முகிதீன் யாசின்

8 வது மற்றும் தற்போதைய மலேசிய பிரதமர்

முகிதீன் பின் ஹாஜி முகம்மது யாசின் (Muhyiddin bin Haji Muhammad Yassin; சீனம்: 慕尤丁·雅辛; பிறப்பு: 15 மே 1947) மலேசிய அரசியல்வாதி ஆவர். இவர் 1 மார்ச் 2020 முதல்16 ஆகத்து 2021 வரையும் மலேசியப் பிரதமராகப் பதவி வகித்தார்.இவர் அம்னோவை சேர்ந்த ஆளும் கட்சி கூட்டணி ஆதரவை மீட்டுக் கொண்டதன் பின் 16 ஆகத்து 2021யில்  அதிகாரப்பூர்வமாக பதவி விலகினார்.[3]

முகிதீன் யாசின்
Muhyiddin Yassin

慕尤丁·雅辛
8-வது மலேசியப் பிரதமர்
பதவியில்
1 மார்ச் 2020 – 16 ஆகத்து 2021
அரசர் அப்துல்லா
துணை இஸ்மாயில் சப்ரி யாகோப்
முன்னவர் மகாதீர் பின் முகமது
பின்வந்தவர் இஸ்மாயில் சப்ரி யாகோப்
மலேசிய ஐக்கிய மக்கள் கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
7 செப்டம்பர் 2016
முன்னவர் புதிய பதவி
மலேசிய உள்துறை அமைச்சர்
பதவியில்
21 மே 2018 – 24 பெப்ரவரி 2020
அரசர்
பிரதமர் மகாதீர் பின் முகமது
துணை அசீசு ஜம்மான்
முன்னவர் அகமது சாயிது அமீது
10-வது மலேசிய துணைப் பிரதமர்
பதவியில்
10 ஏப்ரல் 2009 – 28 சூலை 2015
அரசர்
பிரதமர் நஜீப் ரசாக்
முன்னவர் நஜீப் ரசாக்
பின்வந்தவர் அகமது ஸாயித் ஹமீட்
கல்வி அமைச்சர்
பதவியில்
12 ஆகத்து 2013 – 28 சூலை 2015
அரசர் அப்துல் ஆலிம்
பிரதமர் நஜீப் ரசாக்
அமைச்சர் இத்ரிசு யூசோ (2-ஆம் நிலை அமைச்சர்)
துணை
பின்வந்தவர் மாத்சிர் காலிது
பதவியில்
10 ஏப்ரல் 2009 – 11 ஆகத்து 2013
அரசர்
  • மிசான் சைனல் அபிதீன்
  • அப்துல் ஆலிம்
பிரதமர் நஜீப் ரசாக்
தேசிய முன்னணித் துணைத் தலைவர்
பதவியில்
26 மார்ச் 2009 – 26 பெப்ரவரி 2016
குடியரசுத் தலைவர் நஜீப் ரசாக்
முன்னவர் நஜீப் ரசாக்
பின்வந்தவர் அகமது சகீது அமீதி
அம்னோ துணைத் தலைவர்
பதவியில்
26 மார்ச் 2009 – 26 பெப்ரவரி 2016
குடியரசுத் தலைவர் நஜீப் ரசாக்
முன்னவர் நஜீப் ரசாக்
பின்வந்தவர் அகமது சாகிது அமீதி (பதில்)
பன்னாட்டு வணிக, தொழிற்துறை அமைச்சர்
பதவியில்
18 மார்ச் 2008 – 9 ஏப்ரல் 2009
அரசர் மிசான் சைனல் அபிதீன்
பிரதமர் அப்துல்லா அகுமது பதவீ
வேளாண்மை, வேளாண்-தொழிற்துறை அமைச்சர்
பதவியில்
31 மார்ச் 2004 – 17 மார்ச் 2007
உளநாட்டு வணிக அமைச்சர்
பதவியில்
6 திசம்பர் 1999 – 31 அக்டோபர் 2003
இளைஞர், மற்றும் விளையாட்டு அமைச்சர்
பதவியில்
4 மே 1995 – 10 நவம்பர் 1999
13-வது சொகூர் மாநில அரசுத்தலைவர்
பதவியில்
12 ஆகத்து 1986 – 13 மே 1995
பாகோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
7 சூன் 1995
முன்னவர் அகமது ஒமார்
பெரும்பான்மை 6,927 (2018)
12,842 (2013)
12,581 (2008)
18,747 (2004)
12,850 (1999)
17,599 (1995)
பதவியில்
31 சூலை 1978 – 19 சூலை 1986
தொகுதி பாகோ நாடாளுமன்றத் தொகுதி
பெரும்பான்மை 16,383 (1982)
15,610 (1978)
கம்பீர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
9 மே 2018
முன்னவர் அசோஜன் முனியாண்டி
பெரும்பான்மை 3,088 (2018)
புக்கித் செரம்பாங் உறுப்பினர்
பதவியில்
22 ஏப்ரல் 1986 – 3 ஆகத்து 1995
பெரும்பான்மை 7,020 (1990)
எதிர்ப்பில்லை (1986)
தனிநபர் தகவல்
பிறப்பு மஹியாடின் பின் மொகம்மது யாசின்[1][2]
15 மே 1947 (1947-05-15) (அகவை 76)
மூவார், சொகூர், மலாய ஒன்றியம், (இன்றைய மலேசியா)
குடியுரிமை மலேசியர்
அரசியல் கட்சி அம்னோ (1978–2016)
மஐமக (2016 முதல்)
வாழ்க்கை துணைவர்(கள்) நூரைய்னீ அப்துல் ரகுமான் (தி. 22 செப்டம்பர் 1972)
பிள்ளைகள் பக்ரி யாசின்
நபிலா
நஜ்வா
பர்கான் யாசின்
இருப்பிடம் தமன்சாரா குன்றுகள்
கோலாலம்பூர்
படித்த கல்வி நிறுவனங்கள் மலாயா பல்கலைக்கழகம்
பணி அரசியல்வாதி
அமைச்சர்
நாடாளுமன்ற உறுப்பினர்
சட்டப் பேரவை உறுப்பினர்
கையொப்பம்
இணையம் முகநூல்

இவர் பாகோ சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காம்பிர், ஜொகூர் மாநில சட்டசபை உறுப்பினரும் ஆவர்.

இவர் பிரதமராக பதவியேற்கும் முன், 2009 முதல் 2015 வரை துணை பிரதமராகவும் பின்பு 2018 முதல் 24 பெப்ரவரி 2020 வரை உள்துறை அமைச்சராகவும் பதவிவகித்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

முகிதீன் மலேசியாவின் ஜோகூரில் உள்ள முவாரில் பிறந்தார். இவரது தந்தை ஹாஜி முஹம்மது யாசின் பின் முஹம்மது. இவர் புகிஸ் வம்சாவளியைச் சேர்ந்த மலைக்காரர். முஹம்மது யாசின் பண்டார் மஹாராணியை சேர்த்த ஒரு இஸ்லாமிய மதகுரு ஆவார்.[4]

முகிதீன் தனது ஆரம்பக் கல்வியை மஹாராணி தேசியவகை பள்ளி, முவார், ஜோகூர் மற்றும் இஸ்மாயில் தேசிய வகை பள்ளி, முவார், ஜோகூர் ஆகிய இடங்களில் பெற்றார். ஜோகூரின் முவார் உயர்நிலைப் பள்ளியில் தனது இடைநிலைக் கல்வியைப் பெற்றார். பின்னர், கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் 1971 இல் பொருளாதாரம் மற்றும் மலாய் ஆய்வுகளில் இளங்கலை பட்டம் பெற்றார்.

துணை பிரதமர் தொகு

ஏப்ரல் 9, 2009 அன்று அப்துல்லா அஹ்மத் படாவியிடமிருந்து நஜிப் பொறுப்பேற்று தனது முதல் அமைச்சரவையை வெளியிட்டபோது முகிதீனை துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 9, 2009 அன்று அப்துல்லா அகமது படாவிடமிருந்து நஜீப் ரசாக்  பொறுப்பேற்ற பொழுது முகியுதீன் யாசினை தனது துணை பிரதமராக அறிவித்தார்.

மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி தொகு

ஆகஸ்ட் 2016 இல், முன்னாள் மலேசிய பிரதமர் மகாதிர் முகமதுவுடன் இணைந்து மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி (பிபிபிஎம் அல்லது சுருக்கமாக பெர்சாட்டு) என்ற புதிய அரசியல் கட்சியை முகிதீன் பதிவு செய்தார். முகியுதீன் கட்சியின் தலைவரானார், மகாதீர் மற்றும் அவரது மகன் முகிரீஸ் முறையே தலைவர் மற்றும் துணைத் தலைவரானார்கள். புதிய கட்சி பூமிபுத்ராக்கள் (மலாய்க்காரர்கள் மற்றும் ஒராங் அஸ்லி) ஆகியோர்களின் நலனை பேணும்கட்சியாகவே பதிவு செய்யப்பட்டது.[5]

பிரதமர் தொகு

அப்பொழுது நடப்பில் இருந்த மக்கள் கூட்டணியில் உளப்பூசல் காரணமாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிலிருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து மக்கள் கூட்டணி ஆட்சி 24 பெப்ரவரி 2020 முடிவுக்குவந்தது[6].

பின்னர் சுல்தான் அப்துல்லா 28 பெப்ரவரி  2020 அன்று, முகிதீன் யாசின் நாடாளுமன்றத்தில் அதிகமான ஆதரவை பெற்றிருப்பதாக தாம் நம்புவதாகவும், அதனால் 1 மார்ச் 2020 முதல் முகிதீன்யாசினை 8-வது மலேசிய பிரதமராக நியமித்தார்[7].17 மாதங்கள் பிரதமர் பொறுப்பை வகித்த பின்னர் 21 ஆகஸ்டு 2021-ஆம் தேதி பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

நெருக்கடியான காலக்கட்டம் தொகு

முகிதீன் யாசின் பதவி வகித்த 17 மாதங்களுமே சிக்கல் நிறைந்தவையாக இருத்தன. கொரோனா பெருந்தொற்றின் தீவிரத்தைத் தடுக்கத் தவறியது; சர்ச்சைக்குரிய ஊழல் புகார்கள்; கூட்டணி கட்சியின் அழுத்தம்; என பல முனைகளிலும் அவரின் அரசு நெருக்கடிகளைச் சந்தித்தது.

மலேசியாவில் கொரோனா தாக்கம் காரணமாக 12,510 பேர் இறந்து உள்ளதாகவும்; நிலைமையைச் சமாளிக்க முடியாத நிலைக்கு அரசு இயந்திரங்கள் தள்ளப் பட்டதற்குக் காரணம் முகிதீன் யாசினின் தவறான ஆளுகை என்றும் பரவலாக குற்றம் சாட்டப்பட்டது.[8]

மேற்கோள்கள் தொகு

  1. "பிரதமர் அலுவலகம் : கடிதங்கள், அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ‘மஹியாடின்’ எனக் குறிப்பிடவும்". மலேசியா கினி. https://malaysiaindru.my/191900. பார்த்த நாள்: 16 June 2021. 
  2. "Don't spell my name as Mahiaddin, Muhyiddin tells Election Commission". The Star. 29 April 2018. https://www.thestar.com.my/news/nation/2018/04/29/muhyiddin-to-ec-use-the-name-he-chose/. 
  3. "பிரதமர் விலகினார் அமைச்சரவை கலைக்கப்பட்டது" இம் மூலத்தில் இருந்து 2021-08-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210817070153/https://tamilmalar.com.my/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/. 
  4. "Archives" இம் மூலத்தில் இருந்து 11 October 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111011044125/http://thestar.com.my/news/story.asp?file=%2F2010%2F10%2F24%2Fnation%2F7289147&sec=nation. 
  5. "Muhyiddin registers Mahathir's new party". Strait Times. 10 August 2016. http://www.straitstimes.com/asia/se-asia/muhyiddin-registers-mahathirs-new-party. பார்த்த நாள்: 27 September 2016. 
  6. "Pakatan Harapan govt collapses". https://www.thestar.com.my/news/nation/2020/02/24/pakatan-harapan-govt-collapses. 
  7. "8வது பிரதமராக பதவி ஏற்றார் முகிதீன்". https://malaysiaindru.my/181756. 
  8. "மலேசிய அரசியல் நெருக்கடி: அறிய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்" (in ta). https://www.bbc.com/tamil/global-58229364. பார்த்த நாள்: 15 February 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகிதீன்_யாசின்&oldid=3685770" இருந்து மீள்விக்கப்பட்டது