இகான்
இகான் (மலாய் மொழி: Kampung Igan; ஆங்கிலம்: Igan) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் முக்கா பிரிவு; மாத்து மாவட்டத்தில் அமைந்து உள்ள துணை மாவட்டம்; மற்றும் நகரமாகும்.[2]
இகான் Igan Kampung Igan | |
---|---|
ஆள்கூறுகள்: 2°49′25″N 111°42′24″E / 2.82361°N 111.70667°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | முக்கா பிரிவு |
மாவட்டம் | இகான் துணை மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 248 km2 (96 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 3,731 |
• அடர்த்தி | 15/km2 (39/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 96300[1] |
இணையதளம் | Matu & Daro District Council |
இந்த நகரம், தென் சீனக் கடற்கரையில், இகான் ஆற்றுக் கழிமுகத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
இகான் நகரம், முக்கா பிரிவின் நிர்வாக நகரமான முக்கா நகரத்திற்கு மேற்கே ஏறக்குறைய 50 கிலோமீட்டர்கள் (131 மைல்கள்) தொலைவிலும்; ஓயா நகரத்தில் இருந்து 23 கிலோமீட்டர்கள் (14 மைல்கள்) தொலைவிலும் உள்ளது.
பொது
தொகுஇகான் என்பது இகான் கிராமத்தைச் சுற்றிலும் மட்டுமே காணக்கூடிய ஒரு வகை மீன் ஆகும்.[2] கம்போங் இகான் எனும் இகான் கிராமம், ராஜாங் ஆற்றின் முடிவில் அமைந்துள்ள மெலனாவ் கிராமங்களில் ஒன்றாகும். இங்குள்ளவர்களில் பெரும்பாலோர் மெலனாவ் மக்கள் ஆவார்கள்.[3]
சிபுவில் இருந்து இகான் கிராமத்திற்குச் சாலை வழியாகச் செல்வது என்றால் 3 முதல் 4 மணி நேரம் பிடிக்கும். அதே வேளையில் விரைவுப் படகு பயணத்திற்கு 5 மணிநேரம் பிடிக்கும். கிராமவாசிகள் பெரும்பாலோர் சொந்தத் தொழில் செய்பவர்களாக உள்ளனர்.
உப்பு மீன்கள், நெத்திலி மீன்கள், பெலாச்சான் விற்பனை; மற்றும் செம்பனைச் சாகுபடி, ரப்பர் மரம் வளர்ப்பு, கைவினைப்பொருட்கள் விற்பனை போன்றவை அவர்களின் முக்கியத் தொழில்களாக உள்ளன. இவர்களின் தயாரிப்புகள் கூச்சிங் நகரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Igan Mukah". poskod.com. பார்க்கப்பட்ட நாள் 6 October 2024.
- ↑ 2.0 2.1 "Kampung Igan is located under the administration of the Igan Subdistrict Office". Pusat Sebaran Maklumat Nasional Igan. பார்க்கப்பட்ட நாள் 6 October 2024.
- ↑ "Profile of Kampung Tengah Igan". Bangunan Pejabat Daerah Lama Igan. பார்க்கப்பட்ட நாள் 6 October 2024.
- ↑ Tawie, Sulok (14 August 2024). "Recoda develops 105ha agropark in Mukah to showcase sustainable farming | New Straits Times". NST Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 October 2024.