முக்கா பிரிவு

சரவாக் மாநிலத்தில் ஒரு பிரிவு

முக்கா பிரிவு (மலாய் மொழி: Bahagian Mukah; ஆங்கிலம்: Mukah Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். இந்தப் பிரிவு 2002 மார்ச் 1-ஆம் தேதி நிறுவப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 6,997.61 சதுர கி.மீ.

முக்கா பிரிவு
Mukah Division
சரவாக்

கொடி
சரவாக் மாநிலத்தில் முக்கா பிரிவு
சரவாக் மாநிலத்தில் முக்கா பிரிவு
ஆள்கூறுகள்: 02°53′46″N 112°04′43″E / 2.89611°N 112.07861°E / 2.89611; 112.07861
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுமுக்கா பிரிவு
நிர்வாக மையம்முக்கா
உள்ளூர் நகராட்சி1. முக்கா மாவட்ட மன்றம்
Majlis Daerah Dalat & Mukah (MDDM)
2. மாத்து டாரோ மாவட்ட மன்றம்
Majlis Daerah Matu-Daro (MDMD)
அரசு
 • ஆளுநர் (Resident)அமிடா பாக்கிர்
(Hajah Hamdiah binti Haji Bakir)
பரப்பளவு
 • மொத்தம்6,997.61 km2 (2,701.79 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்1,10,543
 • அடர்த்தி12/km2 (30/sq mi)

முக்கா பிரிவின் ஐந்து நிர்வாக மாவட்டங்களின் மொத்த மக்கள் தொகை 110,543 ஆகும்.[1] இந்தப் பிரிவின் மக்கள்தொகை கலாசார அடிப்படையில் கலந்து உள்ளது. பெரும்பாலும் மெலனாவ், மலாய்க்காரர், இபான் மற்றும் சீனர்கள் அதிகமாகக் காணப் படுகின்றனர்.

பொது

தொகு

முக்கா பிரிவு மாவட்டங்கள்

தொகு

முக்கா பிரிவில் உள்ள மாவட்டங்கள்:

கோலா பலிங்கியான் (Kuala Balingian); பாலிங்கியான்; முக்கா; தலாத்; ஓயா; இகான்; மாத்து; தாரோ ஆகிய நகரங்களை இணைக்கும் ஒரு கடற்கரை சாலை ரிங்கிட் 48 மில்லியன் செலவில் அண்மையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

2005-ஆம் ஆண்டில் பத்தாங் முக்காவின் மீது 170 மீட்டர் இரட்டை வளைவு தொங்கு பாலம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.

முக்கா பிரிவின் முக்கியத் தொழில், வேளாண்மைப் பொருட்கள்; செம்பனை, சவ்வரிசி, நெல், அன்னாசி மற்றும் மீன் வளர்ப்பு.

மக்கள்தொகை

தொகு

2010-ஆம் ஆண்டு நிலவரப்படி, முக்கா பிரிவில் மெலனாவ் மக்களே மிகப்பெரிய இனக்குழுவாகும். மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்களை மெலனாவ் என்று அடையாளப் படுத்திக் கொள்கின்றனர்.[10] இபான் மக்கள் 18.6%. இரண்டாவது பெரிய இனக்குழு.[2]

முக்காவில் உள்ள இனக்குழுக்கள் (2010)[2]
இனம் விழுக்காடு
மெலனாவ்
60.6%
இபான்
18.6%
மலேசியர் அல்லாதவர்
5.9%
மலாய்க்காரர்
5.8%
சீனர்
5.7%
வேறு மக்கள்
3.3%

முக்கா வானூர்தி நிலையக் காட்சியகம்

தொகு

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Rakan Sarawak July 2007" (PDF). State Secretary's Office, Chief Minister's Department, Sarawak. p. 7. Archived from the original (PDF) on 20 August 2018. பார்க்கப்பட்ட நாள் 6 February 2011.
  2. 2.0 2.1 "Demografi". Mukah Resident Office. Archived from the original on 8 August 2018. பார்க்கப்பட்ட நாள் 8 August 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்கா_பிரிவு&oldid=4104473" இலிருந்து மீள்விக்கப்பட்டது