இகான் மக்களவைத் தொகுதி
இகான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Igan; ஆங்கிலம்: Igan Federal Constituency; சீனம்: 伊甘联邦选区) என்பது மலேசியா, சரவாக், முக்கா பிரிவு; சரிக்கே பிரிவு; சிபு பிரிவு ஆகிய பிரிவுகளின் தாரோ மாவட்டம்; மாத்து மாவட்டம்; மெராடோங் மாவட்டம்; சிபு மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P207) ஆகும்.[5]
இகான் (P207) மலேசிய மக்களவைத் தொகுதி சரவாக் | |
---|---|
Igan (P207) Federal Constituency in Sarawak | |
இகான் மக்களவைத் தொகுதி (P207 Igan) | |
மாவட்டம் | தாரோ மாவட்டம்; மாத்து மாவட்டம்; மெராடோங் மாவட்டம்; சிபு மாவட்டம்; |
வட்டாரம் | முக்கா பிரிவு; சரிக்கே பிரிவு; சிபு பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 28,290 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | இகான் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கூச்சிங் சரிக்கே |
பரப்பளவு | 2,206 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2005 |
கட்சி | சரவாக் கட்சிகள் கூட்டணி |
மக்களவை உறுப்பினர் | அகமத் ஜானி சவாவி (Ahmad Johnie Zawawi) |
மக்கள் தொகை | 27,388 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2008 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
இகான் மக்களவைத் தொகுதி 2005-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2008-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2008-ஆம் ஆண்டில் இருந்து இகான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
சிபு பிரிவு
தொகுசிபு பிரிவு (Sibu Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். இந்தப் பிரிவு 8,278.3 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. சரவாக் மாநிலத்தில் காப்பிட் பிரிவு (Kapit Division) மற்றும் மிரி பிரிவுக்கு (Miri Division) அடுத்த நிலையில், மூன்றாவது பெரிய பிரிவு.
1862-ஆம் ஆண்டில் சிபுவில் குடியேறிய ஜேம்சு புரூக் (James Brooke) என்பவரால் டயாக் மக்களின் (Dayak People) தாக்குதல்களைத் தடுக்க, சிபு நகரில் ஒரு கோட்டை கட்டப்பட்டது.[7] அதனைத் தொடர்ந்து, சீனர்களின் (Chinese Hokkien) ஒரு சிறிய குழுவினர், கோட்டையைச் சுற்றியுள்ள நகரப் பகுதியில், பாதுகாப்பான வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் குடியேறினார்கள்.[8] அதுவே சிபுநகரின் முதல் குடியேற்றம் என அறியப்படுகிறது.
1901-ஆம் ஆண்டு, சிபு குடியேற்றப் பகுதிக்குள் வோங் நய் சியோங் (Wong Nai Siong) தலைமையில் சீனாவின் புசியான் மாநிலத்தில் (Fujian) இருந்து 1,118 பூச்சௌ சீனர்கள் (Fuzhou Chinese) ஒரு பெரிய அளவிலான குடிபெயர்வை மேற்கொண்டனர். இந்த நிகழ்வு, சிபுவில் "நியூ புசூ" என்று பிரபலமாகக் குறிப்பிடப் படுகிறது.[9]
இகான் மக்களவைத் தொகுதி
தொகுஇகான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2008 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
இகான் தொகுதி 2005-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
12-ஆவது மக்களவை | P207 | 2008-2013 | வகாப் டோலா (Wahab Dolah) |
பாரிசான் நேசனல் (ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி) (PBB) |
13-ஆவது மக்களவை | 2013-2018 | |||
14-ஆவது மக்களவை | 2018 | அகமத் ஜானி சவாவி (Ahmad Johnie Zawawi) | ||
2018-2022 | சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) (ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி) (PBB) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
தேர்தல் முடிவுகள்
தொகுவேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
அகமத் ஜானி சவாவி (Ahmad Johnie Zawawi) | சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) | 15,824 | 93.16 | 93.16 | |
அன்டிரி சுல்கர்நயின் (Andri Zulkarnaen Hamden) | பாக்காத்தான் அரப்பான் (PH) | 1,162 | 6.84 | 9.40 ▼ | |
மொத்தம் | 16,986 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 16,986 | 98.26 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 300 | 1.74 | |||
மொத்த வாக்குகள் | 17,286 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 28,290 | 61.10 | 5.23 ▼ | ||
Majority | 14,662 | 86.32 | 18.80 | ||
சரவாக் கட்சிகள் கூட்டணி கைப்பற்றியது | |||||
மூலம்: [11] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 1 அக்டோபர் 2024.
- ↑ James, Lawrence (1997) [1994]. The Rise and Fall of the British Empire. New York: St. Martin's Griffin. pp. 244–245. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-16985-X.
- ↑ Thompson, Larry Clinton (2009). William Scott Ament and the Boxer Rebellion: Heroism, Hubris, and the "Ideal Missionary". Jefferson, NC: McFarland. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-78645-338-2.
- ↑ Frank N. Pieke (2004). Transnational Chinese: Fujianese migrants in Europe. Stanford University Press. pp. 40–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8047-4995-4. பார்க்கப்பட்ட நாள் 18 February 2011.
- ↑ "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 August 2024.
- ↑ "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.