தாய்லாந்தின் பாட்

பாட் (baht, தாய் மொழி: บาท, சின்னம்: ฿; குறியீடு: THB) தாய்லாந்தின் நாணயம் ஆகும். இது 100 சடாங்குகளாக (สตางค์) பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயத்தை தாய்லாந்து வங்கி வெளியிடுகின்றது.

தாய்லாந்தின் பாட்
บาทไทย (தாய்)
Thai money.jpg
தாய்லாந்து வங்கி வெளியிட்ட பாட் வங்கித்தாள்களும் நாணயங்களும்.
ஐ.எசு.ஓ 4217
குறிTHB (எண்ணியல்: 764)
சிற்றலகு0.01
அலகு
குறியீடு฿
மதிப்பு
துணை அலகு
1100சடாங்
வங்கித்தாள்
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)฿20, ฿50, ฿100, ฿500, ฿1000
Coins
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும்
உலோக நாணயம்(கள்)
25, 50 சடாங், ฿1, ฿2, ฿5, ฿10
 அரிதாக பயன்படுத்தப்படப்படும்

உலோக நாணயம்(கள்)

1, 5, 10 சடாங்
மக்கள்தொகையியல்
அதிகாரப்பூர்வ
பயனர்(கள்)
 தாய்லாந்து
அதிகாரப்பூர்வமற்ற
பயனர்(கள்)
 லாவோஸ்
 கம்போடியா
 மியான்மர்
Flag of Kedah.svg கெடா
வெளியீடு
நடுவண் வங்கிதாய்லாந்து வங்கி
 இணையதளம்www.bot.or.th
காசாலைஅரச தாய் நாணய ஆலை
 இணையதளம்www.royalthaimint.net
மதிப்பீடு
பணவீக்கம்2.2%
 ஆதாரம்உலகத் தரவுநூல், CIA, USA, 2013 est.

அக்டோபர் 2014இல் இசுவிப்டு வெளியீட்டின்படி தாய் பாட் உலகில் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் நாணயங்களில் பத்தாவது இடத்தில் உள்ளது.[1]

வரலாறுதொகு

தாய் பாட்[2] இங்கிலாந்தின் பவுண்டு நாணயம் போலவே உலோக எடையை அடிப்படையாகக் கொண்டது. வெள்ளியின் எடைக்கு இணையாக (தற்போது 15 கிராமாக வரையறுக்கப்பட்டுள்ளது) நாணயத்தின் மதிப்பு இருந்தது. சுக்கோத்தாய் காலத்திலிருந்தே இருந்துள்ளது; தாய்லாந்தில் குண்டு நாணயங்கள் என அறியப்படும் பாட் டுவாங் (தாய் மொழி: พดด้วง) வடிவில் அவை இருந்தன. தாய்லாந்தின் மரபு அளவைகளின்படி பல்வேறு எடைகளில் வெள்ளி மாழை வார்த்தெடுக்கப்பட்டது. இவை அடுத்து வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன:[3][4]

அலகு (அரச தாய் படியெடுத்தல் பொது முறைமை) தாய் மொழியில் சார்பு மதிப்பு பாட் சார் மதிப்பு குறிப்பு
பியா เบี้ย 1100 அட்டு 16400 சோழிக்கு தாய் மொழியில் பியா ஆகும். வணிகத்திற்கு சோழிகள் பயன்படுத்தப்பட்டன.
சோலோட் โสฬส 116 ஃபுயாங் 1128 சோலோட் என்பதற்கு "பதினாறு" அல்லது பதினாறில் ஒரு பங்கு என்று பொருள். ஃபுயாங்கின் பதினாறில் ஒரு பங்கு என்பதைக் குறிக்கின்றது.
அட்டு อัฐ 18 ஃபுயாங் 164 அட்டு என்பது எட்டு எனப்பொருள்படும்.
சியாவ்/ஃபாய் เสี้ยว/ไพ 14 ஃபுயாங் 132 சியாவ் என்றால் காற்பகுதி.
சிக் ซีก 12 ஃபுயாங் 116 சிக் என்றால் அரை.
ஃபுயாங் เฟื้อง 18 பாட் 18
சா லுயுங் สลึง 14 பாட் 14
சோங் சா லுயுங் สองสลึง 12 பாட் 12
பட் บาท 1
டாம் லுயுங் ตำลึง 4 பாட்
சாங் ชั่ง 20 டாம் லுயுங் 80

இந்த முறை 1897 வரை செயற்பாட்டில் இருந்தது; அந்தாண்டில் இளவரசர் ஜயந்தா மொங்கோல் பதின்ம முறையை பரிந்துரைத்தார். இதனை ஏற்று 1 பாட்டிற்கு 100 சடாங்குகளாக அரசர் சுலாலோங்கோம் அறிமுகப்படுத்தினார். இருப்பினும் பழைய மரபு நாணயங்களும் 1910 வரை வெளியிடப்பட்டன. இன்றும் 25 சடாங்கு நாணயம் சா லுயுங், என அழைக்கப்படுகின்றது.

நவம்பர் 27, 1902இல் பாட்டின் மதிப்பு வெள்ளியை அடிப்படையாகக் கொண்டிருந்தது. 15 கிராம் வெள்ளி ஒரு பாட்டாக இருந்தது. இதனால் தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட நாணயங்களுடன் பாட்டின் மதிப்பு வேறுபட்டுக்கொண்டு வந்தது. 1857இல் சில வெளிநாட்டு வெள்ளி நாணயங்களுக்கு எதிர் பாட்டின் மதிப்பு சட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. காட்டாக, ஒரு பாட் = 0.6 வளைகுடா டாலர் மற்றும் ஐந்து பாட் = ஏழு இந்திய ரூபாய்கள். 1880க்கு முன்பாக பிரித்தானிய பவுண்டுக்கு எட்டு பாட்டுக்களாக மாற்று வீதம் நிச்சயிக்கப்பட்டது. இது 1880களில் 10 பாட்டுகளாக மதிப்புக் குறைந்தது.

1902இல் தங்கத்திற்கு எதிராக வெள்ளியின் விலையை உயர்த்துவதின் மூலம் பாட்டின் மதிப்பைக் கூட்டியது; ஆனால் வெள்ளி விலை வீழ்ந்தபோது அரசு பாட்டின் மதிப்பைக் குறைக்கவில்லை. ஒரு பிரித்தானிய பவுண்டுக்கு 21.75 பாட்டாகத் துவங்கி நாணய மதிப்புக் கூடத் தொடங்கியது. 1908இல் இது 13ஆகவும் 1919இல் 12 பாட்டாகவும் 1923இல் 11 பாட்டாகவும் குறைந்தது. இரண்டாம் உலகப் போர் போது ஒரு பாட்டின் மதிப்பு ஒரு யென்னுக்கு இணையாக இருந்தது.

1956இல் அமெரிக்க டாலருடன் இணைக்கப்பட்டு 1973 வரை டாலருக்கு 20.8 பாட்டாக இருந்தது. பின்னர் 1978 வரை டாலருக்கு 20 பாட்டாக இருந்தது. அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியால் 1984இல் இது டாலருக்கு 25 பாட்டாக ஆனது. 1997 ஆசிய நிதி நெருக்கடிக்குப் பின்னர் நடப்புச் செலாவணி வீதத்திற்கு மாறியது. இதன் மதிப்பு 1998இல் டாலருக்கு 56 பாட்டாக வீழ்ந்தது.

செலாவணி வீதங்கள்தொகு

 
1971 முதல் பல்லாண்டுகளில் தாய் பாட்/அமெரிக்க டாலர் செலாவணி வீதம்
 
2005 முதல் பல்லாண்டுகளில் தாய்பாட்/ஐரோ செலாவணி வீதம்

தாய்லாந்து வங்கி திசம்பர் 19, 2006 முதல் பல்வேறு செலாவணிக் கட்டுக்காடுகளைக் கொண்டு வந்தது. இதனால் உள்நாட்டு வீதத்திற்கும் வெளிச்சந்தை வீதத்திற்கும் 10% வரை வேறுபாடு இருந்தது. இந்தக் கட்டுப்பாடுகளில் பெரும்பான்மையானவை மார்ச் 3, 2008இல் தளர்த்தப்பட்டன. இதனால் தற்போது இவ்விரு வீதங்களுக்கிடையே பெரும் வேறுபாடில்லை.[5]

மேற்சான்றுகள்தொகு

  1. "50 countries are now using the RMB for more than 10% of their payments value with China and Hong Kong" (PDF). SWIFT. 2014-12-06 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-01-28 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Currencies in South East Asia". aroundtheworldinaday.com. 19 ஜூலை 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 July 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "The History of Siamese Money". Welcome to Chiangmai & Chiangrai. Jun 16, 2010. செப்டம்பர் 28, 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. Sep 22, 2011 அன்று பார்க்கப்பட்டது.
  4. "เหรียญกษาปณ์ของไทย (Coins of Thailand)". Thai Heritage Treasury (Thai). Ministry of defense of Thailand. 4 பிப்ரவரி 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 October 2011 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
  5. "UPDATE 1-Onshore and offshore Thai baht converge, c.bank seen". Reuters. 3 March 2008. http://in.reuters.com/article/idINSP20869920080303. 

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
தாய் பாட்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்லாந்தின்_பாட்&oldid=3575375" இருந்து மீள்விக்கப்பட்டது