மலேசியப் பிரதமர்
மலேசியப் பிரதமர் (மலாய்: Perdana Menteri Malaysia; ஆங்கிலம்: Prime Minister of Malaysia; சீனம்: 马来西亚首相; ஜாவி: ڤردان منتري مليسيا) என்பவர் மலேசிய அரசாங்கத்தின் நிர்வாகத் தலைவர் ஆவார். மலேசியப் பேரரசர், பிரதமரை நியமனம் செய்கிறார். மலேசிய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்ற ஒருவரே பிரதமராகும் தகுதியைப் பெறுகின்றார்.
மலேசியப் பிரதமர்
Perdana Menteri Malaysia | |
---|---|
மலேசிய அரசாங்கம் மலேசியப் பிரதமர் துறை | |
பதவி | அரசாங்கத் தலைவர் |
உறுப்பினர் | மலேசிய அமைச்சரவை; தேசிய பாதுகாப்பு மன்றம்; டேவான் ராக்யாட் |
வாழுமிடம் | ஸ்ரீ பெர்டானா, புத்ராஜெயா |
நியமிப்பவர் | யாங் டி பெர்துவான் அகோங் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள், (புதுப்பிக்கத் தக்கது) |
முதலாவதாக பதவியேற்றவர் | துங்கு அப்துல் ரகுமான் |
உருவாக்கம் | 31 ஆகத்து 1957 |
ஊதியம் | மலேசிய ரிங்கிட் மாதம் தோறும் 22,826.65 (Abolished by Anwar Ibrahim) |
இணையதளம் | www |
பிரதமராகப் பொறுப்பு ஏற்கும் ஒருவர் மலேசிய அமைச்சரவையின் தலைவராகவும் செயல் படுகின்றார். அமைச்சரவை உறுப்பினர்களைப் பிரதமரின் ஆலோசனையின் பேரில் பேரரசர் நியமனம் செய்கிறார். அந்த அமைச்சரவை மலேசிய நாடாளுமன்றத்தின் முழு பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்கிறது.
பிரதமரின் கீழ், பிரதமர் துறை எனும் ஓர் அமைச்சு செயல்படுகின்றது. அன்வர் இப்ராகீம் என்பவர் மலேசியாவின் இப்போதைய பிரதமராகப் பதவி வகிக்கிறார்.
தகுதிகள்
தொகுமலேசிய அரசியலமைப்பின் படி ஒரு பிரதமராகக் கூடியவர் மக்களவையில் ஓர் உறுப்பினராக இருக்க வேண்டும். அத்துடன் மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையையும் செல்வாக்கையும் பெற்று இருக்க வேண்டும். அவர் ஒரு மலேசியராக இருக்க வேண்டும். அயல்நாட்டில் இருந்து குடியேறி குடியுரிமை பெற்று இருக்கக்கூடாது.
பிரதமரும் அமைச்சரவை உறுப்பினர்களும் மாட்சிமை தங்கிய பேரரசரிடம் சத்தியப் பிரமாணம் எடுத்து இருக்க வேண்டும். மலேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து பாரிசான் நேசனல் - அம்னோவைச் சேர்ந்த ஒருவரே பிரதமராக இருந்து வந்துள்ளார்.
இருப்பினும் 2018-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. பாக்காத்தான் ஹரப்பான் முன்னணி ஆட்சியைக் கைப்பற்றியது. நாட்டில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டதால் 19 நவம்பர் 2022-இல், முன்கூட்டியே ஒரு பொதுத்தேர்தல் நடைபெற்றது. ஒரு தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டு, பின்னர் 24 நவம்பர் 2022-இல் அன்வார் இப்ராகிம் பிரதமர் பொறுப்பை ஏற்றார்.
பிரதமர் பதவியில் துன் சம்பந்தன்
தொகுமலேசிய வரலாற்றில், ம.இ.காவின் தலைவர் வீ. தி. சம்பந்தன் அவர்களும்; மலேசிய சீனர் சங்கத்தின் தலைவர் லிங் லியோங் சிக் (Ling Liong Sik) அவர்களும்; மலேசியாவின் பிரதமர்களாகத் தற்காலிகமாகப் பதவி வகித்துள்ளனர்.[1] துன் சம்பந்தன் 1973 ஆகஸ்டு 3-ஆம் தேதி, மலேசியாவின் பிரதமர் பதவியை வகித்து உள்ளார்.[2]
முன்னாள் பிரதமர் துன் அப்துல் ரசாக் உசேன் வெளிநாட்டில் இருந்த போது, துணைப் பிரதமராக இருந்த துன் இஸ்மாயில் மரணம் அடைந்தார். அந்தக் கட்டத்தில் துன் சம்பந்தன் தற்காலிகப் பிரதமராகப் பதவி வகித்தார். அமைச்சரவைக் கூட்டத்திற்கும் தலைமை தாங்கினார்.
பிரதமர் பதவியில் லிங் லியோங் சிக்
தொகுமலேசிய சீனர் சங்கத்தின் தலைவர் லிங் லியோங் சிக், 1988 பிப்ரவரி 4-ஆம் தேதி தொடங்கி; 1988 ஆகஸ்டு 16-ஆம் தேதி வரை, மலேசியாவின் பிரதமர் பதவியை வகித்து உள்ளார்.
1988-ஆம் ஆண்டில், பாரிசான் நேசனல் கூட்டணியின் தலைமை உறுப்புக் கட்சியான அம்னோ சட்டவிரோத அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட்டது. துன் மகாதீர், பாரிசான் நேசனல் தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அதன் விளைவாக லிங் லியோங் சிக், பாரிசான் நேசனல் கூட்டணியின் புதிய தலைவரானார். புதிய கட்சியான அம்னோ பாரு, சங்கங்களின் பதிவு அதிகாரியால் சட்டப் பூர்வமாக்கப்படும் வரை, 12 நாட்களுக்கு லிங் லியோங் சிக், பிரதமராகப் பணியாற்றினார்.[3]
பிரதமர் நியமனம்
தொகுமலேசியப் பேரரசர் யாங் டி பெர்துவான் அகோங் அவர்கள், மலேசியப் பிரதமரை நியமிக்கின்றார். பிரதமர் நியமிக்கப் பட்டதும் அவரின் ஆலோசனையின் பேரில் அமைச்சர்களையும் பேரரசர் நியமிக்கின்றார்.[4]
பிரதமரின் ஆலோசனையின் பேரில் எந்த ஓர் அமைச்சரின் நியமனத்தையும் பேரரசர் எந்தக் கட்டத்திலும் ரத்து செய்யலாம். இருப்பினும், பிரதமரைத் தவிர மற்ற அமைச்சர்கள் பேரரசரின் விருப்பத்தின் பேரில் பதவியில் இருக்கலாம். அதே வேளையில் எந்த ஓர் அமைச்சரும் அவருடைய பதவி காலத்தில் அவரின் அமைச்சர் பதவியைத் துறப்பு செய்யலாம்.
நடைமுறையில், அமைச்சர்களின் நியமனம் அல்லது அமைச்சர்களின் பதவி நீக்கம் குறித்து பிரதமரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் பேரரசர் உள்ளார்.
அமைச்சரவைப் பட்டியல்
தொகுஅமைச்சரவை பெயர் | அமைச்சரவை தலைவர் | அமைச்சரவை காலம் | அமைப்பு |
---|---|---|---|
துங்கு அப்துல் ரகுமான் அமைச்சரவை 1 | துங்கு அப்துல் ரகுமான் | 31 ஆகஸ்டு 1957 19 ஆகஸ்டு 1959 |
|
துங்கு அப்துல் ரகுமான் அமைச்சரவை 2 | 22 ஆகஸ்டு 1959 24 ஏப்ரல் 1964 |
| |
துங்கு அப்துல் ரகுமான் அமைச்சரவை 3 | 25 ஏப்ரல் 1964 1969 |
| |
துங்கு அப்துல் ரகுமான் அமைச்சரவை 4 | 1969 21 டிசம்பர் 1970 |
| |
துன் அப்துல் ரசாக் அமைச்சரவை 1 | அப்துல் ரசாக் உசேன் | 22 டிசம்பர் 1970 24 ஆகஸ்டு 1974 |
|
துன் அப்துல் ரசாக் அமைச்சரவை 2 | 25 ஆகஸ்டு 1974 14 சனவரி 1976 |
| |
துன் உசேன் ஓன் அமைச்சரவை 1 | உசேன் ஓன் | 15 சனவரி 1976 8 சூலை 1978 |
|
துன் உசேன் ஓன் அமைச்சரவை 2 | 9 சூலை 1978 15 சூலை 1981 |
| |
துன் மகாதீர் பின் முகமது அமைச்சரவை 1 | மகாதீர் பின் முகமது | 16 சூலை 1981 21 ஏப்ரல் 1982 |
|
துன் மகாதீர் பின் முகமது அமைச்சரவை 2 | 22 ஏப்ரல் 1982 2 ஆகஸ்டு 1986 |
| |
துன் மகாதீர் பின் முகமது அமைச்சரவை 3 | 11 ஆகஸ்டு 1986 26 அக்டோபர் 1990 |
| |
துன் மகாதீர் பின் முகமது அமைச்சரவை 4 | 22 அக்டோபர் 1990 3 மே 1995 |
| |
துன் மகாதீர் பின் முகமது அமைச்சரவை 5 | 4 மே 1995 14 டிசம்பர் 1999 |
| |
துன் மகாதீர் பின் முகமது அமைச்சரவை 6 | 15 டிசம்பர் 1999 2 நவம்பர் 2003 |
| |
துன் அப்துல்லா படாவி அமைச்சரவை 1 | அப்துல்லா அகமது படாவி | 3 நவம்பர் 2003 26 மார்ச் 2004 |
|
துன் அப்துல்லா படாவி அமைச்சரவை 2 | 27 மார்ச் 2004 18 மார்ச் 2008 |
| |
துன் அப்துல்லா படாவி அமைச்சரவை 3 | 19 மார்ச் 2008 9 ஏப்ரல் 2009 |
| |
நஜீப் ரசாக் அமைச்சரவை 1 | நஜீப் ரசாக் | 10 ஏப்ரல் 2009 15 மே 2013 |
|
நஜீப் ரசாக் அமைச்சரவை 2 | 16 மே 2013 9 மே 2018 |
| |
துன் மகாதீர் பின் முகமது அமைச்சரவை 7 | மகாதீர் பின் முகமது | 10 மே 2018 24 பிப்ரவரி 2020 |
|
டான் ஸ்ரீ முகிதீன் யாசின் அமைச்சரவை | முகிதீன் யாசின் | 1 மார்ச் 2020 16 ஆகஸ்டு 2021 |
|
இஸ்மாயில் சப்ரி யாகோப் அமைச்சரவை | இஸ்மாயில் சப்ரி யாகோப் | 27 ஆகஸ்டு 2021 24 நவம்பர் 2022 |
|
அன்வார் இப்ராகிம் அமைச்சரவை | அன்வார் இப்ராகிம் | 24 நவம்பர் 2022 தற்சமயம் வரையில் |
|
மலேசியப் பிரதமர்களின் பட்டியல்
தொகுகட்சி: அம்னோ கூட்டணி: மலாயா கூட்டணி பாரிசான் நேசனல்
தவணை | எண். | பெயர் (தொகுதி) |
படிமம் | பதிவியில் | விலகியது | கட்சி | கூட்டணி |
---|---|---|---|---|---|---|---|
01 | 1 | துங்கு அப்துல் ரகுமான் கோலா மூடா |
31 ஆகஸ்ட் 1957 | 19 ஆகஸ்ட் 1959 | அம்னோ | மலேசிய கூட்டணி கட்சி | |
1959|02 | 19 ஆகஸ்ட் 1959 | 10 மே 1969 | |||||
1969|03 | 10 மே 1969 | 22 செப்டம்பர் 1970 | |||||
2 | துன் அப்துல் ரசாக் உசேன் பெக்கான் |
22 செப்டம்பர் 1970 | 24 ஆகஸ்ட் 1974 | அம்னோ | மலேசிய கூட்டணி கட்சி | ||
1974|04 | 24 ஆகஸ்ட் 1974 | 14 ஜனவரி 1976 | பாரிசான் நேசனல் | ||||
3 | துன் உசேன் ஓன் ஜொகூர் தீமோர் |
14 ஜனவரி 1976 | 8 ஜூலை 1978 | அம்னோ | பாரிசான் நேசனல் | ||
1978|05 | 8 ஜூலை 1978 | 16 ஜூலை 1981 | |||||
4 | துன் மகாதீர் பின் முகமது குபாங் பாசு |
16 ஜூலை 1981 | 10 மே 1982 | அம்னோ | பாரிசான் நேசனல் | ||
1982|06 | 10 மே 1982 | 3 ஆகஸ்ட் 1986 | |||||
1986|07 | 3 ஆகஸ்ட் 1986 | அக்டோபர் 1990 | |||||
1990|08 | அக்டோபர் 1990 | 24 ஏப்ரல் 1995 | |||||
1995|09 | 24 ஏப்ரல் 1995 | 29 நவம்பர் 1999 | |||||
1999|10 | 29 நவம்பர் 1999 | 31 அக்டோபர் 2003 | |||||
5 | துன் அப்துல்லா அகமது படாவி கப்பளா பத்தாஸ் |
31 அக்டோபர் 2003 | 21 மார்ச் 2004 | அம்னோ | பாரிசான் நேசனல் | ||
2004|11 | 21 மார்ச் 2004 | 8 மார்ச் 2008 | |||||
8 மார்ச் 2008 | 3 ஏப்ரல் 2009 | ||||||
2009|18 | 6 | நஜீப் துன் ரசாக் பெக்கான் |
3 ஏப்ரல் 2009 | 2018 | அம்னோ | பாரிசான் நேசனல் | |
2018| | 7 | துன் மகாதீர் பின் முகமது குபாங் பாசு |
10 மே 2018 | 24 பிப்ரவரி 2020 | மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி | பாக்காத்தான் ஹரப்பான் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Many may not know that Sambanthan was acting prime minister when both the prime minister and his deputy were out of the country at the same time.
- ↑ "Tun V.T. Sambanthan's Legacy As Nation's First Acting Indian Prime Minister For A Day In 1973". பார்க்கப்பட்ட நாள் 8 February 2022.
- ↑ "For a Few Days in 1988, Malaysia Actually Had a Chinese Prime Minister". Malaysia Today. 26 February 2019. பார்க்கப்பட்ட நாள் 8 February 2022.
- ↑ Hj. Mohd Jali, Nazaruddin, Redzuan, Ma'arof, Abu Samah, Asnarulkhadi & Hj. Mohd Rashid, Ismail (2003). Malaysian Studies: Nationhood and Citizenship, p. 73. Pearson Malaysia. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 983-2473-91-8.