பாலிங்கியான்

சரவாக் மாநிலத்தில் உள்ள நகரம்

பாலிங்கியான் (மலாய் மொழி: Balingian; ஆங்கிலம்: Balingian; சீனம்: 万年烟) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் முக்கா பிரிவு; முக்கா மாவட்டத்தில் அமைந்து உள்ள நகரமாகும். இது முக்கா மாவட்டத்தின் துணை மாவட்டமும் ஆகும்.[1]

பாலிங்கியான் நகரம்
Balingian Town
சரவாக்
பாலிங்கியான் பழைய சந்தை
பாலிங்கியான் நகரம் is located in மலேசியா
பாலிங்கியான் நகரம்
பாலிங்கியான் நகரம்
      பாலிங்கியான்       மலேசியா
ஆள்கூறுகள்: 2°56′01″N 112°31′59″E / 2.93361°N 112.53306°E / 2.93361; 112.53306
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுமுக்கா
மாவட்டம்முக்கா
ஜேம்சு புரூக்1861
பரப்பளவு
 • மொத்தம்3,032 km2 (1,171 sq mi)
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்17,498
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
மலேசிய அஞ்சல் குறியீடு
96xxx
மலேசியத் தொலைபேசி எண்கள்+60-84
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்QS; HQ
இணையதளம்www.mukah.sarawak.gov.my

பாலிங்கியான் நகரத்தின் நடுவில் பாலிங்கியான் ஆறு ஓடுகிறது. மாநிலத் தலைநகர் கூச்சிங்கின் வட கிழக்கே 286 கி.மீ. (178 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. அதே வேளையில் முக்கா நகரத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

குடியேற்றங்கள்

தொகு

பாலிங்கியான் நகரத்திற்கு அருகில் உள்ள குடியேற்றங்கள்:

  • லெமாய் - Lemai
  • கோலா தாதாவ் - Kuala Tatau
  • பெனிப்பா- Penipah
  • தாதாவ் - Tatau
  • கென்யானா- Kenyana
  • பெனாகுப் - Penakub
  • ரூமா கெலாம்பு - Rumah Kelambu
  • கம்போங் ஜபுங்கான் - Kampung Jebungan
  • முக்கா- Mukah
  • ரூமா நியாவாய் - Rumah Nyawai

மக்கள்தொகை

தொகு

பாலிங்கியான் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 17,498 ஆகும். இதில் இபான் மக்கள் (68.3%) மற்றும் மெலனாவ் மக்கள் (29.49%) உள்ளனர். அனைத்து மக்களும் ஆறு கிராமங்களிலும் 137 நீண்ட வீடுகளிலும் தங்கியுள்ளனர்.[2]

காலநிலை

தொகு

பாலிங்கியான் நகரம் வெப்பமண்டல மழைக்காட்டு காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் கனமான மழை பெய்கிறது.

தட்பவெப்ப நிலைத் தகவல், பாலிங்கியான்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 29.7
(85.5)
29.8
(85.6)
30.6
(87.1)
31.3
(88.3)
31.7
(89.1)
31.5
(88.7)
31.5
(88.7)
31.1
(88)
31.2
(88.2)
30.9
(87.6)
30.7
(87.3)
30.3
(86.5)
30.86
(87.55)
தினசரி சராசரி °C (°F) 26.0
(78.8)
26.1
(79)
26.6
(79.9)
27.1
(80.8)
27.4
(81.3)
27.1
(80.8)
27.0
(80.6)
26.7
(80.1)
26.9
(80.4)
26.8
(80.2)
26.7
(80.1)
26.3
(79.3)
26.73
(80.11)
தாழ் சராசரி °C (°F) 22.4
(72.3)
22.5
(72.5)
22.7
(72.9)
22.9
(73.2)
23.2
(73.8)
22.8
(73)
22.5
(72.5)
22.4
(72.3)
22.6
(72.7)
22.7
(72.9)
22.7
(72.9)
22.4
(72.3)
22.65
(72.77)
மழைப்பொழிவுmm (inches) 470
(18.5)
356
(14.02)
311
(12.24)
226
(8.9)
210
(8.27)
230
(9.06)
197
(7.76)
260
(10.24)
279
(10.98)
316
(12.44)
340
(13.39)
469
(18.46)
3,664
(144.25)
ஆதாரம்: Climate-Data.org[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Daerah Kecil Balingian (Balingian sub-district)". Rakan Sarawak (Friends of Sarawak). September 2002 இம் மூலத்தில் இருந்து 16 டிசம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171216143109/http://www.myonestopsarawak.com.my/info/rakansarawak/092002/subdistrict/index.shtml. 
  2. "Klinik Kesihatan Balingian Sarawak (Sarawak Balingian public health clinic)". Balingian public health clinic. Archived from the original on 13 September 2018. பார்க்கப்பட்ட நாள் 13 September 2018.
  3. "Climate: Balingian". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 29 October 2020.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலிங்கியான்&oldid=3644976" இலிருந்து மீள்விக்கப்பட்டது