மலேசிய ரிங்கிட்

மலேசிய ரிங்கிட் (நாணயக் குறியீடு: RM; [[ஐ.எசு.ஓ 4217|MYR); (ஆங்கிலம்: Malaysia Ringgit; மலாய் மொழி: Ringgit Malaysia; சீனம்: 马来西亚令吉; ஜாவி: ريڠݢيت مليسيا) என்பது மலேசியாவின் நாணயமாகும். முன்பு மலேசிய டாலர் (Malaysian dollar) என்று அழைக்கப்பட்டது.

மலேசிய ரிங்கிட்
Ringgit Malaysia
மலேசிய ரிங்கிட் 50
ஐ.எசு.ஓ 4217
குறிMYR (எண்ணியல்: 458)
சிற்றலகு0.01
அலகு
குறியீடுRM
மதிப்பு
துணை அலகு
1100சென்
வங்கித்தாள்RM1, RM2, RM5, RM10, RM50, RM100
Coins1, 5, 10, 20, 50 சென், RM1
மக்கள்தொகையியல்
அதிகாரப்பூர்வ
பயனர்(கள்)
 மலேசியா
அதிகாரப்பூர்வமற்ற
பயனர்(கள்)
 பிலிப்பீன்சு
[1]
 தாய்லாந்து
[2]
 வியட்நாம்
[3]
வெளியீடு
நடுவண் வங்கிமலேசியா நெகரா வங்கி
 இணையதளம்www.bnm.gov.my
மதிப்பீடு
பணவீக்கம்2.1% (2016)[4]
 ஆதாரம்புள்ளியியல் துறை, மலேசியா

தமிழில் வெள்ளி (மலேசிய வெள்ளி) என்று அழைக்கப் படுகின்றது. ஒரு மலேசிய ரிங்கிட் 100 காசுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு காசை, (தமிழ்: சென்; ஆங்கிலம்: Cents; மலாய் மொழி: Sen) என்று அழைக்கிறார்கள். இந்த நாணயத்தை மலேசியாவின் நடுவண் வங்கியான மலேசியா நெகாரா வங்கி (Central Bank of Malaysia) வெளியிடுகிறது.

சொல் பிறப்பியல்

தொகு

ரிங்கிட் (Ringgit) எனும் சொல், மலாய் மொழியில் "துண்டிக்கப்பட்ட" என்பதற்குப் பொருள்படும். இது காலனித்துவ காலங்களில் மலேசியாவில் பயன்படுத்தப்பட்ட கரடுமுரடான விளிம்புகளைக் கொண்ட ஸ்பானிய வெள்ளி நாணயங்களை குறிக்கிறது.[5]

முன்பு காலத்தில் மலேசியாவில், ஸ்பானிய வெள்ளி நாணயங்கள் (Spanish Currency) கிடைப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் எளிதாக இருந்தன.[5]

அதற்குக் காரணம் மலேசியாவுக்கு அருகில் இருந்த பிலிப்பைன்ஸ் நாடு ஸ்பானியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதனால் அங்குள்ள வெள்ளி நாணயங்கள் மலேசியாவிலும் பயன்படுத்தப்பட்டன.[6]

சிங்கப்பூர் டாலர்

தொகு

நவீன பயன்பாட்டில், ரிங்கிட் எனும் சொல் மலேசிய நாணயத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பொதுவான தென்கிழக்காசியப் பாரம்பரியத்தின் காரணமாக, சிங்கப்பூர் டாலர் மற்றும் புரூணை டாலர் ஆகியவை மலாய் மொழியில் "ரிங்கிட்" என்றே இன்றும் அழைக்கப் படுகின்றன. இருப்பினும், அண்மைய காலங்களில் சிங்கப்பூர் டாலர் பொதுவாக "டாலர்" என்று அழைக்கப்படுகிறது.[7]

மூன்று நாட்டு நாணயங்களை வேறுபடுத்துவதற்கு, மலேசிய நாணயம் ரிங்கிட் மலேசியா என்று குறிப்பிடப்படுகிறது. மலேசிய நாணயத்தின் அதிகாரப்பூர்வ சுருக்கம் மற்றும் நாணயக் குறியீடு RM. அனைத்துலக அளவில், மலேசிய ரிங்கிட்டுக்கான ISO 4217 நாணயக் குறியீடு MYR ஆகும்.

பயன்பாடு

தொகு

ரிங்கிட் மற்றும் சென் எனும் மலாய்ப் பெயர்கள், 1975 ஆகஸ்டு மாதம் முதல் அதிகாரப்பூர்வப் பெயர்களாக மலேசியாவில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. முன்பு அவை அதிகாரப்பூர்வமாக ஆங்கிலத்தில் டாலர் என்றும் மலாய் மொழியில் ரிங்கிட் மற்றும் சென் என்றும் அறியப்பட்டன. மலேசிய நாட்டின் சில பகுதிகளில் டாலர் எனும் பயன்பாடு இன்றும் தொடர்கிறது.[4]

தீபகற்ப மலேசியாவின் வட மாநிலங்களில், 10 சென் என்பது, மலாய் மொழியில் குப்பாங் என்று அழைக்கப்படுகிறது. மற்றும் பினாங்கு சீனர்கள் புவாட் (鏺/鈸) என்று அழைக்கிறார்கள்.

மலாய் மொழியில் குப்பாங்

தொகு

இந்தப் புவாட் எனும் சொல் தாய் மொழிச் சொல்லான பாட் என்பதில் இருந்து பெறப்பட்டதாகக் கருதப் படுகிறது.

தீபகற்ப மலேசியாவின் பேராக், கெடா, பினாங்கு, பெர்லிஸ் வட மாநிலங்களில், 50 சென் என்பது மலாய் மொழியில் லீமா குப்பாங் (Lima Kupang) என்று அழைக்கப் படுகிறது. கிளாந்தான் மலாய் பேச்சுவழக்கில் சாமா என்று அழைக்கப் படுகிறது. மற்றும் சீன மொழியில் கோ-புவா̍ட் (五鏺/鈸) என்று அழைக்கப் படுகிறது.

வரலாறு

தொகு

1975-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குப் பிறகு டாலர் என்பது ரிங்கிட்டாக மாறியது. செண்ட் என்பது சென் என்று மாறியது. 42 ஆண்டுகளுக்கு முன்னால் தான் மலேசிய நாணயத்திற்கு ரிங்கிட் சென் எனும் அடைமொழி கிடைத்தது. [8]

16-ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் மலாக்காவை ஆட்சி செய்தனர். அப்போது அவர்கள் ஸ்பானிய வெள்ளி நாணயங்களைப் பயன்படுத்தினார்கள். அந்த ஸ்பானிய டாலர் நாணயத்தின் ஓரக் கங்குகளில் சிதறல்கள் மாதிரி மேடு பள்ளங்கள் இருந்தன.

மலாக்கா மக்களின் சொல்

தொகு

அந்தச் சிதறல்களை ரிங்கிட் என்று மலாய் மொழியில் அழைத்தார்கள். ரிங்கிட் (Ringgit) எனும் சொல்லில் ரிங் (Ring) எனும் ஆங்கிலச் சொல் உள்ளது. ஆங்கிலத்தில் வளையம் என்று பொருள்.

கிட் (git) என்றால் சிதறல் அல்லது மேடு பள்ளம். அந்த வகையில் ரிங்கிட் எனும் சொல் மலாக்கா மக்களிடம் இருந்து வந்த எதார்த்தமான சொல் ஆகும்.

கிளாந்தான் குப்பாங்

தொகு

1780-ஆம் ஆண்டு தொடக்கம், கிளாந்தான் மாநிலத்தில் குப்பாங் எனும் தங்க நாணயத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்த நாணயங்களில் அல் ஜிலுஸ் கிளந்தான் (Al Julus Kelantan) எனும் ஜாவி எழுத்துகள் இருந்தன.

இன்றும்கூட கிளாந்தானில் பத்து காசு நாணயத்தைச் சத்து குப்பாங் என்று சொல்கின்றனர். குப்பாங் என்று அழைப்பது அங்கே வழக்கம். 1909-ஆம் ஆண்டிற்குப் பிறகு கிளாந்தானில் குப்பாங் முறை அகற்றப் பட்டது. ஆனாலும் குப்பாங் எனும் சொல் இன்றும் பேச்சு வழக்கில் இருக்கிறது.

மலேசிய ரிங்கிட்டின் வரலாறு

தொகு

மலேசிய ரிங்கிட்டின் வரலாறு 1957 ஆகஸ்டு 31-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்குகிறது. மலேசியா நெகாரா வங்கி (Bank Negara Tanah Melayu) 1959 ஜனவரி 26-ஆம் தேதி தோற்றுவிக்கப் பட்டது. மலேசியாவின் நாணயத்தை சொந்தமாகவே அச்சிடலாம் என்று பேங்க் நெகாராவிற்குச் சட்ட அதிகாரம் வழங்கப்பட்டது.

ஆனாலும் மலாயா சுதந்திரம் அடைந்து பத்து ஆண்டுகளுக்குச் சொந்த நாணயங்கள் எதையும் மலேசிய நடுவண் வங்கி வெளியிடவில்லை. பிரித்தானிய நாணயங்களே பயன்படுத்தப் பட்டு வந்தன.

1967 ஜூன் 12-ஆம் தேதி மலேசியாவின் முதல் நாணயங்கள் வெளியிடப் பட்டன. மலேசிய நடுவண் வங்கிக்கு (Bank Negara Malaysia) புதிய பெயரும் சூட்டப் பட்டது.

காட்சியகம்

தொகு

மலேசியப் பணத்தாள்கள் (1960)

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Ron Gagalac (5 March 2013). "Food prices up 100% in Tawi-Tawi due to Sabah standoff". ABS-CBN News. பார்க்கப்பட்ட நாள் 22 November 2014.
  2. "Warning over fake ringgit in South". Bangkok Post. 6 September 2013. http://www.bangkokpost.com/business/news/368332/the-thai-association-of-foreign-exchange-cautions-over-fake-notes. 
  3. Muhammad Nizar Bin Jamaludin; Nur Hafizah Shaarani (30 April 2012). Panduan Memborong di Vietnam (in மலாய்). PTS Professional. pp. 156–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-967-369-196-8.
  4. 4.0 4.1 Approximately 30% of goods are price-controlled (2016 est.) (The World Factbook)
  5. 5.0 5.1 Eong, Sim Ewe (1974). "RINGGIT". Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society 47 (1 (225)): 58. பன்னாட்டுத் தர தொடர் எண்:0126-7353. https://www.jstor.org/stable/41511014. 
  6. Eong, Sim Ewe (1974). "RINGGIT". Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society 47 (1 (225)): 58–65. பன்னாட்டுத் தர தொடர் எண்:0126-7353. https://www.jstor.org/stable/41511014. 
  7. Dolar Singapura berkemungkinan bertambah lemah, Berita Harian, October 9, 2019
  8. "The Malaysian ringgit (MYR), unofficially called the Malaysian dollar, is the official currency of Malaysia. The Malaysian ringgit is divided into 100 sen". www.oanda.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 October 2022.

மேலும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_ரிங்கிட்&oldid=3777730" இலிருந்து மீள்விக்கப்பட்டது