மலேசியாவின் மாநிலப் பிரிவுகள்

மலேசியாவின் சபா மற்றும் சரவாக் மாநிலங்களின் முதன்மை உட்பிரிவுகள்

மலேசியாவின் மாநிலப் பிரிவுகள் (ஆங்கிலம்: Divisions of Malaysia; மலாய்: Bahagian di Malaysia) என்பது மலேசியாவின் கிழக்கு மலேசியாவில் உள்ள சபா மற்றும் சரவாக் மாநிலங்களின் முதன்மை உட்பிரிவுகளாகும்.[1]

அந்த இரு மாநிலங்களிலும் ஒவ்வொரு பிரிவும் சிற்சில மாவட்டங்களாக (Daerah) பிரிக்கப்பட்டு உள்ளன. இந்த முறைமை தீபகற்ப மலேசியாவில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.[2]

அந்த வகையில் சபா மற்றும் சரவாக் மாநிலங்களின் மாவட்டங்கள், ஒரு மாநிலப் பிரிவின் துணைப் பிரிவுகள் ஆகும். ஒவ்வொரு பிரிவும் ஓர் ஆளுநர் (Resident) தலைமையில் இயங்குகிறது.

வரலாறு

தொகு

சபா, சரவாக் மாநிலங்களின் தற்போதைய பிரிவு எனும் அமைப்பு முறை ஜெர்மனிய வணிகர் ஒருவரின் மூலமாகப் பெறப்பட்ட அமைப்பு முறையாகும். அந்த அமைப்பு முறை வட போர்னியோ சார்ட்டட் நிறுவனத்திடம் (North Borneo Chartered Company) இருந்து பெறப்பட்டது.[3][4]

இந்த நிறுவனம் பிரித்தானியர்களின் கட்டுப்பாட்டில் இயங்கிய நிறுவனமாகும். 1881 நவம்பர் மாதம் 1-ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் போன்ற செயல்பாடுகள்.

ஜெர்மனியத் தொழிலதிபர் வான் ஓவர்பெக்

தொகு

ஜெர்மனியத் தொழிலதிபரும் இராஜதந்திரியுமான பிரபு வான் ஓவர்பெக் (Baron von Overbeck); பிரித்தானியத் தொழிலதிபர்கள் ஆல்பிரட் டென்ட் (Alfred Dent) மற்றும் எட்வர்ட் டென்ட் (Edward Dent) ஆகியோர் வட போர்னியோ சார்ட்டட் நிறுவனத்தை உருவாக்கியவர்கள்.[5]

1878 ஜனவரி 22-ஆம் தேதி, சூலு சுல்தானகம், வடகிழக்கு போர்னியோவை வட போர்னியோ சார்ட்டட் நிறுவனத்திடம் விற்றது. உண்மையில் வட கிழக்கு போர்னியோவின் அசல் சொந்தக்காரர்கள் புரூணை சுல்தானகம் ஆகும். ஏற்கனவே வடகிழக்கு போர்னியோவை சூலு சுல்தானகத்திடம் புரூணை சுல்தானகம் வாடகைக்கு வழங்கி இருந்தது.

1885 மெட்ரிட் ஒப்பந்தம்

தொகு

அந்த வகையில் வடகிழக்கு போர்னியோ சூலு சுல்தானகத்திடம் இருந்து 5000 ஸ்பானிய டாலர்களுக்கு வாங்கப்பட்டது. அதன் பின்னர் ஓவர்பெக்; ஆல்பிரட் டென்ட்; எட்வர்ட் டென்ட் ஆகிய மூவரும் வடகிழக்கு போர்னியோவின் அதிபதிகள் ஆனார்கள்.[6]

அதன் பின்னர் வடகிழக்கு போர்னியோவில் ஐரோப்பியர்களின் அதிகாரப் போராட்டங்கள் தலைத்தூக்கின. அவற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரிட்டன், ஜெர்மன், ஸ்பானியா நாடுகளுக்கு இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்குப் பெயர் 1885 மெட்ரிட் ஒப்பந்தம் (Madrid Protocol of 1885).[7]

வான் ஓவர்பெக் பிரபு

தொகு

இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் வட கிழக்கு போர்னியோவில் ’டிவிசன்’ முறைகள் அமல்படுத்தப்பட்டு விட்டன. அந்த முறையை அமைத்தவர் வான் ஓவர்பெக் பிரபு (Baron von Overbeck). அவருக்குப் பின்னர் அந்த டிவிசன் முறை இன்றும் தொடர்கிறது.

இந்தப் பிரிவு முறைமை, இன்றைய நிலையில் ‘பிரிவு’ எனும் முக்கியத்துவத்தை மட்டுமே கொண்டுள்ளது. மற்றபடி அதற்குச் சொந்தமாக நிர்வாக அதிகாரங்கள் எதுவும் இல்லை. சபாவின் நகராட்சி நிர்வாகம், மாவட்ட அதிகாரிகளின் அதிகாரத்தில் இருப்பதால், முன்பு இருந்த ’ரெசிடெண்ட்’ (Resident's Post) பதவி ரத்து செய்யப்பட்டு விட்டது.

சரவாக் மாநிலத்தில் உள்ள பிரிவுகள்

தொகு

சபா மாநிலத்தில் உள்ள பிரிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Malaysia - Local government - Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
  2. "Malaysia is a federation separated into two..." ResearchGate (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
  3. Encyclopædia Britannica 1992, ப. 278.
  4. The National Archives 1945, ப. 2.
  5. Renton et al. 1908.
  6. United States. Hydrographic Office 1917.
  7. Tregonning, H.G. (1970). The Philippine Claim to Sabah (PDF). The Malayan Branch of the Royal Asiatic Society.

வெளி இணைப்புகள்

தொகு

மேலும் காண்க

தொகு