செரி அமான் மாவட்டம்
செரி அமான் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Sri Aman; ஆங்கிலம்: Sri Aman District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் செரி அமான் பிரிவில் உள்ள இரு மாவட்டங்களில் ஒரு மாவட்டம் ஆகும். சிமாங்காங் நகரம் (Simanggang) இந்த மாவட்டத்தின் நிர்வாக மையமாக விளங்குகிறது.[1]
செரி அமான் மாவட்டம் Daerah Sri Aman Sri Aman District | |
---|---|
ஆள்கூறுகள்: 1°14′7″N 111°28′11″E / 1.23528°N 111.46972°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | செரி அமான் பிரிவு |
மாவட்டம் | செரி அமான் மாவட்டம் |
நிர்வாக மையம் | சிமாங்காங் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,323 km2 (897 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 64,905 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
சிமாங்காங் நகரம், 1974 முதல் 2019 வரை செரி அமான் என்று அழைக்கப்பட்டது. மலாய் மொழியில் அமைதி நகரம் என்று பொருள்படும். செரி அமான் மாவட்டம் 2,323 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
பொது
தொகு2010-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த மாவட்டத்தின் மக்கள் தொகை 64,905. அவர்களில் 62.2% இபான் மக்கள்; 22.4% மலாய் மக்கள்; 14.1% சீனர் மக்கள்; மற்றும் 0.6% பிடாயூ இனக்குழுவினர்.
இபான் மக்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் ஆகும். சீனர்கள் சில்லறை கடைகள் வைத்துள்ளனர். மற்றும் மலாய்க்காரர்கள் மற்றும் பிடாயூ இனக்குழுவினர் அரசாங்க ஊழியர்களாக உள்ளனர்.[2]
சுற்றுலா
தொகுசெரி அமான் பிரிவில் பத்தாங் ஆய் தேசியப் பூங்கா (Batang Ai National Park) உள்ளது; மலுடாம் தேசியப் பூங்கா (Maludam National Park) ஆகிய புகழ் வாய்ந்த தேசிய பூங்காக்கள் சுற்றுலா ஈர்ப்புகளாக உள்ளன.
சுற்றுலாத்துறை, குறிப்பாக சுற்றுச்சூழல் சுற்றுலா, மற்றும் கலாசார சுற்றுலா போன்றவை உள்ளூர்ப் பொருளாதாரத்தின் முக்கிய பகுதிகளாகத் திகழ்கின்றன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sri Aman Division, formerly known as Simanggang or Second Division, was established on 1 June 1873. The name Sri Aman was taken in conjunction with the historic event of the Sri Aman Declaration (a peace agreement signed on 21 October 1973 between the Government and communist terrorists)". web.archive.org. 19 October 2006. Archived from the original on 19 அக்டோபர் 2006. பார்க்கப்பட்ட நாள் 25 January 2023.
- ↑ "Sri Aman is better known to most Sarawakians as the place where tidal bores occur. The annual "Pesta Benak" attract tens of thousands of people to the banks of Batang Lupar to witness all sorts of water sports". www.etawau.com. பார்க்கப்பட்ட நாள் 25 January 2023.
- ↑ "Sri Aman is better known to most Sarawakians as the place where tidal bores occur. The annual "Pesta Benak" attract tens of thousands of people to the banks of Batang Lupar to witness all sorts of water sports". www.etawau.com. பார்க்கப்பட்ட நாள் 25 January 2023.
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Sri Aman தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Sri Aman Residen Office
- Sri Aman Tourism பரணிடப்பட்டது 2006-12-05 at the வந்தவழி இயந்திரம்