சிபு
சிபு (மலாய்: Sibu; ஆங்கிலம்: Sibu; சீனம்: 詩巫; பின்யின் சீனம்: Shiwu; ஜாவி: سيبو); என்பது மலேசியா, சரவாக் மாநிலம், சிபு பிரிவு, சிபு மாவட்டத்தின் தலைநகரமாகும். போர்னியோ தீவில் அமைந்துள்ள இந்த நகரம் 129.5 சதுர கிலோமீட்டர் (50.0 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.[10]
சிபு நகரம் | |
---|---|
Sibu Town | |
சரவாக் | |
| |
அடைபெயர்(கள்): "அன்ன நகரம்" | |
சரவாக்கில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 02°17′16″N 111°49′51″E / 2.28778°N 111.83083°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | சிபு பிரிவு |
மாவட்டம் | சிபு மாவட்டம் |
ஜேம்சு புரூக் குடியேற்றம் | 1862 |
வொங் நாய் சியோங் குடியேற்றம் | 21 சனவரி 1901 |
மாநகராட்சி | 1 நவம்பர் 1981 |
அரசு | |
• வகை | சிபு மாநகராட்சி |
பரப்பளவு | |
• சிபு நகரம் | 129.5 km2 (50.0 sq mi) |
ஏற்றம் | 0 m (0 ft) |
உயர் புள்ளி | 59 m (194 ft) |
மக்கள்தொகை (2010)[5] | |
• சிபு நகரம் | 1,62,676 |
• அடர்த்தி | 1,256/km2 (3,250/sq mi) |
• பெருநகர் | 2,40,165 (2,014) |
நேர வலயம் | ஒசநே+8 (மநே[6]) |
• கோடை (பசேநே) | ஒசநே+8 (இல்லை) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 96xxx[7] |
மலேசியத் தொலைபேசி | 084 (தரைவழி மட்டும்)[8] |
மலேசிய வாகனப் பதிவெண்கள் | QS (டாக்சிகள் தவிர அனைத்து வாகனங்களுக்கும்) HQ (டாக்சிகளுக்கு மட்டும்)[9] |
இணையதளம் | www |
இந்த நகரம் ராஜாங் ஆறு, இகான் ஆறு எனும் இரு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. [11] இது தென் சீனக் கடலில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[12]
மேலும் இந்த நகரம், மாநிலத் தலைநகரான கூச்சிங் நகரின் வடகிழக்கில் சுமார் 191.5 கிலோமீட்டர் (119 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது.[13]
பொது
தொகுசிபுவில் உள்ள முதன்மை இனத்தவர்கள் சீனர்கள்; குறிப்பாக பூச்சௌ (Fuzhou) சீன இனத்தவர். மெலனாவ் (Melanau), மலாய் மற்றும் இபான் போன்ற இதர உள்ளூர் இனக் குழுவினரும் உள்ளனர். ஆனால் சராவாக்கில் உள்ள மற்ற பகுதிகளைப் போல் இல்லாமல், குறிப்பிட்டுச் சொல்லும் எண்ணிக்கையில் உள்ளூர் இனக் குழுவினர் இல்லை.[14] 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சிபு நகரின் மக்கள் தொகை 162,676 ஆகும்.[5]
1862-ஆம் ஆண்டில் சிபுவில் குடியேறிய ஜேம்சு புரூக் என்பவரால் டாயக் மக்களின் தாக்குதல்களைத் தடுக்க, இந்த நகரில் ஒரு கோட்டை கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சீன ஹொக்கினியர்களின் (Chinese Hokkien) ஒரு சிறிய குழு, கோட்டையைச் சுற்றியுள்ள நகரப் பகுதியில் பாதுகாப்பாக வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் குடியேறியது.
சிபுவின் முதல் மருத்துவமனை
தொகு1901-ஆம் ஆண்டு, சிபுவுக்குள் வோங் நாய் சியோங் தலைமையில் சீனாவின் புஜியான் மாகாணத்தில் இருந்து 1,118 பூச்சௌ சீனர்கள் ஒரு பெரிய அளவிலான குடிபெயர்வை மேற்கொண்டனர். இதைச் சிபுவில் "நியூ புஜூ" என்று பிரபலமாகக் குறிப்பிடப் படுகிறது.
சிபு பஜார் மற்றும் சிபுவின் முதல் மருத்துவமனை புரூக் அரசாங்கத்தால் கட்டப்பட்டது. 1930-களில் லு கிங் ஹோவ் மருத்துவமனை, பல மெதடிஸ்ட் பள்ளிகள் மற்றும் தேவாலயங்கள் கட்டப்பட்டன.
சிபு நகரில் தீ விபத்துகள்
தொகுசிபு நகரம் 1889-ஆம் ஆண்டு மற்றும் 1928-ஆம் ஆண்டுகளில் தீவிபத்துகளால் எரிந்து போனது. இருப்பினும், அதற்குப் பிறகு அது மீண்டும் கட்டமைப்புச் செய்யப்பட்டது. 1941-ஆம் ஆண்டில் சரவாக்கை சப்பான் ஆக்கிரமித்த போது சிபுவில் கடுமையான மோதல்கள் எதுவும் ஏற்படவில்லை.
1942-ஆம் ஆண்டு சூன் மாதம் சிபுவில் ஒரு புதிய குடியிருப்பு சப்பானியர்களால் நிறுவப்பட்டது, மேலும் 1942 ஆகத்து மாதம் சிபுவின் பெயரானது சப்பானியர்களால் சிபு-ஷு "(Sibu-shu)"என்று மாற்றப்பட்டது. 1945-ஆம் ஆண்டில் சப்பானியர் சரணடைந்த பிறகு, சரவாக் மாநிலம் கிரவுன் காலனி (Crown Colony) என பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது.
மெலானாவ் மக்கள் அதிருப்தி
தொகுசிபுவில் சுதந்திரத்தை விரும்பிய இளம் மெலனாவ் மக்கள் (Melanau) குழுவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, சரவாக் பகுதியின் இரண்டாவது பிரித்தானிய ஆளுநரான சர் டங்கன் ஜார்ஜ் ஸ்டீவர்ட் (Sir Duncan George Stewart), 1949—ஆம் ஆண்டில் சிபுவுக்கு வந்த போது, சரவாக் தேசியவாதியான ரோஸ்லி டோபி (Rosli Dhoby) என்பவரால் படுகொலை செய்யப்பட்டார். 1950—ஆம் ஆண்டில் கூச்சிங் மத்திய சிறைச் சாலையில் ரோஸ்லி தூக்கிலிடப்பட்டார்.
சிபு பகுதியும், ராஜாங் பகுதியும் 1950-ஆம் ஆண்டு முதல் கம்யூனிச நடவடிக்கைகளின் மையமாக மாறியது. 1963-ஆம் ஆண்டில் சரவாக் சுதந்திரத்திற்குப் பின்னரும் இது தொடர்ந்தது. அப்பகுதியில் கம்யூனிச நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த ஓர் அரசப் பாதுகாப்புப் படை (RASCOM) நிறுவப்பட்டது.
சரவாக்கில் கம்யூனிஸ்டு கிளர்ச்சி
தொகுசரவாக்கில் கம்யூனிஸ்டு கிளர்ச்சி 1973-ஆம் ஆண்டில் கணிசமாகப் பலவீனம் அடைந்து, 1990-ஆம் ஆண்டில் கிளர்ச்சிகள் முடிவு அடைந்தன. சிபு நகராட்சியாக 1981-ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்டது. 2008-ஆம் ஆண்டு முதல், இந்த நகரானது சரவாக் புதுப்பிக்கத்தக்க பெருவழி எரிசக்தியின் (Sarawak Corridor of Renewable Energy (SCORE) நுழைவாயிலாக உள்ளது. 2011-ஆம் ஆண்டு, பூசெவ் குடியேற்றத்தின் 110-ஆவது ஆண்டு விழா சிபுவில் கொண்டாடப்பட்டது.
சிறிய நதிக்கரை நகரங்கள்; மற்றும் இபான்; ஒராங் உலு (Orang Ulu) மக்களின் நீளவீடுகளுடன் சிபு நகரமானது, மேல் ராஜாங் ஆற்றின் பிரதான சுற்றுலா நுழைவாயிலாக உள்ளது. சிபுவின் குறிப்பிடத்தக்க அடையாளங்களுள் சராவாக்கில் உள்ள மிக உயரமான கட்டிடமான விஸ்மா சன்யன் (Wisma Sanyan), லானாங் பாலம் (Lanang Bridge) (சரவாக் பகுதியில் மிக நீண்ட ஆற்றுப் பாலங்களில் ஒன்று)[15] மற்றும் விஸ்மா சன்யன் அருகே உள்ள மலேசியாவின் மிகப்பெரிய நகர சதுக்கம் ஆகியவை அடங்கும்.[16]
மிகப்பெரிய உள்ளரங்குச் சந்தை
தொகுமலேசியாவின் முதல் மற்றும் ஒரே மருத்துவ அருங்காட்சியகமான லு கிவ் ஹோவ் மருத்துவமனை நினைவு அருங்காட்சியகம் (Lau King Howe Hospital Memorial Museum) ஆகும். சரவாக் மாநிலத்தின் மிகப்பெரிய உள்ளரங்குச் சந்தை சிபுவில் உள்ள மத்திய சந்தை ஆகும்.
மேலும் சிபுவில் உள்ள சில சுற்றுலா சிறப்புகளாக: சிபு மரபுவழி மையம் (Sibu Heritage Centre), துவா பெக் காங் கோவில் (Tua Pek Kong Temple), பவாங் அஸ்ஸன் (Bawang Assan) நீளவீடு, சிபு பழைய மசூதி, ஜேட் டிராகன் கோயில் (Jade Dragon Temple), புக்கிட் அபு ஜூபிலி பார்க் (Bukit Aup Jubilee Park), புக்கிட் லீமா வனப் பூங்கா (Bukit Lima Forest Park), சிபு இரவுச் சந்தை, போர்னியோ கலாச்சார விழா (Borneo Cultural Festival) சிபு சர்வதேச நடன விழா (Sibu International Dance Festival) போன்றவை உள்ளன.
சிபுவின் பொருளாதாரத்தில் மரத் தொழில் மற்றும் கப்பல் கட்டுமானத் தொழில் ஆகிய இரண்டும் முக்கியமான இடத்தை வகிக்கின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Clarence Ting's appointment as SMC chairman hailed by many". The Borneo Post. The Borneo Post. 23 August 2019. பார்க்கப்பட்ட நாள் 25 September 2019.
- ↑ "History Of Sibu Municipal Council (SMC)". Sibu Municipal Council. பார்க்கப்பட்ட நாள் 14 February 2015.
- ↑ "Malaysia Elevation Map (Elevation of Sibu)". Flood Map : Water Level Elevation Map. Archived from the original on 22 August 2015. பார்க்கப்பட்ட நாள் 22 August 2015.
- ↑ "Sibu, Malaysia Weather History and Climate Data". WorldClimate. Archived from the original on 29 December 2004. பார்க்கப்பட்ட நாள் 14 February 2015.
- ↑ "Current local time in Sibu, Malaysia". worldtimezone.com. Archived from the original on 8 July 2015. பார்க்கப்பட்ட நாள் 8 July 2015.
- ↑ "Datasets Malaysia - Sibu". geopostcodes.com. Archived from the original on 10 September 2014. பார்க்கப்பட்ட நாள் 8 July 2015.
- ↑ "Page 58 Sarawak Visitors Guide 2014 - Sibu & Central Sarawak". sarawak.gov.my. Sarawak State Government. Archived from the original on 8 July 2015. பார்க்கப்பட்ட நாள் 8 July 2015.
- ↑ Soon, Teh Wei (23 March 2015). "Some Little Known Facts On Malaysian Vehicle Registration Plates". Malaysian Digest இம் மூலத்தில் இருந்து 8 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150708091603/http://malaysiandigest.com/features/546797-some-little-known-facts-on-malaysian-vehicle-registration-plates.html. பார்த்த நாள்: 8 July 2015.
- ↑ Shelley, Sii (10 April 2006). "About Sibu - Today's Sibu Town". Collaborative Resource Development - Universiti Malaya. Archived from the original on 5 February 2015. பார்க்கப்பட்ட நாள் 5 February 2015.
- ↑ "Sibu". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 5 February 2015.
- ↑ "Introducing Sibu". Lonely Planet. பார்க்கப்பட்ட நாள் 5 February 2015.
- ↑ "Cheap flights from Sibu to Kuching". Trip Advisor. பார்க்கப்பட்ட நாள் 5 February 2015.
- ↑ "Total population by ethnic group, sub-district and state, Malaysia, 2010 (page 376)" (PDF). Department of Statistics, Malaysia. Archived from the original (PDF) on 5 February 2015. பார்க்கப்பட்ட நாள் 5 January 2015.
- ↑ "Wong upholds transformation of Sungai Bidut via dialogue". The Borneo Post. 26 January 2015. http://www.theborneopost.com/2015/01/26/wong-upholds-transformation-of-sungai-bidut-via-dialogue/. பார்த்த நாள்: 7 February 2015.
- ↑ Chris Rowthorn; Muhammad Cohen; China Williams (1 June 2008). Borneo. Lonely Planet. pp. 185–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74059-105-8. பார்க்கப்பட்ட நாள் 18 February 2011.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help); More than one of|accessdate=
and|access-date=
specified (help); More than one of|author1=
and|last=
specified (help); More than one of|author2=
and|last2=
specified (help); More than one of|author3=
and|last3=
specified (help)