மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம்

மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம் (ஆங்கிலம்: Malaysian Houses of Parliament; மலாய்: Bangunan Parlimen Malaysia) என்பது மலேசிய நாடாளுமன்றம் கூடும் கட்டிட வளாகமாகும். இந்தக் கட்டிடம் கோலாலம்பூர், பெர்தானா தாவரவியல் பூங்காவில், மலேசியத் தேசிய நினைவுச் சின்னத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம்
Malaysian Houses of Parliament
Bangunan Parlimen Malaysia
2006-இல் மலேசிய நாடாளுமன்றம்
Map
பொதுவான தகவல்கள்
வகைநடுவண் அரசு சட்டவாக்கக் கட்டடம்
கட்டிடக்கலை பாணிநவீனவியம்
இடம்கோலாலம்பூர், மலேசியா
அடிக்கல் நாட்டுதல்திசம்பர் 1959; 65 ஆண்டுகளுக்கு முன்னர் (1959-12)
கட்டுமான ஆரம்பம்செப்டம்பர் 1962; 62 ஆண்டுகளுக்கு முன்னர் (1962-09)
நிறைவுற்றதுசெப்டம்பர் 1963; 61 ஆண்டுகளுக்கு முன்னர் (1963-09)
துவக்கம்21 நவம்பர் 1963; 61 ஆண்டுகள் முன்னர் (1963-11-21)
புதுப்பித்தல்பெப்ரவரி 2004; 20 ஆண்டுகளுக்கு முன்னர் (2004-02)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை12 (கோபுரக் கட்டங்கள்)
3 (கட்டடங்கள்)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)சர் வில்லியம் ஐவர் சிப்லி (மலேசிய பொதுப்பணித் துறை)[1]

பொது

தொகு

கட்டிட வளாகம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒரு பகுதி 3-அடுக்கு பிரதான கட்டிடம்; மற்றும் ஒரு பகுதி 17-அடுக்கு 77-மீட்டர் உயரமான கோபுரம். பிரதான கட்டிடம் மக்களவை; மற்றும் மேலவை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் மக்களவையினரின் அலுவலகங்கள் கட்டிடக் கோபுரத்தில் அமைந்துள்ளன.

மத்திய அரசு கோலாலம்பூரில் இருந்த காலத்தில் இந்த வளாகம் கட்டப்பட்டது. 1990-களின் பிற்பகுதியிலிருந்து அரசாங்கத்தின் பெரும்பான்மையான நடவடிக்கைகள் புத்ராஜெயாவிற்கு நகர்ந்தாலும், கோலாலம்பூரின் நாடாளுமன்ற மாளிகையில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

கட்டுமானம்

தொகு

மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான், 1959 டிசம்பரில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைக் கட்ட பரிந்துரைத்தார். கட்டிடத்தின் கட்டுமானத்திற்கு RM 18 மில்லியன் செலவானது. செப்டம்பர் 1962-இல் கட்டுமானம் தொடங்கியது.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா; மலேசியாவின் மூன்றாவது மலேசியப் பேரரசர் துவாங்கு சையத் புத்ரா இப்னி அல்மர்கூம் சையத் அசன் ஜமாலுல்லைல் அவர்களால், 21 நவம்பர் 1963 அன்று நடைபெற்றது.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Jennifer Choo (3 July 2021). "Architectural Icon: Bangunan Parlimen Malaysia". Tatler Asia. பார்க்கப்பட்ட நாள் 13 July 2023.
  2. The Straits Times: Architect who has evolved own style over the years, 2 November 1963, page 1; accessed 23 February 2014
  3. The Straits Times: The big step forward, 2 November 1963, page 1; accessed 23 February 2014

வெளி இணைப்புகள்

தொகு