சிமுஞ்சான் மாவட்டம்

மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள மாவட்டம்

சிமுஞ்சான் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Simunjan; ஆங்கிலம்: Simunjan District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; சமரகான் பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும். செரியான் மற்றும் செரி அமான் ஆகிய நகரங்களுக்கு இடையே இந்த மாவட்டம் அமைந்துள்ளது.

சிமுஞ்சான் மாவட்டம்
Simunjan District
Daerah Simunjan
சிமுஞ்சான் மாவட்டம் is located in மலேசியா
சிமுஞ்சான் மாவட்டம்
      சிமுஞ்சான் மாவட்டம்
ஆள்கூறுகள்: 1°22′59″N 110°45′0″E / 1.38306°N 110.75000°E / 1.38306; 110.75000
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுசமரகான் பிரிவு
மாவட்டங்கள்சிமுஞ்சான் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்1,370.12 km2 (529.01 sq mi)
ஏற்றம்
54 m (177 ft)
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்39,600
 • அடர்த்தி29/km2 (75/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
947xx - 948xx
தொலைபேசி எண்கள்+6-082
போக்குவரத்துப் பதிவெண்கள்QC

சரவாக் மாநிலத் தலைநகர் கூச்சிங்கின் தென்-கிழக்கே 51.4 கிலோமீட்டர் (32 மைல்) தொலைவில் அமைந்துள்ள இந்த மாவட்டத்தின் எல்லையில் செபுயாவ் மற்றும் சமரகான் நகரங்கள் எல்லைகளாக உள்ளன.

இந்த மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் மலாய் மக்கள் மற்றும் இபான் மக்கள். பத்தாங் சாடோங் ஆறு சிமுஞ்சான் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறு ஆகும்.

பொது

தொகு

சிமுஞ்சான் அதன் பெயரை "பூரோங் முஞ்சான்" (Burung Munjan) எனும் பறவையில் இருந்து பெற்றது. முஞ்சான் பறவைகள் சிமுஞ்சான் பகுதிகளுக்குச் சொந்தமான ஒரு பறவை என அறியப்படுகிறது. இந்தப் பறவைகள் நெகேலி மலைக்காடுகளில் (Gunung Ngeli) அதிகமாக இருந்தன.[2]

முஞ்சான் பறவையின் சிலை 1990-ஆம் ஆண்டு சிமுஞ்சான் நகரத்தின் மைய மைதானத்தில் நிறுவப்பட்டது. சிமுஞ்சான் பகுதிகளில் மனித நடமாட்டம் அதிகமாக இருந்ததால் முஞ்சான் பறவைகள் அழிந்துவிட்டதாகவும் நம்பப்படுகிறது.[3]

மேலும் காண்க

தொகு

காலநிலை

தொகு

சிமுஞ்சான் வெப்பமண்டல மழைக்காடு காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் மிக அதிக மழைப்பொழிவைக் கொண்டுள்ளது.

தட்பவெப்ப நிலைத் தகவல், சிமுஞ்சான்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 29.9
(85.8)
30.2
(86.4)
31.1
(88)
32.0
(89.6)
32.4
(90.3)
32.2
(90)
32.1
(89.8)
32.0
(89.6)
31.8
(89.2)
31.7
(89.1)
31.4
(88.5)
30.7
(87.3)
31.46
(88.63)
தினசரி சராசரி °C (°F) 26.2
(79.2)
26.4
(79.5)
26.9
(80.4)
27.4
(81.3)
27.8
(82)
27.5
(81.5)
27.2
(81)
27.2
(81)
27.2
(81)
27.2
(81)
27.0
(80.6)
26.6
(79.9)
27.05
(80.69)
தாழ் சராசரி °C (°F) 22.5
(72.5)
22.6
(72.7)
22.8
(73)
22.9
(73.2)
23.2
(73.8)
22.8
(73)
22.4
(72.3)
22.5
(72.5)
22.6
(72.7)
22.7
(72.9)
22.6
(72.7)
22.5
(72.5)
22.68
(72.82)
மழைப்பொழிவுmm (inches) 471
(18.54)
358
(14.09)
284
(11.18)
272
(10.71)
246
(9.69)
188
(7.4)
180
(7.09)
254
(10)
275
(10.83)
308
(12.13)
349
(13.74)
445
(17.52)
3,630
(142.91)
ஆதாரம்: Climate-Data.org[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Administrator. "Portal Rasmi Pentadbiran Bahagian Samarahan". samarahan.sarawak.gov.my.
  2. "Sejarah". Pusat Internet Pejabat Daerah Lama Simunjan. பார்க்கப்பட்ட நாள் 25 April 2021.
  3. Chek, Abdullah (1 January 2016). "1/1/16 The eroding simunjan nan hilang". ABC Sadong. பார்க்கப்பட்ட நாள் 25 April 2021.
  4. "Climate: Simunjan". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 29 October 2020.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிமுஞ்சான்_மாவட்டம்&oldid=4104832" இலிருந்து மீள்விக்கப்பட்டது