கூடாட் பிரிவு
கூடாட் பிரிவு (மலாய் மொழி: Bahagian Kudat; ஆங்கிலம்: Kudat Division) என்பது மலேசியா, சபா மாநிலத்தில் ஒரு நிர்வாகப் பிரிவாகும். ஆங்கிலத்தில் டிவிசன் (Division) என்று அழைக்கிறார்கள். இந்த முறைமை தீபகற்ப மலேசியாவில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.[1]
கிழக்கு மலேசியாவில் உள்ள சபா; சரவாக் மாநிலங்களைப் பொருத்த வரையில், பிரிவு என்பது ஒரு நிர்வாகப் பிரிவாகும். அந்த இரு மாநிலங்களிலும் ஒவ்வொரு பிரிவும் சிற்சில மாவட்டங்களாக (Daerah) பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப் படுகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் ஓர் ஆளுநர் (Resident) நியமிக்கப்பட்டு உள்ளார்.
பொது
தொகுஇந்தக் கூடாட் பிரிவு, சபா மாநிலத்தின் வடக்குப் பகுதியில் அமைந்து உள்ளது. இதன் மொத்த பரப்பளவு 4,623 சதுர கிலோமீட்டர்கள் (சபாவின் மொத்த நிலப்பரப்பில் 6.3%). சபாவின் ஐந்து பிரிவுகளில் மிகச் சிறியது.[1]
கூடாட் பிரிவுக்குள் கூடாட்; பித்தாஸ் (Pitas); கோத்தா மருடு (Kota Marudu) மாவட்டங்களும்; பாலாக் (Balak), பலம்பங்கான் (Balambangan), பாங்கி (Banggi), பங்கவான் (Bankawan), குகுவான் உத்தாரா (Guhuan Utara), கலம்புனியான் (Kalampunian) மற்றும் மலாவலி (Malawali) தீவுகளும் உள்ளடங்கி உள்ளன.
கூடாட் பிரிவின் மக்கள்தொகை
தொகு2010-ஆம் ஆண்டு நிலவரப்படி, கூடாட் பிரிவின் மக்கள்தொகை 186,516. இது சபாவின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 6% ஆகும். பெரும்பாலும் ருங்குஸ் (Rungus) மக்கள் வசிக்கின்றனர்.[2]
கூடாட் பிரிவிற்குள் உள்ள மிகப்பெரிய நகரம் கூடாட். அதுவே முக்கிய போக்குவரத்து மையமுமாகும். கூடாட் நகரத்தின் துறைமுகம் வழியாகக் கூடாட் பிரிவுக்கு ஏற்றுமதி இறக்குமதிச் சரக்குகள் கொண்டு செல்லப் படுகின்றன. இந்தப் பிரிவில் ஒரே ஒரு விமான நிலையம் மட்டுமே உள்ளது.[1]
மாநிலங்கள்
தொகுசபா மாநிலத்தின் கூடாட் பிரிவு பின்வரும் நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது:[1]
- கோத்தா மருடு மாவட்டம் (1,917 கி.மீ.2) (கோத்தா மருடு)
- கூடாட் மாவட்டம் (1,287 கி.மீ.2) (கூடாட்)
- பித்தாஸ் மாவட்டம் (1,419 கி.மீ.2) (பித்தாஸ் நகரம்)
நாடாளுமன்ற உறுப்பினர்கள் (டேவான் ராக்யாட்)
தொகுதொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|
P167 கூடாட் | அப்துல் ரகீம் பக்ரி | பெரிக்காத்தான் நேசனல் (PN - PPBM) |
P168 கோத்தா மருடு | மாக்சிமஸ் ஓங்கிலி | ஐக்கிய சபா கட்சி (United Sabah Party) |
இவற்றையும் பார்க்க
தொகுநூல்கள்
தொகு- Tregonning, K. G. (1965). A History Of Modern Sabah (North Borneo 1881–1963). University of Malaya Press.
- State of Sabah: Administrative Divisions Ordinance – Sabah Cap. 167 (PDF) of 1 November 1954; last amended on 16 September 1963, as amended in August 2010;
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "General Information". Lands and Surveys Department of Sabah. Borneo Trade. Archived from the original on 23 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Carol R. Ember; Melvin Ember (31 December 2003). Encyclopedia of Sex and Gender: Men and Women in the World's Cultures Topics and Cultures A-K - Volume 1; Cultures L-Z -. Springer Science & Business Media. pp. 770–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-306-47770-6.