மலேசியப் பொதுத் தேர்தல், 2022

மலேசியாவின் 2022 பொதுத் தேர்தல்

மலேசியப் பொதுத் தேர்தல், 2022 (2022 Malaysian General Election; மலாய்: Pilihan raya umum Malaysia 2022;) என்பது 2022 நவம்பர் 19-ஆம் தேதி மலேசியாவில் நடைபெற்ற 15-ஆவது பொது தேர்தலைக் குறிப்பிடுவதாகும்.[1]

மலேசியப் பொதுத் தேர்தல், 2022

← 2018 நவம்பர் 19, 2022 (2022-11-19)
திசம்பர் 7, 2022 (2022-12-07) (P017 பாடாங் செராய்)
நவம்பர் 21, 2022 (2022-11-21) (11 வாக்கு மையங்கள் P220 பாராம்)
அடுத்து →
← மக்களவை
14-ஆவது மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

222 இடங்கள் மக்களவை
112 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது
பதிவு செய்தோர்21,173,638 ( 41.72%)
வாக்களித்தோர்15,517,490 (73.29%)
Declared
99.1%
as of 07:51, 20 நவம்பர் 2022 மலேசிய நேரம்
  First party Second party Third party
 
தலைவர் அன்வார் இப்ராகிம் முகிதீன் யாசின் இஸ்மாயில் சப்ரி
கட்சி கெடிலான் பெர்சத்து அம்னோ
கூட்டணி பாக்காத்தான்

பெரிக்காத்தான்

பாரிசான்

தலைவரான ஆண்டு 17 நவம்பர் 2018 23 பிப்ரவரி 2020 14 ஏப்ரல் 2022
தலைவரின் தொகுதி தம்புன் பாகோ பெரா
முந்தைய தேர்தல் 82 இடங்கள்[nb 3] 73 இடங்கள்[nb 4] 30 இடங்கள்[nb 1]
வென்ற தொகுதிகள் 82 73 30

  Fourth party Fifth party Sixth party
 
தலைவர் அபாங் ஜொகாரி ஒப்பேங் அஜி நூர் சாபி அப்டால்
கட்சி பிபிபி சபா பெர்சத்து வாரிசான்
கூட்டணி ஜிபிஎஸ்

ஐக்கிய சபா

 –
தலைவரான ஆண்டு 13 சனவரி 2017 11 மார்ச் 2022 17 அக்டோபர் 2016
தலைவரின் தொகுதி போட்டியிடவில்லை போட்டியிடவில்லை செம்பூர்ணா
முந்தைய தேர்தல் 22 இடங்கள்,[nb 5] 6 இடங்கள்[nb 6] 3 இடங்கள்
வென்ற தொகுதிகள் 22 6 3

  Seventh party Eighth party Ninth party
 
தலைவர் லாரி சுங்
சுரைதா கமாருதீன்
மகாதீர் பின் முகமது வோங் சூன் கோ
கட்சி பங்சா மலேசியா பெஜுவாங் பி.எஸ்.பி
கூட்டணி  – GTA

கட்சிகள்
பெர்காசா

தலைவரான ஆண்டு 7 அக்டோபர் 2022 12 August 2020 2015
தலைவரின் தொகுதி அம்பாங் லங்காவி போட்டியிடவில்லை
முந்தைய தேர்தல் 1 இடம் 0 0
வென்ற தொகுதிகள் 1 0


முந்தைய பிரதமர்

இஸ்மாயில் சப்ரி
பாரிசான் நேசனல்

பிரதமர் -தெரிவு

அன்வார் இப்ராகிம்
பாக்காத்தான் ஹரப்பான்

மலேசிய நாடாளுமன்றத்தின் (Parliament of Malaysia) மக்களவையின் (Dewan Rakyat) அனைத்து 222 தொகுதிகளிலும் இந்தத் தேர்தல் நடைபெற திட்டமிடப்பட்டது.[2]

பொது தொகு

மலேசியாவில் பொதுத் தேர்தலின் போது மாநிலச் சட்டமன்றங்களின் தேர்தலும் சேர்ந்து நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை சில மாநிலங்களில் மாநிலச் சட்டமன்றங்களின் தேர்தல் நடத்தப்பட மாட்டா.

பாக்காத்தான் ஹரப்பான்; பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கத்தின் கீழ் உள்ள மாநிலங்கள், அவற்றின் முழு பதவிக் காலத்தை முடிக்க விரும்புவதாகக் கூறியுள்ளன.[3]

2022 அக்டோபர் 19-ஆம் தேதிக்குள், பாக்காத்தான் ஹரப்பான் தலைமையிலான பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களும்; பெரிக்காத்தான் நேசனல் தலைமையிலான கெடா, கிளாந்தான், திராங்கானு மாநிலங்களும்; தங்கள் மாநிலச் சட்டமன்றங்களைக் கலைக்கப் போவது இல்லை என்று உறுதி செய்துள்ளன.[4]

கட்சித் தாவல்கள் தொகு

2020-ஆம் ஆண்டுக்கும்; 2022-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்டக் காலத்தில், மலேசியாவில் பற்பல அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டன. அவற்றின் காரணமாக, தேசிய அளவில் முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருந்தன. எந்த நேரத்திலும் பொதுத் தேர்தல் நடைபெறலாம் எனும் ஓர் ஆருடம் நீடித்து வந்தது.

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி விட்டுக் கட்சி தாவியதாலும்; தாங்கள் சார்ந்த கட்சிகளின் கூட்டணிகளை மாற்றிக் கொண்டதாலும்; 2020-ஆம் ஆண்டுக்கும்; 2022-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்டக் காலத்தில், மலேசிய அரசியலில் ஓர் உறுதித் தன்மை இல்லாமல் இருந்தது.

அதே வேளையில் கோவிட்-19 தொற்று நோய் நெருக்கடிகளும் இடர்பாடுகளும் இணைந்து கொண்டன.

இக்கட்டான நிலைமை தொகு

2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இரு பிரதமர்கள் பதவி ஏற்றனர். இரு கூட்டணி அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன. இருப்பினும் இரண்டு அரசாங்கங்களும் எதிர்பாராத சரிவு நிலைகளைக் கண்டன; அந்த இரண்டு அரசாங்கங்களின் பிரதமர்களும் தங்களின் பதவிகளைத் துறக்க வேண்டிய இக்கட்டான நிலைமையும் ஏற்பட்டது.[5]

மலேசியாவின் 14-ஆவது நாடாளுமன்றம் 2023 சூலை 16-ஆம் தேதி காலாவதியாக இருந்தது. இருப்பினும், தற்போதைய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் (Ismail Sabri Yaakob) வேண்டுகோளின்படி, யாங் டி பெர்துவான் அகோங், அல்-சுல்தான் அப்துல்லா (Al-Sultan Abdullah) அவர்கள், 2022 அக்டோபர் 10-ஆம் தேதி மலேசிய நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.[6]

வாக்கு அளிக்கும் வயது தொகு

மலேசியாவில் வாக்கு அளிக்கும் வயதை 21-இல் இருந்து 18-ஆக மாற்றுவதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தைத் தொடர்ந்து, 18-20 வயது உடையவர்கள் வாக்கு அளிக்கத் தகுதி பெறும் முதல் தேர்தல் இதுவாகும்.

அத்துடன் அந்த அரசியலமைப்புத் திருத்ததின் வழியாக, அனைத்து வாக்காளர்களும் தானாகப் பதிவு செய்யப்பட்டனர். அந்த வகையில் வாக்காளர்களில் ஏறஜ்க்குறைய 6 மில்லியன் பேர் அல்லது 31% பேர் அதிகரித்து உள்ளனர்.[7]

கருப்பையா முத்துசாமி இறப்பு தொகு

மலேசிய மக்களவைக்கு போட்டியிடப்பட்ட 222 இடங்களில் 220 இடங்களுக்கான முடிவுகள் 2022 நவம்பர் 20-ஆம் தேதி காலை நேரத்தில் அறிவிக்கப்பட்டன.

பொதுத் தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்பு பேராக், பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதிக்கான பாக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் கருப்பையா முத்துசாமி (Karupaiya Mutusami) மரணம் அடைந்தார். அதன் காரணமாக, அந்தத் தொகுதியின் தேர்தல் டிசம்பர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.[8]

சரவாக் பாராம் தொகுதி தொகு

பாராம் தொகுதியில் வெள்ளம் மற்றும் மோசமான வானிலை; வாக்குச் சாவடிகளுக்குத் தேர்தல் பணியாளர்கள் செல்ல முடியாத நிலை; இவற்றின் காரணங்களினால் அந்தத் தொகுதியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

அதற்குப் பதிலாக நவம்பர் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.[9]

மலேசியப் பொதுத் தேர்தல், 2022 முடிவுகள் தொகு

ed {{{2}}}
கட்சி வேட்பாளர்கள் வாக்குகள் இடங்கள்
வாக்குகள் % வெற்றி % +/–
பாக்காத்தான் ஹரப்பான் PH 213 5,801,327 37.46 83 37.3  
மக்கள் நீதிக் கட்சி PKR 99 0 0.00 31 14.1  
ஜனநாயக செயல் கட்சி DAP 55 0 0.00 40 18.2  
அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி) AMANAH 54 0 0.00 8 3.6  
ஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்பு UPKO 5 0 0.00 2 0.9  
மலேசிய ஐக்கிய மக்களாட்சி கூட்டணி MUDA 6 74,392 0.48 1 0.5 புதிது
பெரிக்காத்தான் நேசனல் PN 170 4,700,819 30.35 73 33.2  
மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி (சபா தவிர்த்து) BERSATU 86 0 0.00 28 12.7  
மலேசிய இஸ்லாமிய கட்சி PAS 62 74763 0.00 44 20.0  
மலேசிய மக்கள் இயக்கக் கட்சி GERAKAN 20 0 0.00 0 0  
இணைக்கப் படாத நேரடி வேட்பாளர்கள் PN 2 ? 0.00 1 0 புதிது
பாரிசான் நேசனல் BN 178 3,462,231 22.36 30 13.6  
அம்னோ UMNO 117 0 0.00 26 11.8  
மலேசிய இந்திய காங்கிரசு MIC 9 0 0.00 1 0.5  
மலேசிய சீனர் சங்கம் MCA 44 0 0.00 2 0.9  
ஐக்கிய சபா மக்கள் கட்சி PBRS 2 0 0.00 1 0.5  
மலேசிய அன்புக் கட்சி PCM 1 0 0.00 0 0  
மலேசியா மக்கள் சக்தி கட்சி MMSP 1 0 0.00 0 0 புதிது
அகில மலேசிய இந்தியர் முன்னேற்ற முன்னனி IPF 1 0 0.00 0 0 புதிது
மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸ் KIMMA 1 0 0.00 0 0 புதிது
இணைக்கப் படாத நேரடி வேட்பாளர்கள் BN 2 0 0.00 1 0.5  
சரவாக் கட்சிகள் கூட்டணி GPS 31 610,812 3.94 22 10.0  
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி PBB 14 0 0.00 14 6.4  
சரவாக் மக்கள் கட்சி PRS 6 0 0.00 5 2.3  
சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி PDP 4 0 0.00 1 0.5  
சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி SUPP 7 0 0.00 2 0.9  
சபா மக்கள் கூட்டணி GRS 13 202,376 1.31 6 2.7  
மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி BERSATU Sabah 6 0 0.00 4 1.8  
ஐக்கிய சபா கட்சி PBS 4 0 0.00 1 0.5  
தாயகம் ஒற்றுமை கட்சி STAR 2 0 0.00 1 0.5  
சபா முற்போக்கு கட்சி SAPP 1 0 0.00 0 0  
சபா பாரம்பரிய கட்சி WARISAN 51 281,732 1.82 3 1.4  
மலேசிய தேசிய கட்சி PBM 5 9159 0.00 1 0.5  
சமூக மக்களாட்சி நல்லிணக்கக் கட்சி KDM 7 0 0.00 1 0.5 புதிது
தாயக இயக்கம் GTA 125 108,654 0.70 0 0  
உள்நாட்டு போராளிகள் கட்சி PEJUANG 68 0 0.00 0 0 புதிது
அனைத்து மலேசிய இசுலாமிய முன்னணி BERJASA 9 0 0.00 0 0  
மலேசிய வலிமைமிகு பூமிபுத்ரா கட்சி PUTRA 31 0 0.00 0 0 புதிது
இந்திய முஸ்லிம் கூட்டணி கட்சி IMAN 4 0 0.00 0 0 புதிது
காகாசான் பங்சா GB 13 0 0.00 0 0 புதிது
PSM-PRM கூட்டணி 17 0 0.00 0 0  
மலேசிய சமூகக் கட்சி PSM 1 0 0.00 0 0  
மலேசிய மக்கள் கட்சி PRM 16 0 0.00 0 0  
சரவாக் ஐக்கிய மக்கள் கூட்டணி PERKASA 14 62,943 0.41 0 0  
ஐக்கிய சரவாக் கட்சி PSB 7 0 0.00 0 0 புதிது
சரவாக் பூர்வீக மக்கள் கட்சி PBDS 3 0 0.00 0 0  
இருவாட்சி நிலக் கட்சி PBK 4 0 0.00 0 0  
சபா மக்கள் ஒற்றுமைக் கட்சி PPRS 1 0 0.00 0 0  
மக்கள் முதல் கட்சி PUR 1 0 0.00 0 0  
சரவாக் மக்கள் விழிப்புணர்வு கட்சி SEDAR 1 0 0.00 0 0 புதிது
சுயேட்சைகள் IND 107 109,459 0.71 2 0.9  
செல்லுபடியாகும் வாக்குகள் 0
செல்லாத வாக்குகள் 0
மொத்த வாக்குகள் (வாக்காளர் எண்ணிக்கை: 0.00%) 15,487,338 100.00 222 100.00 TBA
வாக்கு அளிக்காதவர் 0
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 21,173,638
சாதாரண வாக்காளர்கள் 20,905,366
காலை நேரத்து வாக்காளர்கள் 265,531
அஞ்சல் வாக்காளர்கள் 365,686
வாக்களிக்கும் வயது 18-க்கும் மேல் 21,173,638
மலேசியாவின் மக்கள்தொகை 32,258,900

சான்று: Election Commission of Malaysia (SPR)[10]

நாடாளுமன்ற இடங்கள்
பாக்காத்தான் ஹராப்பான்
36.9%
பெரிக்காத்தான் நேசனல்
32.9%
பாரிசான் நேசனல்
13.5%
சரவாக் ஐக்கிய மக்கள் கூட்டணி
9.9%
சபா மக்கள் ஒற்றுமைக் கட்சி
2.7%
வாரிசான்
1.4%
தாயக இயக்கம்
0%
சுயேட்சைகள்
1.8%

தேர்தல் பின்விளைவுகள் தொகு

தொங்கு நாடாளுமன்றம் தொகு

இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு நாடாளுமன்றம் உருவானது. மலேசியாவின் 1957-ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகு, இதுவே இத்தகைய முடிவைப் பெற்ற முதல் பொதுத் தேர்தல் ஆகும்.

தீபகற்ப மலேசியாவின் வடமேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி அமோகமான வெற்றியைப் பெற்றது. பெர்லிஸ், கிளாந்தான் மற்றும் திராங்கானு மாநிலங்களில் உள்ள அனைத்து இடங்களிலும்; கெடா மாநிலத்தில் ஒரு தொகுதியைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி வெற்றி பெற்றது.

2018-ஆம் ஆண்டில், பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணி, மக்களவையில் பன்முக இடங்களைக் கொண்ட ஒரு கூட்டணியாக விளங்கியது. இருப்பினும் இந்த 2022-ஆம் ஆண்டுத் தேர்தலில், கெடா மாநிலத்தில் அதற்கு மிகப் பெரிய இழப்புகள் ஏற்பட்டன.

பிரபலங்கள் தோல்வி தொகு

வரலாற்று ரீதியாக ஆதிக்கம் செலுத்தி வந்த பாரிசான் நேசனல் தன்னுடைய பெரும்பாலான இடங்களைப் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியிடம் இழந்து மூன்றாவது நிலைக்குத் தள்ளப் பட்டது. பல பிரபலமான நாடாளுமன்ற உறுப்பினர்களும், இந்த 2022-ஆம் பொதுத் தேர்தலில், தங்கள் பதவிகளை இழந்து உள்ளனர்.

லங்காவியில் முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது வைப்புத் தொகையை இழந்தார். குவா மூசாங் தொகுதியில் முன்னாள் நிதியமைச்சர் துங்கு ரசாலி அம்சா தோல்வி அடைந்தார்; கோம்பாக் தொகுதியில் மலேசிய வர்த்தக அமைச்சரும் சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசாருமான அஸ்மின் அலி தோல்வி அடைந்தார்; அம்பாங் தொகுதியில் முன்னாள் வீட்டு வசதி அமைச்சர் சுரைடா கமருதீன் தோல்வி அடைந்தார்.

கோலா சிலாங்கூர் தொகுதியில் மலேசிய நிதியமைச்சர் துங்கு சப்ருல் அசீஸ் தோல்வி அடைந்தார். சுங்கை பூலோவில் மலேசியச் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன், பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் வேட்பாளர் இரமணனிடம் தோல்வி அடைந்தார்.

மலேசிய அரசியலமைப்பு தொகு

மலேசிய அரசியலமைப்பின்படி, மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், நாட்டின் பொதுத் தேர்தல் 60 நாட்களுக்குள் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் 2022 டிசம்பர் 9-ஆம் தேதிதான் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய கடைசி நாளும் ஆகும்.[6]

பாரம்பரியமாக, சரவாக் மாநிலத்தைத் தவிர, மற்ற அனைத்து மாநிலங்களிலும், மாநிலச் சட்டமன்றங்களுக்கான தேர்தல்களும்; பொதுத் தேர்தலின் போதே ஒரே நேரத்தில் நடத்தப் படுவது வழக்கம். தேர்தல் செலவுகளைக் கட்டுப் படுத்துவதே அதற்கான காரணம் ஆகும்.

இருப்பினும், மலேசியாவில் உள்ள மாநிலங்கள்; தனித்த நிலையில், தங்களின் சுய விருப்பத்தின் பேரில், மாநிலச் சட்டமன்றங்களைக் கலைப்பதற்கும்; மாநிலத் தேர்தல்களை நடத்துவதற்கும் மலேசிய அரசியலமைப்பு வழிவகை செய்கிறது.

அரசியல் நெருக்கடிகள் தொகு

இன்றையச் சூழலில், சபா, மலாக்கா, ஜொகூர் ஆகிய மாநிலங்கள், அந்த மாநிலங்களில் உருவான அரசியல் நெருக்கடிகளின் விளைவாக, 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே சட்டமன்றத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்தி விட்டன.

அதனால் அவை இந்த 15-ஆவது பொதுத் தேர்தலில் மீண்டும் சட்டமன்றத் தேர்தல்களை நடத்தப் போவது இல்லை.

புகாயா சட்டமன்றத் தொகுதி தொகு

மேலும், பாக்காத்தான் ஹரப்பான் (Pakatan Harapan); பெரிக்காத்தான் நேசனல் (Perikatan Nasional) கூட்டணிக் கட்சிகளின் அரசாங்கத்தின் கீழ் உள்ள மற்ற சில மாநிலங்கள், தங்களின் முழுப் பதவிக் காலத்தையும் முடிக்க விரும்புவதாகக் கருத்துகள் தெரிவித்துள்ளன. அதுவரையில் சட்டமன்றத் தேர்தல்களை நடத்தப் போவது இல்லை என அறிவித்து உள்ளன.[11]

பகாங், பேராக் மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநிலங்கள் மட்டும்; 2022 மலேசியப் பொதுத் தேர்தலுடன் தங்களின் மாநிலச் சட்டமன்றங்களுக்கான தேர்தலையும் நடத்த உள்ளன. சபா மாநிலத்தின் புகாயா சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலும்; 2022 மலேசியப் பொதுத் தேர்தலுடன் இணைந்து நடத்தப்பட்டது.[12]

முந்தைய தேர்தல் தொகு

மலேசியாவில் முதன்முறையாக 1955-ஆம் ஆண்டில் நேரடித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் 2018 பொதுத் தேர்தலில், முதல்முறையாக அரசாங்கத்தில் வரலாறு காணாத பெரிய ஒரு மாற்றம் ஏற்பட்டது.

அந்தத் தேர்தலில் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணி, வலதுசாரி பாரிசான் நேசனல் கூட்டணிக்கு எதிராகப் போட்டியிட்டு மக்களவையில் 113 இடங்களை வென்றது. (கூடுதல் பெரும்பான்மையாக இரண்டு இடங்கள் கிடைத்தன).

கடந்த 63 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த பாரிசான் நேசனல் கூட்டணிக்கு 79 இடங்கள் கிடைத்தன. 2018 பொதுத் தேர்தலுக்கு முன்னர், பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணி, ஓர் இடதுசாரி கூட்டணியாக இருந்தது. அந்தக் கூட்டணியில் நான்கு கட்சிகள் இருந்தன.

சபா பாரம்பரியக் கட்சி தொகு

சபா மாநிலத்தின் சபா பாரம்பரியக் கட்சியின் (Sabah Heritage Party) ஆதரவுடன் மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றியது. அந்தத் தேர்தலில் ஜொகூர், மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் முதன்முறையாக பாக்காத்தான் ஹரப்பான் பெரும்பான்மையையும் பெற்றது. இருப்பினும் கெடா, பேராக் மற்றும் சபா மாநிலங்களில் தொங்கு சட்டமன்றங்கள் பதிவு செய்யப்பட்டன.

குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் தொகு

2019 சூலை மாதம், மலேசிய அரசியலமைப்புச் சட்டம் 2019-இல் (Constitution (Amendment) Act 2019), திருத்தம் செய்யப்பட்டது. வாக்களிக்கும் வயதை 18 ஆகக் குறைத்து, வாக்காளர்களை தானாகப் பதிவு செய்ய (Automatic Voter Registration) அனுமதிக்கும் விதிகள் அடங்கிய சட்டம், மலேசிய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.[13][14]

தேர்தல் ஆணையம் தொகு

2018-ஆம் ஆண்டில், மலேசிய நாடு முழுமைக்கும் தேர்தல் எல்லைகளை மறுவரையறை செய்யும் சட்டபூர்வமான அதிகாரத் தன்மை தேர்தல் ஆணையத்தின் (Election Commission of Malaysia) மதிப்பாய்வில் இருந்தது. இருப்பினும் தேர்தல் ஆணையம் சுயேட்சையாக இயங்காமல் பிரதமர் துறையின் அதிகார வரம்பிற்குள் இருந்தது.[15]

2018-ஆம் ஆண்டு தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்னர்தான் தேர்தல் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. அந்தத் தேர்தல் எல்லைகளின் மறுவரையறை, தொகுதிகளுக்கு இடையே மிகப்பெரிய தவறான பகிர்ந்தளிப்புகளை (Enormous Malapportionment) கொண்டு இருந்தது.

எடுத்துக்காட்டாக, சிலாங்கூர் மாநிலத்தில், சபாக் பெர்னாம் (Sabak Bernam) தொகுதியில் தோராயமாக 40,000 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் பாங்கி சட்டமன்றத் தொகுதியில் திடீரென 180,000 வாக்காளர்கள் உள்ளதாகக் காட்டப்பட்டது.

கோவிட்-19 பெருந்தொற்று தொகு

இருப்பினும், எந்த ஒரு மறுபகிர்வுக்கும் மலேசிய அரசியலமைப்பின்படி திருத்தங்கள் தேவை; அதே வேளையில் அந்தத் திருத்ததிற்கு மக்களவையின் (Dewan Rakyat) மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையும் தேவை.[16]

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, கோவிட்-19 தொற்று நோய், மலேசியாவில் பெரும் நெருக்கடிகளையும் இடர்பாடுகளையும் ஏற்படுத்தி ஒரு பெரிய பொதுநல தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இதனால் பற்பல சமூகத் தாக்கங்கள் ஏற்பட்டன. மலேசியாவின் பொருளாதாரமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.[17][18]

2020-2022 அரசியல் நெருக்கடி தொகு

2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மலேசியாவில் ஓர் அரசியல் நெருக்கடி தொடங்கியது; இரண்டு பிரதமர்கள் பதவி துறப்புச் செய்ய வழிவகுத்தது; மற்றும் அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளில் மலேசிய நாடாளுமன்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கும் வழிவகுத்தது.[18]

2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், மலேசிய ஐக்கிய பூர்வீகக் கட்சியின் (Malaysian United Indigenous Party) 32 உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆளும் பாக்காத்தான் ஹரப்பான் தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகினர்; அப்போதைய் எதிர்க்கட்சியான பாரிசான் நேசனல் கூட்டணியுடன் கூட்டு சேர்ந்தனர். அதனால் மக்களவையில் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது.

அதன் பின்னர் பிரதமர் மகாதீர் பின் முகமது தன் பதவியைத் துறப்பு செய்தார். அதனால் நாட்டின் நிர்வாகத்தில் ஓர் அதிகார வெற்றிடம் உருவானது.[19]

முகிதீன் யாசின் தொகு

2022 மார்ச் 1-ஆம் தேதி, முகிதீன் யாசின் பிரதமராக நியமிக்கப் பட்டார். அதன் பின்னர் மலேசிய ஐக்கிய பூர்வீகக் கட்சி; மற்றும் பாரிசான் நேசனல் கூட்டணி; ஆகியவற்றின் தலைமையில் ஒரு சிறுபான்மை அரசாங்கம் அமைக்கப்பட்டது. இதற்குப் பிறகும் மலேசிய நாட்டின் அரசியலில் நிலையற்றத் தன்மை தொடர்ந்தது. அத்துடன் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தால், நாட்டின் திடமான அரசியல் பண்பு நலன்கள் மேலும் மோசம் அடைந்தன.[19]

2021-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நெருக்கடிகள் மேலும் அதிகரித்தன. இவற்றின் விளைவாக முகிதீன் யாசின் நாடாளுமன்ற ஆதரவை இழந்தார். மலேசியாவின் இக்கட்டான சூழலில் அவரும் தன் பிரதமர் பதவியைத் துறப்புச் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இஸ்மாயில் சப்ரி யாகோப் தொகு

அவருக்குப் பதிலாக இஸ்மாயில் சப்ரி யாகோப், 20 ஆகஸ்ட் 2021-இல் பிரதமராக நியமிக்கப்பட்டார்.[20] இந்த அரசியல் நெருக்கடிகளினால், உடனடியாகப் பொதுத் தேர்தலை நடத்தும்படி பல்வேறு தரப்பினரிடம் இருந்து நெருக்குதல்கள் தொடுக்கப்பட்டன. அத்துடன் பொதுத் தேர்தல் தொடர்பாகப் பல்வேறு ஊகங்களும் வலம் வந்தன.[21][22][23]

2022 சூன் மாத வாக்கில் இஸ்மாயில் சப்ரி யாகோப்பிற்கு அவர் சார்ந்த கட்சியான அம்னோ, விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடர்ச்சியான அழுத்தங்களைக் கொடுத்து வந்தது.[23]

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றம் கலைக்கப் படுவதை தாமதப் படுத்தப் போவது இல்லை என்று இஸ்மாயில் சப்ரி யாகோப் மலேசிய நாடாளுமன்றத்திலேயே அறிவித்தார். பின்னர் 2022 அக்டோபர் 10-ஆம் தேதி மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப் பட்டது.[6]

நாடாளுமன்ற இருக்கைகள் தொகு

பாரிசான் நேசனல் தலைமையிலான எதிர்க்கட்சி (100) பாக்காத்தான் ஹரப்பான் தலைமையிலான கூட்டணி அரசு (122)*
79 18 3 1 8 113
பாரிசான் நேசனல் GS O WR பாக்காத்தான் ஹரப்பான்
மலேசிய நாடாளுமன்றம் (மக்களவை), 16 சூலை 2018 (222 தொகுதிகள்)
பாரிசான் நேசனல் தலைமையிலான கூட்டணி அரசு (115)* பாக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான எதிர்க்கட்சி (104)
41 39 19 8 9 7 7 90
பாரிசான் நேசனல் பெரிக்காத்தான் நேசனல் GPS GRS வேறு WR பாக்காத்தான் ஹராப்பான்
மலேசிய நாடாளுமன்றம் (மக்களவை), 10 அக்டோபர் 2022 (219 இடங்கள் - 3 காலி)

மலேசியத் தேர்தல் முறை தொகு

மலேசியாவில் தேர்தல்கள் தேசிய அளவிலும்; மாநில அளவிலும் நடத்தப் படுகின்றன. மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையான டேவான் ராக்யாட்டிற்கான (Dewan Rakyat) உறுப்பினர்களைத் தேசிய அளவிலான தேர்தல்கள் தேர்ந்து எடுக்கின்றன.

அதே வேளையில் மலேசியாவின் 13 மாநிலங்களில் நடத்தப்படும் மாநிலத் தேர்தல்கள் அந்தந்த மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்து எடுக்கின்றன.

வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமை தொகு

மலேசியா வெஸ்ட்மின்ஸ்டர் ஆட்சி (Westminster System) முறையைப் பின்பற்றுகிறது. மலேசியாவின் மத்திய அரசாங்க அளவில், அரசாங்கத்தின் தலைவர் என்பவர், பிரதமர் (Prime Minister of Malaysia) என்று அழைக்கப் படுகிறார். மாநில அளவில் அரசாங்கத்தின் தலைவர், முதலமைச்சர் (Chief Minister) என்று அழைக்கப் படுகிறார்.

பொதுவாக மாநில முதலமைச்சரை மந்திரி பெசார் (Menteri Besar) என்று அழைக்கிறார்கள். இவர் மாநிலச் சட்டமன்றத்தில் (State Legislative Assemblies) பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றவராக இருப்பார். இவர் பொதுவாக மாநிலச் சட்டமன்றத்தில் பெரும்பான்மை இடங்களைக் கொண்ட கட்சி அல்லது கூட்டணியின் தலைவராகவும் இருப்பார்.

டேவான் ராக்யாட் தொகு

டேவான் ராக்யாட் (மலாய் மொழி|மலாய்]]: Dewan Rakyat; ஆங்கிலம்: House of Representatives) என்பது மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையைக் (கீழவை) குறிக்கும் மலாய்ச் சொல் ஆகும். டேவான் என்றால் அவை. ராக்யாட் என்றால் மக்கள். மலேசியாவின் அனைத்துச் சட்ட மசோதக்களும் இங்குதான் விவாதிக்கப்பட்டு, இயற்றப் படுகின்றன.

அவ்வாறு இயற்றப்படும் சட்ட மசோதாக்கள், மக்களவையில் இருந்து நாடாளுமன்ற மேலவையின் ஒப்புதலுக்குக் கொண்டு செல்லப் படுகின்றன. அதன் பின்னர், மலேசிய பேரரசர் ஒப்புதல் அளித்த பின்னர் அந்த மசோதாக்கள் சட்டங்கள் ஆகின்றன. மலேசியாவின் நாடாளுமன்ற மேலவை டேவான் நெகாரா என்று அழைக்கப் படுகிறது.

டேவான் ராக்யாட்டின் உறுப்பினர்களைப் பொதுவாக, மலேசியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றே அழைக்கின்றனர். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் நாடாளுமன்ற மாளிகை உள்ளது. அங்குதான் நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

குறிப்புகள் தொகு

 1. Total seats and vote share of the parties currently in Barisan Nasional (UMNO, MCA, MIC and PBRS). The total seats and vote share of Barisan Nasional as it was in the last election was 79 seats and 33.77%, respectively.
 2. MUDA is yet to be admitted as an official component party of Pakatan Harapan. However, Anwar Ibrahim has stated that Pakatan Harapan will be forming an electoral pact with MUDA, as well as the Socialist Party of Malaysia (PSM).
 3. Excludes Malaysian United Indigenous Party, which was part of the coalition in the 2018 Malaysian general election but subsequently left and later joined Perikatan Nasional in 2020. The original number of seats and vote share held by Pakatan Harapan as it was in 2018 is 113 seats and 45.68%, respectively.
 4. New coalition formed in 2020. These numbers are the total seats and vote share of BERSATU, PAS, GERAKAN, STAR and SAPP in the last election. The parties were previously part of Pakatan Harapan, Gagasan Sejahtera and Barisan Nasional.
 5. New coalition formed in 2018. These numbers are the total seats and vote share of PBB, PRS, SUPP and PDP in the last election. All parties were previously part of Barisan Nasional.
 6. New coalition officially formed in 2022. These numbers are the total seats and vote share of PBS, STAR and SAPP in the last election. The parties were previously part of Barisan Nasional and United Sabah Alliance.
 7. Parti Sarawak Bersatu does not field candidates outside of Sarawak (31 seats) and therefore cannot obtain a majority in parliament.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

 1. Ahmad, Mohamad Rasdan (4 October 2022). "Sah PRU Tahun ini". Kosmo!. https://www.kosmo.com./2022/10/04/sah-pru-15-tahun-ini/. பார்த்த நாள்: 4 October 2022. [தொடர்பிழந்த இணைப்பு]
 2. "Dr M: July 2023 the best date for GE15". The Star. 16 June 2022. 18 July 2022 அன்று பார்க்கப்பட்டது.
 3. "No early elections for PAS-held states, says party vice-president". Free Malaysia Today. 6 June 2022. 6 ஜூன் 2022 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 June 2022 அன்று பார்க்கப்பட்டது.
 4. "GE15: Penang, Selangor and Negri not dissolving state assemblies this year, says Anwar". The Star (ஆங்கிலம்). 24 October 2022 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Proclamation - Summon the Parliament [P.U. (A) 139/2018]" (PDF). Attorney General's Chamber of Malaysia. 13 June 2018. 3 ஜனவரி 2020 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 23 அக்டோபர் 2022 அன்று பார்க்கப்பட்டது.
 6. 6.0 6.1 6.2 Reuters (2022-10-10). "Malaysia PM dissolves parliament" (in en). Reuters. https://www.reuters.com/world/asia-pacific/malaysia-pm-dissolves-parliament-2022-10-10/. 
 7. "Will young voters in Malaysia revive the career of a 97-year-old politician?" (in en). NPR.org. https://www.npr.org/2022/11/17/1137334860/will-young-voters-in-malaysia-revive-the-career-of-a-97-year-old-politician. 
 8. "GE15: Polling for Baram suspended due to bad weather" (in en). 19 November 2022. https://www.thestar.com.my/news/nation/2022/11/19/ge15-polling-for-baram-suspended-due-to-bad-weather. 
 9. "GE15: Polling for Baram suspended due to bad weather" (in en). 19 November 2022. https://www.thestar.com.my/news/nation/2022/11/19/ge15-polling-for-baram-suspended-due-to-bad-weather. 
 10. "Dashboard SPR". PILIHAN RAYA UMUM KE-15. Suruhanjaya Pilihan Raya Malaysia. 20 செப்டம்பர் 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 November 2022 அன்று பார்க்கப்பட்டது.
 11. "No early elections for PAS-held states, says party vice-president". Free Malaysia Today. 6 June 2022. 6 ஜூன் 2022 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 June 2022 அன்று பார்க்கப்பட்டது.
 12. "GE15: BN-led states to dissolve assemblies at same time as Parliament, says Zahid". The Star. 10 October 2022. 10 October 2022 அன்று பார்க்கப்பட்டது.
 13. Martin Carvalho; Hemananthani Sivanandam; Rahimy Rahim; Tarrence Tan (16 July 2019). "Dewan Rakyat passes Bill to amend Federal Constitution to lower voting age to 18". The Star. 16 July 2019 அன்று பார்க்கப்பட்டது.
 14. "Kenyataan media - Pendaftaran pengundi 18 tahun" (PDF). Election Commission of Malaysia. 7 June 2020. 13 June 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (PDF) எடுக்கப்பட்டது. 13 June 2020 அன்று பார்க்கப்பட்டது.
 15. "EC to review redelineation of electoral boundaries approved last year". Malay Mail (ஆங்கிலம்). 14 March 2019. 2019-09-20 அன்று பார்க்கப்பட்டது.
 16. "Next redelineation exercise only due in 2026, says Hanipa". The Star Online (ஆங்கிலம்). 2018-11-22. 2019-09-20 அன்று பார்க்கப்பட்டது.
 17. "Malaysia declares Covid state of emergency amid political turmoil". the Guardian (ஆங்கிலம்). 2021-01-12. 2022-10-11 அன்று பார்க்கப்பட்டது.
 18. 18.0 18.1 Chu, Mei Mei; Latiff, Rozanna; Lee, Liz (2021-08-16). "Malaysian PM Muhyiddin resigns as political crisis escalates" (in en). Reuters. https://www.reuters.com/world/asia-pacific/malaysian-pm-expected-resign-after-months-political-turmoil-2021-08-16/. 
 19. 19.0 19.1 "A timeline of events leading to Malaysian PM's resignation". AP NEWS (ஆங்கிலம்). 2021-08-16. 2022-10-11 அன்று பார்க்கப்பட்டது.
 20. "Malaysia appoints third prime minister in as many years". The Independent (ஆங்கிலம்). 2021-08-20. 2022-10-11 அன்று பார்க்கப்பட்டது.
 21. Teoh, Shannon (12 June 2020). "Malaysia PM Muhyiddin Yassin looks to snap polls to end battle with predecessor Mahathir" (in en-SG). The Straits Times. https://www.straitstimes.com/asia/se-asia/malaysia-pm-muhyiddin-yassin-looks-to-snap-polls-to-end-battle-with-predecessor. 
 22. Soo, Wern Jun (12 June 2020). "Report: Snap polls talk gains momentum in Malaysia" (in en-MY). Malay Mail. https://www.malaymail.com/news/malaysia/2020/06/12/report-snap-polls-talk-gains-momentum-in-malaysia/1874832. 
 23. 23.0 23.1 Shukry, Anisah (1 June 2022). "Malaysia PM Says Won't Delay Dissolving Parliament Once Ready". Bloomberg News. https://www.bloomberg.com/news/articles/2022-06-01/malaysia-pm-says-won-t-delay-dissolving-parliament-once-ready. 

வெளி இணைப்புகள் தொகு