சமரகான் பிரிவு
சமரகான் பிரிவு (மலாய் மொழி: Bahagian Samarahan; ஆங்கிலம்: Samarahan Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். இந்தப் பிரிவு 1986 சூலை 24-ஆம் தேதி நிறுவப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 4,967.4 சதுர கி.மீ.[1]
சமரகான் பிரிவு | |
---|---|
Samarahan Division | |
சரவாக் | |
கொடி | |
சரவாக் மாநிலத்தில் சமரகான் பிரிவு | |
ஆள்கூறுகள்: 01°27′34″N 110°29′56″E / 1.45944°N 110.49889°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | சமரகான் பிரிவு |
நிர்வாக மையம் | கோத்தா சமரகான் |
உள்ளூர் நகராட்சி | 1. கோத்தா சமரகான் நகராண்மைக் கழகம் Majlis Perbandaran Kota Samarahan (MPKS) 2. சிமுஞ்சான் மாவட்ட மன்றம் Majlis Daerah Simunjan (MDS) |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,967.4 km2 (1,917.9 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 2,46,782 |
• அடர்த்தி | 12/km2 (30/sq mi) |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | QC |
சமரகான் பிரிவில் உள்ள நான்கு நிர்வாக மாவட்டங்களின் மொத்த மக்கள் தொகை 246,782 ஆகும். 2015 ஏப்ரல் 11-ஆம் தேதி, ஒரு புதிய பிரிவை உருவாக்குவதற்காக செரியான் மாவட்டம், சமரகான் பிரிவில் இருந்து பிரிக்கப்பட்டது.
சமரகான் மாவட்டம் (Samarahan District); அசா செயா மாவட்டம் (Asajaya District); சாடோங் செயா (Sadong Jaya District); துணை மாவட்டம்; ஆகியவை கோத்தா சமரகான் நகராண்மைக் கழகத்தின் (Kota Samarahan Municipal Council) அதிகாரத்தின் கீழ் வருகின்றன.[2]
பொது
தொகுசமரகான் பிரிவு மாவட்டங்கள்
தொகுசமரகான் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:
- சமரகான் மாவட்டம் ('Samarahan District)
- அசா செயா மாவட்டம் (Asajaya District)
- செரியான் மாவட்டம் (Serian District)
- சிமுஞ்சான் மாவட்டம் (Simunjan District)
இந்த சமரகான் பிரிவின் மக்கள்தொகை கலாசார அடிப்படையில் ஒரு கலவையாக உள்ளது. பெரும்பாலும் பிடாயூ, இபான், மலாய்க்காரர், சீனர்கள் இனக் குழுவினர் மிகுதியாகக் காணப் படுகின்றனர்.
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Portal Rasmi Pentadbiran Bahagian Samarahan". samarahan.sarawak.gov.my. Archived from the original on 18 June 2022. பார்க்கப்பட்ட நாள் 23 May 2022.
- ↑ "Laman Web Rasmi Majlis Perbandaran Kota Samarahan". mpks.sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
வெளி இணைப்புகள்
தொகு- e-Samarahan : Kota Samarahan News Portal பரணிடப்பட்டது 2018-03-23 at the வந்தவழி இயந்திரம்