சமரகான் மாவட்டம்
சமரகான் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Samarahan; ஆங்கிலம்: Samarahan District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; சமரகான் பிரிவில் ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கோத்தா சமரகான் நகரம்.[1][2]
சமரகான் மாவட்டம் | |
---|---|
Samarahan District | |
சரவாக் | |
ஆள்கூறுகள்: 01°27′34″N 110°29′56″E / 1.45944°N 110.49889°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | சமரகான் பிரிவு |
மாவட்டம் | சமரகான் மாவட்டம் |
நிர்வாக மையம் | சமரகான் நகரம் |
மாநகராட்சிகள் | 1. கோத்தா சமரகான் நகராண்மைக் கழகம் Majlis Perbandaran Kota Samarahan (MPKS) 2. சிமுஞ்சான் மாவட்ட மன்றம் Majlis Daerah Simunjan (MDS) |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | QC |
இணையதளம் | mpks.sarawak.gov.my கோத்தா சமரகான் நகராட்சி மன்றம் |
சமரகான் பிரிவில் நான்கு நிர்வாக மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் சமரகான் மாவட்டமும் ஒன்றாகும்.
- சமரகான் மாவட்டம் - Samarahan District
- அசா செயா மாவட்டம் - Asajaya District
- செரியான் மாவட்டம் - Serian District
- சிமுஞ்சான் மாவட்டம் - Simunjan District
பொது
தொகுசமரகான் பிரிவின் நான்கு நிர்வாக மாவட்டங்களின் மொத்த மக்கள் தொகை 246,782 ஆகும். 2015 ஏப்ரல் 11-ஆம் தேதி, ஒரு புதிய பிரிவை உருவாக்குவதற்காக செரியான் மாவட்டம், சமரகான் பிரிவில் இருந்து பிரிக்கப்பட்டது.
சமரகான் பிரிவின் மக்கள்தொகை கலாசார அடிப்படையில் ஒரு கலவையாக உள்ளது. பெரும்பாலும் பிடாயூ, இபான், மலாய்க்காரர், சீனர் இனக்குழுவினர் மிகுதியாக வாழ்கின்றனர்.
கோத்தா சமரகான் நகராண்மைக் கழகம்
தொகுசமரகான் மாவட்டம்; அசா ஜெயா (Asajaya) மாவட்டம்; சாடோங் ஜெயா (Sadong Jaya) துணை மாவட்டம்; ஆகியவை கோத்தா சமரகான் நகராண்மைக் கழகத்தின் (Kota Samarahan Municipal Council) அதிகாரத்தின் கீழ் வருகின்றன.[3]
2010-ஆம் ஆண்டு நிலவரப்படி, சமரகான் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 12,724 ஆகும். மேலும் கோத்தா சமரகான் நகராண்மைக் கழகத்தினால் நிர்வகிக்கப்படும் அனைத்து நகரங்களின் மக்கள் தொகை 85,495 ஆகும்.[4]
கோத்தா சமரகான்
தொகு1983 ஆகஸ்டு 19-ஆம் தேதி முவாரா துவாங் எனும் துணை மாவட்டம் முழு மாவட்ட நிலைக்குத் தகுதி உயர்த்தப் பட்டது. அதன் பின்னர் சமரகான் மாவட்டம் என புதுப் பெயரில் மாற்றம் கண்டது.
மாவட்டத் தகுதி உயர்வுக்கு ஏற்ற வகையில், சமரகான் நகர்ப் பகுதியில் இருந்த முவாரா துவாங் சந்தையும் (Muara Tuang bazaar) ஒரு நகரம் எனும் தகுதிக்கு நிலை உயர்த்தப்பட்டது. அந்த வகையில் கோத்தா சமரகான் என்று இப்போது அனைவராலும் அறியப் படுகிறது.
பாத்தாங் சமரகான்
தொகுசமரகான் மாவட்டத்தில், கோத்தா சமரகான் நகரம் மிக முக்கியமான நகரம். கோத்தா சமரகான் என்பது மலாய் மொழியில் சமரகான் நகரம் என்று பொருள்படும்.[5] சமரகான் மாவட்டத்தின் பெயரால் பெயரிடப்பட்டது.
இந்த நகரம் தொடக்கக் காலக் குடியேற்றத்தின் மையப் புள்ளியாக இருந்தது. அப்போது ஒரு முக்கிய நதியாக விளங்கிய பாத்தாங் சமரகான் எனும் பெயரில் இந்த நகரமும் அழைக்கப் படுகிறது.
சமரகான் மாவட்டக் காட்சியகம்
தொகு-
யுனிமாஸ் பல்கலைக்கழகம் 1
-
அசா ஜெயா பூங்கா
-
நகராண்மைக் கழகம்
-
சிமுஞ்சான் கடைவீதி
-
யுனிமாஸ் பல்கலைக்கழகம் 2
மேற்கோள்கள்
தொகு- ↑ "Malaysia Districts". Statoids.com.
- ↑ "Malaysia: Administrative Division". City Population.
- ↑ "Laman Web Rasmi Majlis Perbandaran Kota Samarahan". mpks.sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
- ↑ "Sarawak Statistics Yearbook 2019". Buku Tahunan Perangkaan Sarawak / Yearbook of Statistics Sarawak (Department of Statistics, Malaysia): 17. December 2020. பன்னாட்டுத் தர தொடர் எண்:0128-7613. https://www.dosm.gov.my/. பார்த்த நாள்: 09 December 2021.
- ↑ "kota in English". Glosbe.
இவற்றையும் பார்க்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- e-Samarahan : Kota Samarahan News Portal பரணிடப்பட்டது 2018-03-23 at the வந்தவழி இயந்திரம்