புத்ராஜாயா

புத்திராசெயா மலேசியாவில் உள்ள ஒரு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம். 1999 முதல் மலேசியாவின் கூட்டாட்சி நிருவாகத் தலைநகராகச் செயல்படுகிறது. கோலாலம்பூரின் தெற்கே அமைந்துள்ள இந்த நகர் மலேசிய அரசின் அலுவல் மையமாகும். 2005-ஆம் ஆண்டு முதல் மலேசிய அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சை தவிர மற்ற அனைத்து அமைச்சுகளும் கோலாலம்பூர் மாநகரத்திலிருந்து புத்ராஜாயாவிற்கு மற்ற பட்டன.

புத்ராஜாயா எனும் பெயர் மலேசிய நாட்டின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் அவர்ககளை நினைவுகூறும் வகையில் தேர்ந்தெடுக்குக்கப்பட்டது. ‘புத்ரா’ என்னும் சொல் சமஸ்கிரத மொழியில் அரசு புத்திரர் என பொருள் படும். ‘ஜாயா’ எனும் சொல் வெற்றியை குறிக்கின்றது.

Putrajaya signage
புத்ராஜாயா அடையாளம்

வரலாறுதொகு

1921யில் காடுகளாக இருந்த இந்த பகுதியை பிரித்தானியர்கள் ஆட்சிக்காலத்தின் பொது, புதிய ரப்பார் தோட்டமாக உருவாக்கப்பட்டது. இந்த தோட்டப்பகுதியை பெராங் பெசர் (Prang Besar) என்று அழைத்தனர். பிரிட்டனின் முதலாம் உலகப்போரின் வீரர்களால் உருவாக்க பட்டதால் இந்த தோட்டத்திற்கு பெராங் பெசர் (பெரிய போர்) எனும் பெயர் சூட்டப்பட்டது.[1]

1975-ஆம் ஆண்டு வரை இந்த பகுதி உளு லங்கட் மாவட்டத்தின் கீழ் செயல்பட்டது. பின்னர் காஜாங் மாவட்டத்தின் அதிகாரத்திற்கு மாற்றப்பட்டது.

பின்னர் மலேசியாவின் நான்காவது பிரதமரான மகாதீர் பின் முகமது அவர்கள், நெரிசலான கோலாலும்பூர் மாநகரத்தில் இருந்து அரசாங்க அலுவலகங்களை வேறு இடத்திற்கு மற்ற திட்டமிட்டார். அதற்ககா இரண்டு இடங்கள் முன்மொழியப்பட்டு பின்னர் பெராங் பெசர் தேர்தெடுக்கப்பட்டது.[2]

 
புத்ராஜாயா சின்னம்

அதனை தொடர்ந்து 1990-ஆம் ஆண்டுகளில் மலேசிய கூட்டரசு, சிலாங்கூர் மாநில அரசிடமிருந்து 11,320 ஏக்கர் பரப்பளவு (45.8 கி.மீ.2) கொண்ட பெராங் பெசர் பகுதியை வாங்கியது.

புத்ராஜாயா நிர்மாணிப்புதொகு

புத்ராஜாயா நிர்மாணிப்பு பணிகள் 1995-ஆம் ஆண்டு ஆகத்து மாதம் தொடங்கியது. அந்த காலகட்டத்தில் இது மலாயாவில் மட்டுமன்றி தென்கிழக்கு ஆசியாவில் மிக பெரிய கட்டிடப்பணியாக கருதப்பட்டது.

இதன் நிர்மாணிப்புகள் அனைத்தும் உள்ளூர் நிபுனற்காளால் திட்டமிடப்பது கன்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. கட்டுமானத்தின் பொழுது 10 விழுக்காடு பொருட்கள் மட்டுமே வெளியூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. மற்றவை அனைத்தும் உள்ளிருள் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு நிர்மாணிக்கப்பட்டது.

1997-ஆம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சின் பொழுது இதன் கட்டுமான பணிகள் சவால்களை எதிர்நோக்கியதோடு சில மேம்பாட்டு பணிகளும் நிறுத்தப்பட்டன.

போக்குவரத்து தொடர்புமுறைதொகு

புத்ராஜெயாவையே சாலை மற்றும் ரயில் வழி வந்தடையலாம். கோலாலம்பூரையும் புத்ராஜாயாவையும் இணைக்க மேக்ஸ் (MEX Highway) கட்டப்பட்டது.

2002-ஆம் ஆண்டு முதல் கே.எல்.ஐ.ஏ. ட்ரான்சிட் (KLIA Transit ) என அழைக்கப்படும் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதன் வழி கே.எல்.ஐ.ஏ. (KLIA) அனைத்துலக விமனநிலையத்தையும் கோலாலம்பூர் மாநகரையும் எளிதில் சென்றடைய முடியும்.

மக்கள்தொகு

2017-ஆம் ஆண்டில் புத்ராஜாயாவின் மக்கள் தொகை 87,000 ஆகும். இவரில் மலாய்காரர்கள் 82,500 பேர் , சீனர்கள் 500 பேர் , இந்தியர்கள் 1,200 பேர், மற்ற இனத்தவர்கள் 100 பெரும், அந்நியநாடினார் 3300 பேர் என கணக்கிடப்பட்டது.[3]

சுகாதாரம்தொகு

புத்ராஜாயா மருத்துவமனை மற்றும் தேசிய கான்செர் மையம் ஆகியவை புத்ராஜாயாவில் உள்ள முக்கிய மருத்துவ மையங்கள் ஆகும். புத்ராஜாயா மருத்துவமனை 2005-ஆம் ஆண்டு செயல் பட தொடங்கியது. தேசிய கான்செர் மையம் 2-ஆம் திகதி செப்டம்பர் மாதம் 2013யில் செயல் பட தொடங்கியது.[4]

அரசாங்க கட்டிடங்கள்தொகு

• பெர்டான புத்ரா - பிரதம மந்திரி அலுவலகம்

• செரி பெர்டான - பிரதம மந்திரியின் அதிகாரபுர இல்லம்

• செரி சத்ரிய - துணை பிரதமரின் அதிகாரபுர இல்லம்

• புத்ராஜாயா உயர் நீதிமன்றம்

• மேலவாதி அரண்மனை

• டருள் எஷசன் அரண்மனை

• புத்ராஜாயா அனைத்துலக கலந்துரையாடல் மையம்

• புத்ராஜாயா மசூதி

புத்ராஜாயாவில் செயல்படும் அமைச்சுக்கள்தொகு

• மலேசிய நிதி அமைச்சு

• மலேசிய வெளியுறவு அமைச்சு

மலேசிய சுகாதார அமைச்சு

மலேசிய கல்வி அமைச்சு

• மலேசிய உள்துறை அமைச்சு

• மலேசிய பாதுகாப்பு அமைச்சு

• மலேசிய வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு

• மலேசிய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சு

• மலேசிய போக்குவரத்து அமைச்சு

• மலேசிய தொலைதொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு

• மலேசிய மனிதவள அமைச்சு

• மலேசிய விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சு

• மலேசிய இளைஞர் மாற்றும் விளையாட்டு அமைச்சு

• மலேசிய தொழில்முனைவர் மேம்பாட்டு அமைச்சு

• மலேசிய நீர், நிலம் மற்றும் இயற்கைவள அமைச்சு

• மலேசிய பெண்கள், குடும்பம் மற்றும் சமூக அமைச்சு

• கூட்டரசு பிரதேச அமைச்சு

• மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு அமைச்சு

• மலேசிய பொருளாதார விவகார அமைச்சு

மேலும் கவனிக்கதொகு

பேர்பாடணன் புத்ராஜாயா வாரியம்

வெளி இணைப்புகள்தொகு

  1. "The Story of Prang Besar Estate". பார்த்த நாள் 3 June 2019.
  2. "DARI PRANG BESAR KE PUTRAJAYA". மூல முகவரியிலிருந்து 4 ஏப்ரல் 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 June 2019.
  3. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."". பார்த்த நாள் 3 June 2019.
  4. "Latarbelakang". பார்த்த நாள் 3 June 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்ராஜாயா&oldid=3221809" இருந்து மீள்விக்கப்பட்டது