தாயக இயக்கம்

தாயக இயக்கம் (மலாய்:Gerakan Tanah Air; ஆங்கிலம்:Homeland Movement அல்லது Homeland Party) என்பது மலேசியாவில் மலாய் அரசியல் கட்சிகளின் கூட்டணியாகும். இந்தக் கூட்டணி ஆகஸ்டு 2022-இல், மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது அவர்களால் நிறுவப்பட்டது.[3][4]

தாயக இயக்கம்
Homeland Movement
Gerakan Tanah Air
راقن تانه ا
சுருக்கக்குறிGTA
நிறுவனர்மகாதீர் பின் முகமது
குறிக்கோளுரைமலேசியா புகழ்பெற்றது மரியாதைக்குரியது
(Malaysia, eminent and honourable)
தொடக்கம்4 ஆகஸ்டு 2022[1]
சட்ட அனுமதி-
கலைப்பு-
தலைமையகம்-
இளைஞர் அமைப்பு-
உறுப்பினர்  (2022)மலேசிய பூமிபுத்ரா பெர்காசா கட்சி (புத்ரா)
அகில மலேசிய இசுலாமிய முன்னணி (பெர்ஜாசா)
இந்திய முசுலிம் கூட்டணி கட்சி (இமான்)
கொள்கைமலாய் தேசியவாதம்
இசுலாமிய மக்களாட்சி
அரசியல் நிலைப்பாடுவலது சாரி
சமயம்இசுலாம்
மேலவை (மலேசியா)
0 / 70
நாடாளுமன்ற இடங்கள்
0 / 222
சட்டமன்றத் தொகுதிகள்
0 / 607
மாநில முதல்வர்கள்
0 / 13
தேர்தல் சின்னம்

கிளாந்தான் தவிர்த்து[2]

கிளாந்தான் மட்டும்[2]
இணையதளம்
tanahairku.my

2022- ஆம் ஆண்டில், இந்தக் கூட்டணியைத் தொடங்கும் போது, அடுத்த மலேசியப் பொதுத் தேர்தலில், தற்போதைய ஆளும் கூட்டணியான பாரிசான் நேசனலுக்கு எதிராகத் தாயக இயக்கம் போட்டியிடும் என்று மகாதீர் பின் முகமது அறிவித்திருந்தார்.[5]

6 செப்டம்பர் 2022 அன்று, இந்தக் கூட்டணியைப் பதிவு செய்ய மலேசிய சங்கங்களின் பதிவாளரிடம் (Registrar of Societies) விண்ணப்பம் செய்யப்பட்டது.[6]

2022 பொதுத் தேர்தலில் இந்தக் கூட்டணி எந்த ஒரு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியிலும் வெற்றிபெற முடியவில்லை.[7]

பொது

தொகு

4 ஆகஸ்டு 2022 அன்று, தாயக இயக்கத்தின் தலைவர் மகாதீர் முகமது, தாம் ஒரு கூட்டணியைத் தொடங்குவதாக அறிவித்தார். மலேசியாவில் உள்ள இனங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதன் மூலம் நாட்டை நிலையான பாதுகாப்புடன் வழிநடத்த இயலும் என்றும்; அதனால் இந்தக் கூட்டணி தொடங்கப்படுவதாகவும் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

23 செப்டம்பர் 2022 அன்று, தாயக இயக்கம், அதிகாரப்பூர்வ அரசியல் கூட்டணியாகப் பதிவு செய்யப்பட்டது.[8] 2 நவம்பர் 2022 அன்று, 2022 பொதுத் தேர்தலில் 121 நாடாளுமன்ற வேட்பாளர்களை அறிவித்தது.[9] இருப்பினும், தேர்தல் முடிவில் அனைத்து 121 நாடாளுமன்ற இடங்களில் தோல்வி கண்டது.

மலேசியாவில் தோன்றிய அரசியல் கட்சிகளின் காலவரிசை

தொகு
 
1946-ஆம் ஆண்டு தொடக்கம் மலேசியாவில் தோன்றிய அரசியல் கட்சிகளின் காலவரிசை

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Rafidah Mat Ruzki (August 4, 2022). "Dr Mahathir umum pelancaran Gerakan Tanah Air". BH Online. பார்க்கப்பட்ட நாள் 4 August 2022.
  2. 2.0 2.1 "Dr Mahathir says will defend Langkawi in GE15". 11 October 2022.
  3. "Dr M unveils Malay-only Gerakan Tanah Air coalition". Free Malaysia Today. பார்க்கப்பட்ட நாள் 5 August 2022.
  4. "Dr M announces new coalition of four parties, Gerakan Tanah Air". New Straits Times. பார்க்கப்பட்ட நாள் 5 August 2022.
  5. "Gerakan Tanah Air gabungan parti politik Melayu menentang UMNO dalam PRU15 - Tun Mahathir". Astro Awani. பார்க்கப்பட்ட நாள் 5 August 2022.
  6. Bernama (September 6, 2022). "Gerakan Tanah Air serah dokumen pendaftaran kepada RoS". MalaysiaNow. பார்க்கப்பட்ட நாள் 6 September 2022.
  7. "Dr Mahathir saddened by Pejuang rout in GE15, hopes winning party gets to form new govt". Malay Mail (in ஆங்கிலம்). 2022-11-23. பார்க்கப்பட்ட நாள் 2022-11-27.
  8. Zulkifli, Adie (2022-09-23). "Gerakan Tanah Air gets preliminary RoS approval". New Straits Times. Archived from the original on 15 January 2023. பார்க்கப்பட்ட நாள் 15 January 2023.
  9. "PRU-15: GTA bertanding 121 parlimen [METROTV]". 2 November 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாயக_இயக்கம்&oldid=3990895" இலிருந்து மீள்விக்கப்பட்டது