மலேசியாவின் பதின்மூன்றாவது மக்களவை, 2013–2018

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

மலேசியாவின் பதின்மூன்றாவது மக்களவை, 2013–2018 (மலாய்: Parlimen Malaysia ke-13; ஆங்கிலம்: 13-th Parliament of Malaysia (2013–2018) என்பது மலேசியக் கூட்டமைப்பின் பதின்மூன்றாவது மக்களவை ஆகும். 13-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 28 ஏப்ரல் 24 சூன் 2013-இல் நடைபெற்றது.[2]2013-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (2013 Malaysian General Election) நடைபெற்ற பின்னர் பதின்மூன்றாவது மக்களவை கூடியது.

மலேசியாவின் பதின்மூன்றாவது மக்களவை
13th Malaysian Parliament
Parlimen Malaysia ke-13
(2013–2018)
12-ஆவது 14-ஆவது
மேலோட்டம்
சட்டப் பேரவைமலேசிய நாடாளுமன்றம்
ஆட்சி எல்லைமலேசியா
கூடும் இடம்மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம்
தவணை24 சூன் 2013 – 7 ஏப்ரல் 2018[1]
தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2013
அரசுநஜீப் இரண்டாம் அமைச்சரவை
(3 ஏப்ரல் 2009 வரையில்)
நஜீப் முதலாம் அமைச்சரவை
இணையதளம்www.parlimen.gov.my
மக்களவை (மலேசியா)
உறுப்பினர்கள்222
மலேசிய மக்களவைத் தலைவர்பண்டிக்கார் அமின் மூலியா
துணை மக்களைவைத் தலைவர்ரொனால்டு கியாண்டி
இசுமாயில் முகமது சையத்
செயலாளர்ரூசுமே அம்சா
பிரதமர்நஜீப் ரசாக்
எதிரணி தலைவர்அன்வர் இப்ராகீம்
(16 மார்ச் 2015 வரையில்)
வான் அசிசா வான் இசுமாயில்
Party controlபாரிசான்
இறையாண்மை
மலேசியப் பேரரசர்கெடா சுல்தான் அப்துல் ஆலிம் முவாட்சாம் சா
(12 டிசம்பர் 2016 வரையில்)
கிளாந்தான் சுல்தான் ஐந்தாம் முகமது
அமர்வுகள்
1st24 சூன் 2013 – 5 டிசம்பர் 2013
2nd10 மார்ச் 2014 – 27 நவம்பர் 2014
3rd9 மார்ச் 2015 – 27 சனவரி 2016
4th7 மார்ச் 2016 – 24 நவம்பர் 2016
5th6 மார்ச் 2017 – 30 நவம்பர் 2017
6th5 மார்ச் 2018 – 5 ஏப்ரல் 2018

மக்களவை தலைவராக பண்டிக்கார் அமின் மூலியார் தலைமை தாங்கினார். துணை மக்களவைத் தலைவர் ரொனால்டு கியாண்டி மற்றும் இசுமாயில் முகமது சையத் ஆகியோர் பொறுப்பு ஏற்றார்கள். எதிர்க்கட்சிகளின் தலைவர்களாக அன்வர் இப்ராகீம் (16 மார்ச் 2015 வரையில்); வான் அசிசா வான் இசுமாயில் ஆகியோர் பொறுப்பு வகித்தனர்.

இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் அவர்களின் தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி; 133 இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சியினர் 89 இடங்களைப் பெற்றனர்.

பொது

தொகு
 
2013-ஆம் ஆண்டு மலேசிய மக்களவை தொகுதிகளில் கட்சிகளின் அமைவு
 
2013-ஆம் ஆண்டு மலேசிய மக்களவை உறுப்பினர்களின் தொகுதிகள்

மலேசியப் பொதுத் தேர்தல், 2013-இல் போட்டியிட்ட எதிர்க் கட்சிக்களான ஜனநாயக செயல் கட்சி (ஜசெக) மற்றும் மலேசிய இசுலாமிய கட்சி (பாஸ்) ஆகிய இரு முக்கியக் கட்சிகளுக்கும் இடையிலான தொடர் கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிக் கூட்டணி கலைக்கப்பட்டது.

ஒரு புதிய எதிர்க்கட்சி கூட்டணியான பாக்காத்தான் அரப்பான் கூட்டணி உருவானது. அதில் ஜனநாயக செயல் கட்சி, மக்கள் நீதிக் கட்சி மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட அமாணா ஆகியவற்றின் கூட்டமைப்பால் அந்தப் புதிய எதிர்க்கட்சி கூட்டணி அமைக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட அமாணா கட்சியில் பெரும்பாலோர் முன்னாள் மலேசிய இசுலாமிய கட்சியின் உறுப்பினர்களாகும்.[3]

பாக்காத்தான் அரப்பான் கூட்டணி

தொகு

பல முன்னாள் அம்னோ உறுப்பினர்களும் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி எனும் பெர்சத்து கட்சியை உருவாக்கினார்கள். 2018-ஆம் ஆண்டுப் மலேசியப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கும், பாரிசான் நேசனல் கூட்டணிக்கு எதிராகச் செயல் படுவதற்கும் பாக்காத்தான் அரப்பான் கூட்டணியுடன் தேர்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். [4]

20 மார்ச் 2017 அன்று பெர்சத்து கட்சி அதிகாரப்பூர்வமாக பாக்காத்தான் அரப்பான் கூட்டணியில் ஓர் உறுப்பினரானது.[5]

மக்களவை அமைப்பு (2013–2018)

தொகு
2013-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தல்
மாநிலம்
கூட்டாட்சி
மொத்த
இடங்கள்
பாரிசான் ஜசெக பி.கே.ஆர் பாஸ்
  பெர்லிஸ் 3 3 0 0 0
  கெடா 15 10 0 4 1
  கிளாந்தான் 14 5 0 0 9
  திராங்கானு 8 4 0 0 4
  பினாங்கு 13 3 7 3 0
  பேராக் 24 12 7 3 2
  பகாங் 14 10 1 2 1
  சிலாங்கூர் 22 5 4 9 4
  கோலாலம்பூர் 11 2 5 4 0
  புத்ராஜெயா 1 1 0 0 0
  நெகிரி 8 5 2 1 0
  மலாக்கா 6 4 1 1 0
  ஜொகூர் 26 21 4 1 0
  லபுவான் 1 1 0 0 0
  சபா 25 22 2 1 0
  சரவாக் 31 25 5 1 0
மொத்தம் 222 133 38 30 21
 
2013–2018-ஆம் ஆண்டு மலேசிய மக்களவை உறுப்பினர்களின் தொகுதிகள்

மேற்கோள்கள்

தொகு
  1. "Proclamation - Dissolution of Parliament [P.U. (A) 91/2018]" (PDF). Attorney General's Chamber of Malaysia. 6 April 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Representatives Archive List of Members PARLIMEN 4". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.
  3. "Malaysia's opposition band together under new Pakatan Harapan alliance". Channel News Asia. Archived from the original on 23 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 26 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "PPBM signs MoU with Pakatan Harapan to ensure straight a fight with BN". The Sun Daily. 14 February 2017. பார்க்கப்பட்ட நாள் 23 February 2017.
  5. "PPBM is now Pakatan Harapan's 4th member". Free Malaysia Today. 20 March 2017. பார்க்கப்பட்ட நாள் 20 March 2017.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  • Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
  • Chin, U.-H. (1996). Chinese politics in Sarawak: A study of the Sarawak United People's Party. Kuala Lumpur: Oxford University Press.
  • Faisal, S. H. (2012). Domination and Contestation: Muslim Bumiputera Politics in Sarawak. Institute of Southeast Asian Studies.
  • Surohanjaya Pilehanraya Malaysia. (1965). Penyata pilehanraya-pilehanraya umum parlimen (Dewan Ra'ayat) dan dewan-dewan negeri, tahun 1964 bagi negeri-negeri Tanah Melayu. Kuala Lumpur: Jabatan Chetak Kerajaan.