ஓயா
சரவாக் மாநிலத்தில் உள்ள நகரம்
ஓயா (மலாய் மொழி: Bandar Oya; ஆங்கிலம்: Oya Town) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் முக்கா பிரிவு; முக்கா மாவட்டத்தில் அமைந்து உள்ள நகரமாகும்.
ஓயா நகரம் Oya Town Bandar Oya | |
---|---|
ஆள்கூறுகள்: 2°51′22″N 111°52′29″E / 2.856089°N 111.874736°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | முக்கா பிரிவு |
மாவட்டம் | ஓயா மாவட்டம் |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 6,207 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 96410 |
இணையதளம் | www |
இந்த நகரம், தென் சீனக் கடற்கரையில் ஓயா ஆற்றுக் கழிமுகத்திற்கு அருகில் அமைந்துள்ளது.[1]
இந்த நகரம், முக்கா பிரிவின் நிர்வாக நகரமான முக்கா நகரத்திற்கு மேற்கே ஏறக்குறைய 26 கிலோமீட்டர்கள் (16 மைல்கள்); சிபு நகரத்தில் இருந்து காரில் 184 கிலோமீட்டர்கள் (114 மைல்கள்) தொலைவில் உள்ளது. 2020-இல் ஓயா நகரத்தின் மக்கள் தொகை 6,027.[2]
பொது
தொகுஓயா நகரத்தின் மக்கள் தொகையில் பெரும்பாலோர் மெலனாவ் மக்கள் ஆவார்கள். ஓயா மக்களில் பெரும்பாலோர் மீனவர்களாகவும்; வேளாண்மைத் தொழிலாளர்களாகவும் உள்ளனர்.
ஓயாவில் ஒரு மேல்நிலைப் பள்ளியும்; இரண்டு தொடக்க நிலைப் பள்ளிகளும் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Oya is a town and the administrative centre of the subdistrict of the same name in Mukah Division". TRIP.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 October 2024.
- ↑ "Oya (Township, Malaysia)". citypopulation.de. 7 July 2020. பார்க்கப்பட்ட நாள் 3 February 2024.