மெராடோங் மாவட்டம்

மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள மாவட்டம்

மெராடோங் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Meradong; ஆங்கிலம்: Meradong District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; சரிக்கே பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும். மெராடோங் மாவட்டத்தின் தலைநகரம் பிந்தாங்கூர் (Bintangor).

மெராடோங் மாவட்டம்
Meradong District
Daerah Meradong
மெராடோங் மாவட்ட மன்றம் (2018)
மெராடோங் மாவட்ட மன்றம் (2018)
ஆள்கூறுகள்: 2°06′09″N 111°42′49″E / 2.10250°N 111.71361°E / 2.10250; 111.71361
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுசரிக்கே பிரிவு
மாவட்டங்கள்மெராடோங் மாவட்டம்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
96500[1]

மெரடோங் மாவட்டம் 719 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த மாவட்டம் சரவாக் மாநிலத்தின் மிகச்சிறிய மாவட்டமாக அறியப்படுகிறது. இது சரிக்கே மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

பொது

தொகு

மாவட்டத்தின் மையத்தில் பாயும் ஆற்றின் பெயரில் இருந்து மெராடோங் என்ற பெயர் வந்தது. சனவரி 24, 1984 அன்று, இந்த மாவட்டத்தின் பெயர் மெராடோங் மாவட்டம் என மாற்றப்பட்டது.[2]

13 பிப்ரவரி 1984 தேதியிட்ட சரவாக் அரசாங்க அரசிதழ் பகுதி II, தொகுதி:XXXIX, எண்.4 (Sarawak Government Gazette Part II, Vol:XXXIX, No.4) வழியாக மாவட்டத்தின் பெயர் மாற்றம் அரசிதழில் வெளியிடப்பட்டது.

பிந்தாங்கூர் நகரம், மெராடோங் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். பிந்தாங்கூர் நகரில் நான்கு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.[3]

கல்வி

தொகு

மெராடோங் மாவட்டத்தில் 32 தொடக்கப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் 18 தேசியப் பள்ளிகள் (SK); மற்றும் 14 தேசிய வகை பள்ளிகள் (SJK(c).

மலேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் (Malaysian Teachers Education Institute) இராஜாங் வளாகம், பிந்தாங்கூர் நகரத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Meradong, Bintangor - Postcode - 96500 - Malaysia Postcode". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 1 October 2024.
  2. "Meradong District Office Introduction - Official Portal of Sarikei Division Administration". sarikei.sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 October 2024.
  3. "Bintangor town quiet after wharf destroyed". The Borneo Post. 25 June 2015 இம் மூலத்தில் இருந்து 12 April 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170412061432/http://www.theborneopost.com/2015/06/25/bintangor-town-quiet-after-wharf-destroyed/. 

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெராடோங்_மாவட்டம்&oldid=4103579" இலிருந்து மீள்விக்கப்பட்டது