மிரி
மிரி (மலாய் மொழி: Miri; ஆங்கிலம்: Miri; ஜாவி: Jawi: ميري; சீனம்: 美里) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் மிரி பிரிவு, மிரி மாவட்டத்தில் உள்ள மாநகரமாகும். போர்னியோ தீவில் புரூணையின் எல்லைக்கு அருகில் உள்ளது.
மிரி நகரம் | |
---|---|
Miri Town | |
சரவாக் | |
மேலிருந்து, இடமிருந்து வலமாக: கனடா குன்று, மிரி மாநகர் மன்ற வளாகம், மிரி இரண்டாம் உலகப் போர் நினைவு பூங்கா, கடல் குதிரை கலங்கரை விளக்கம், மிரி பெட்ரோலியம் அருங்காட்சியகம் | |
ஆள்கூறுகள்: 04°23′33″N 113°59′10″E / 4.39250°N 113.98611°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மிரி | மிரி பிரிவு |
மாவட்டம் | மிரி மாவட்டம் |
ராயல் டச்சு செல் நிறுவனம் | 10 ஆகஸ்டு 1910 |
நகராட்சித் தகுதி | 6 நவம்பர் 1981 |
மாநகர் தகுதி | 20 மே 2005 |
அரசு[1] | |
• வகை | மிரி மாநகர் மன்றம் |
• மாநகரத் தலைவர் (Mayor) | அடாம் இ சியூ சாங் |
பரப்பளவு[2] | |
• மிரி மாநகரம் | 997.43 km2 (385.11 sq mi) |
ஏற்றம்[3] | 8 m (26 ft) |
தாழ் புள்ளி | 0 m (0 ft) |
மக்கள்தொகை (2020)[4] | |
• மிரி மாநகரம் | 300,543 |
• அடர்த்தி | 235/km2 (610/sq mi) |
• | Mirian |
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒசநே+8) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 98xxx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +60 85 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | QM; QM****A HQ |
இணையதளம் | www |
இந்த மாநகரம் 997.43 சதுர கிலோமீட்டர் (385.11 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது. கூச்சிங் மாநகரின் வடகிழக்கில் 798 கி.மீ. (496 மைல்) தொலைவிலும்; கோத்தா கினபாலுவுக்கு தென்மேற்கில் 329 கி.மீ. (204 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.
2020-ஆம் ஆண்டு நிலவரப்படி, இதன் மக்கள் தொகை 300,543. சரவாக் மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது.[5]
வரலாறு தொகு
மிரி நகரம் நிறுவப் படுவதற்கு முன்பு, சரவாக் மாநிலத்தின் வடக்குப் பகுதியின் நிர்வாக மையமாக மருடி (Marudi) நகரம் இருந்தது. 1910-ஆம் ஆண்டில், ராயல் டச்சு செல் (Royal Dutch Shell) எனும் நிறுவனத்தின் மூலமாக முதல் எண்ணெய்க் கிணறு மிரியில் தோண்டப்பட்டது. அதன் பின்னர்தான் மிரி எனும் நகரமே வெளிச்சத்திற்கு வந்தது.
மிரியில் எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டது, மிரி நகரத்தின் விரைவான வளர்ச்சிக்கு பெரிய அளவில் வழிவகுத்தது. அதன் விளைவாக 1929-ஆம் ஆண்டில் சரவாக் மாநிலத்தின் வடக்குப் பகுதியின் நிர்வாக மையமாகவும் மாறியது.
இரண்டாம் உலகப் போர் தொகு
இரண்டாம் உலகப் போரின் போது, தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானிய படையெடுப்பின் போது, ச்ப்பானியர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த மிரி எண்ணெய் வயல்களை ஜேம்சு புரூக் அரசாங்கம் அழித்தது. ச்ப்பானியர்கள் வருகிறார்கள் என்று கேள்விப்பட்டது மிரி எண்ணெய் வயல்களை எரித்து விட்டார்கள்.
ஆனால் எந்தப் பயனும் இல்லை; போர்னியோவில் ச்ப்பானியத் துருப்புக்கள் முதலில் தரையிறங்கிய இடமே மிரி நகரம் தான். எண்ணெய் வயல்களை எரித்ததால் எந்த நன்மையும் ஏற்படவில்லை.
ஆழ்க்கடலில் எண்ணெய்க் கிணறுகள் தொகு
எஞ்சி இருந்த எண்ணெய் வயல்களை ஜப்பானியர்கள் பயன்படுத்தி வந்தனர். இருப்பினும் மிரியில் இருந்த எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையங்கள், நேச நாடுகளின் அடுத்தடுத்த வான்வழித் தாக்குதல்களுக்கு இலக்காக மாறின.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிரி நகரத்தின் பொருளாதாரத்தில் பெட்ரோலியத் தொழில் மிக முக்கியப் பங்கு வகித்தது. 1950-களில் இருந்து எண்ணெய்க் கிணறுகள் ஆழ்க்கடலில் தோண்டப்பட்டன.
பெட்ரோனாஸ் தொகு
1989 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் மிரியின் உள்நாட்டுப் பகுதிகளில் புதிய எண்ணெய் வயல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
1974-ஆம் ஆண்டில், மலேசியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான பெட்ரோனாஸ் உருவானது. மிரி வட்டாரத்தில் எண்ணெய் ஆய்வுகளில் பெட்ரோனாஸ் மற்றும் ஷெல் நிறுவனங்கள் இணைந்து செயல்படத் தொடங்கின.
பொது தொகு
2005-ஆம் ஆண்டில், மிரி நகரம், மலேசியாவின் அதிகாரப்பூர்வ மாநகரத் தகுதியைப் பெற்றது. மலேசியாவில் மாநகர்த் தகுதியைப் பெற்ற 10-ஆவது நகரமாக விளங்குகிறது.
யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தளமான குனோங் முலு தேசியப் பூங்கா (Gunung Mulu National Park); லோகான் பூனுட் தேசியப் பூங்கா (Loagan Bunut National Park); லாம்பிர் ஹில்ஸ் தேசியப் பூங்கா (Lambir Hills National Park), நியா தேசிய பூங்கா (Niah National Park) மற்றும் மிரி-சிபுட்டி பவளப்பாறை தேசியப் பூங்கா (Miri-Sibuti Coral Reef National Park) ஆகியவற்றின் முக்கிய சுற்றுலா இடங்களின் நுழைவாயிலாகவும் மிரி விளங்குகிறது.[6][7]
மிரி காட்சியகம் தொகு
-
மிரி ஹவாய் கடற்கரை
-
மிரி நகரம்
-
மிரி சுங்கை ஆராங் ஆறு
-
படத் தொகுப்பு
-
தூசான் கடற்கரை
மேற்கோள்கள் தொகு
- ↑ "Official Website of Miri City Council - Mayor message". Miri City Council. http://www.miricouncil.gov.my/modules/web/pages.php?mod=webpage&sub=page&id=48.
- ↑ "Miri Council ... in Brief". Website of Miri City Council. 4 September 2014. http://www.miricouncil.gov.my/modules/web/pages.php?mod=webpage&sub=page&id=65&menu_id=0&sub_id=96.
- ↑ "Malaysia Elevation Map (Elevation of Miri)". Flood Map : Water Level Elevation Map இம் மூலத்தில் இருந்து 22 August 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150822155736/http://www.floodmap.net/elevation/ElevationMap/?gi=1738050.
- ↑ Sarawak Visitors' Guide 2014 - Miri. Sarawak: Sarawak Tourism Board. 2014. பக். 73, 78 இம் மூலத்தில் இருந்து 21 மார்ச் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150321100359/http://sarawaktourism.com/v2/wp-content/uploads/2014/10/Sarawak-Visitor-Guide-Miri.pdf. பார்த்த நாள்: 20 மே 2022.
- ↑ "Diving in Miri-Sibuti Coral Reefs National Park". Sarawak Tourism Board இம் மூலத்தில் இருந்து 21 March 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150321094922/http://sarawaktourism.com/attraction/diving-in-miri-sibuti-coral-reef-national-park/.
- ↑ "Miri Nature Society: Coral reefs in Miri under threat". The Borneo Post. 21 June 2010 இம் மூலத்தில் இருந்து 22 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140222041018/http://www.theborneopost.com/2010/06/21/miri-nature-society-coral-reefs-in-miri-under-threat/.