மலேசிய துணைப் பிரதமர்

மலேசியத் துணைப் பிரதமர் (ஆங்கிலம்: Deputy Prime Minister of Malaysia, மலாய்: Timbalan Perdana Menteri Malaysia; ஜாவி: تيمبلن ڤردان منتري مليسي) என்பது மலேசியாவில் இரண்டாவது மிகப்பெரிய அரசியல் பதவியாகும். 1957-இல் உருவாக்கப்பட்ட இந்தப் பதவியில் இதுவரை 13 துணைப்பிரதமர்கள் பதவி வகித்துள்ளனர்.

மலேசிய துணைப் பிரதமர்
Timbalan Perdana Menteri
Deputy Prime Minister of Malaysia
மலேசிய மரபுச் சின்னம்
உறுப்பினர்அமைச்சரவை
அறிக்கைகள்மலேசிய நாடாளுமன்றம்
வாழுமிடம்செரி சாத்ரியா
அலுவலகம்பெர்தானா புத்ராவின் மேற்குப் பகுதி, புத்ராஜாயா
பரிந்துரையாளர்மலேசியப் பிரதமர்
நியமிப்பவர்சுல்தான் அப்துல்லா
மலேசியப் பேரரசர்
பதவிக் காலம்பேரரசரின் விருப்பப்படி
முதலாவதாக பதவியேற்றவர்அப்துல் ரசாக் உசேன்
உருவாக்கம்31 ஆகத்து 1957; 67 ஆண்டுகள் முன்னர் (1957-08-31)
ஊதியம்ரிங்கிட் 18,168.15/மாதம்y[1]
இணையதளம்www.pmo.gov.my/tpm/

இந்தப் பதவியை முதல் பிரதமராக பதவி வகித்த துங்கு அப்துல் ரகுமான் உருவாக்கினார். இருப்பினும் சில அமைச்சரவைகள் துணைப் பிரதமரை நியமிப்பதைத் தவிர்த்து உள்ளன.

பொது

தொகு

சூலை 2021 முதல் ஆகஸ்டு 2021 வரை 13-ஆவது மலேசிய துணை பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப் பணியாற்றினார். பிரதமராகப் பதவியேற்பதற்கு முன் 40 நாட்கள் மட்டுமே துணை பிரதமராக இருந்தார். வரலாற்றில் மிகக் குறுகிய காலம் துணைப் பிரதமராக இருந்தவர் என்றும் அறியப்படுகிறார்.[2]

அதிகாரப்பூர்வ இருப்பிடம்

தொகு

துணைப் பிரதமரின் அதிகாரப்பூர்வ இருப்பிடம் புத்ராஜாயா; ஸ்ரீ சதாரியாவில் (Sri Satria) உள்ளது. முன்பு ஸ்ரீ தாமானில் இருந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. "PM and cabinet ministers salary". Archived from the original on 2014-10-16. பார்க்கப்பட்ட நாள் 2015-07-28.
  2. "Ismail Sabri appointed DPM, Hishammuddin now senior minister". 7 July 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_துணைப்_பிரதமர்&oldid=4096893" இலிருந்து மீள்விக்கப்பட்டது