3]

பொது

தொகு

முக்கா நகரில் ரிங்கிட் 48 மில்லியன் செலவில் ஒரு கடற்கரை சாலை அண்மையில் உருவாக்கப்பட்டது.

கோலா பலிங்கியான் (Kuala Balingian); பாலிங்கியான்; முக்கா; தலாத்; ஓயா; இகான்; மாத்து; தாரோ ஆகிய நகரங்களை இணைக்கும் ஒரு கடற்கரை சாலை.

2005-ஆம் ஆண்டில் முக்கா ஆற்றின் மீது 170 மீட்டர் இரட்டை வளைவு தொங்கு பாலம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.

முக்கிய வேளாண்மை பொருட்கள் செம்பனை, சவ்வரிசி, நெல், அன்னாசி மற்றும் மீன் வளர்ப்பு.

மக்கள்தொகை

தொகு

2010-ஆம் ஆண்டு நிலவரப்படி, முக்கா பிரிவில் மெலனாவ் மக்களே மிகப்பெரிய இனக்குழுவாகும். மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்களை மெலனாவ் என்று அடையாளப் படுத்திக் கொள்கின்றனர்.[10] இபான் மக்கள் 18.6%. இரண்டாவது பெரிய இனக்குழு.[4]

முக்காவில் உள்ள இனக்குழுக்கள் (2010)[4]
இனம் விழுக்காடு
மெலனாவ்
60.6%
இபான்
18.6%
மலேசியர் அல்லாதவர்
5.9%
மலாய்க்காரர்
5.8%
சீனர்
5.7%
வேறு மக்கள்
3.3%

காலநிலை

தொகு

முக்கா நகரம் வெப்பமண்டல மழைக்காட்டு காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் கனமான மழை பெய்கிறது.

தட்பவெப்ப நிலைத் தகவல், முக்கா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 29.9
(85.8)
30.1
(86.2)
30.9
(87.6)
31.7
(89.1)
32.1
(89.8)
31.9
(89.4)
31.8
(89.2)
31.5
(88.7)
31.4
(88.5)
31.2
(88.2)
30.9
(87.6)
30.5
(86.9)
31.16
(88.09)
தினசரி சராசரி °C (°F) 26.1
(79)
26.3
(79.3)
26.8
(80.2)
27.3
(81.1)
27.6
(81.7)
27.4
(81.3)
27.1
(80.8)
27.0
(80.6)
26.9
(80.4)
26.9
(80.4)
26.7
(80.1)
26.4
(79.5)
26.88
(80.38)
தாழ் சராசரி °C (°F) 22.4
(72.3)
22.5
(72.5)
22.8
(73)
22.9
(73.2)
23.2
(73.8)
22.9
(73.2)
22.4
(72.3)
22.5
(72.5)
22.5
(72.5)
22.7
(72.9)
22.6
(72.7)
22.4
(72.3)
22.65
(72.77)
மழைப்பொழிவுmm (inches) 586
(23.07)
425
(16.73)
328
(12.91)
188
(7.4)
168
(6.61)
190
(7.48)
165
(6.5)
230
(9.06)
234
(9.21)
264
(10.39)
305
(12.01)
498
(19.61)
3,581
(140.98)
ஆதாரம்: Climate-Data.org[5]

முக்கா வானூர்தி நிலையக் காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Face-to-face with Mukah coastal town". The Borneo Post.
  2. "Resource Centre - Peat Swamp Development". Department of Irrigation & Drainage Sarawak. Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2022-05-26.
  3. Diana, Rose (6 April 2011). "That binding man from Mukah". The Star (Malaysia) இம் மூலத்தில் இருந்து 6 September 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180906151631/https://www.thestar.com.my/news/community/2011/04/06/that-binding-man-from-mukah/. 
  4. 4.0 4.1 "Demografi". Mukah Resident Office. Archived from the original on 8 August 2018. பார்க்கப்பட்ட நாள் 8 August 2018.
  5. "Climate: Mukah". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 29 October 2020.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
முக்கா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்கா&oldid=4106376" இலிருந்து மீள்விக்கப்பட்டது